சீனாவின் 'சைனோஃபாா்ம்' தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்.. 79% செயல்திறன் மிக்கதாம்!
ஜெனீவா: சீனாவின் 'சைனோஃபாா்ம்' தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா தொற்று சுமார் ஒன்றரை ஆண்டுகளை கடந்த பின்னரும் உலக நாடுகளை பாடாய் படுத்தி வருகிறது.
Recommended Video
கொரோனா முதல் அலையில் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகள் பல கடுமையான இன்னல்களை பெற்றது. தற்போது கொரோனா 2-வது அலையில் இந்தியா மீள முடியாத அளவுக்கு கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருகிறது.

ஆட்டிப்படைக்கும் கொரோனா
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 4 லட்சத்துக்கும் அதிகமான பாதிப்புகளும், 4 ஆயிரத்துக்கும் அதிகமான உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. தற்போது தினசரி பாதிப்பிலும், தினசரி உயிரிழப்பிலும் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. உலக நாடுகளை ஆட்டிப்படைக்கும் கொரோனாவை கட்டுப்படுவதற்கான ஒரே வழி தடுபூசிகள்தான்.

சீனா தடுப்பூசி
அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகின்றன. ஒரு நாடு எந்த தடுப்பூசிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாலும் உலக சுகாதார அமைப்பின் ஒப்புதல் பெற்றே பயன்படுத்தி வருகின்றன. அந்த வகையில் கொரோனா பரவலுக்கு மூல காரணமாக விளங்கிய சீனாவும் சைனோஃபாா்ம் என்ற தடுப்பூசியை தயாரித்தது.

உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்
ஆனால் இந்த தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் கிடைக்க தாமதமானதால் பல்வேறு நாடுகள் இதனை பயன்படுத்தவில்லை. இந்த நிலையில் சைனோஃபாா்ம் தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. கொரோனவை தடுப்பதில் இந்த தடுப்பூசி 79 சதவீதம் செயல்திறன் மிக்கது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

22 நாடுகள் பயன்படுத்துகின்றன
மற்ற தடுப்பூசிகளைப் போலவே இதுவும் 3 முதல் 4 வாரங்கள் இடைவெளியில் இரண்டு டோஸ்களாக செலுத்தப்பட வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. ஏற்கனவே 22 நாடுகள் சைனோஃபாா்ம் தடுப்பூசியைப் பயன்படுத்தி வருகின்றன. கொரோனாவை தடுப்பதில் சைனோஃபாா்ம் எந்த அளவுக்கு செயல் புரிகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications