உலகில் பெரிய ஸ்லம் நகரம்; ஆப்பிரிக்காவின் வெனிஸ்: அது பற்றி தெரியுமா உங்களுக்கு?
ஆப்பிரிக்கா: உலகத்திலேயே மிகப்பெரிய மிதக்கும் ஸ்லம் நகரம் லாகோஸ் கடற்கரையிலிருந்து வருகிறது. இங்கே வசிக்கும் மக்கள் கடல்நீருக்கு உள்ளாகவே வீடுகளைக் கட்டி வசித்து வருகின்றன.
பலருக்கும் சென்னை இருக்கும் ஸ்லம் பகுதியைப் பற்றி கேட்டால் தெரிந்திருக்கும். அதேபோல் மும்பை நகரத்தில் உள்ள தாராவி ஸ்லம் பகுதியைப் பற்றியும் கூட தெரிந்திருக்கும். ஆனால், உலகத்திலேயே நீரில் மிதந்துகொண்டிருக்கும் மிகப்பெரிய ஸ்லம் நகரம் பற்றி கேட்டால் பலருக்கும் தெரியாது. அது எங்கே உள்ளது? அங்கே நிலவும் சுகாதாரக்கேடுகள் மத்தியில் மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்? இதை ஆப்பிரிக்காவின் வெனிஸ் என்று சொல்கிறார்கள்.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் இருக்கும் லாகோஸ் கடற்கரையில்தான் மகோகோ மிதக்கும் நகரம். இது உலகின் மிகப்பெரிய கடல்நீரில் ஸ்லம் நகரமாகும். இங்கே உள்ள மக்கள் சட்டத்திற்குப் புறம்பாகக் குடியேறி இருப்பதாக அரசு தெரிவிக்கின்றது. கடற்கரையை ஒட்டி உள்ள இந்தப் பகுதியில் நிறையக் கழிவுநீர் கலந்துள்ளது. அதைத்தாண்டி இந்த நகரத்திற்குச் செல்லவேண்டும் என்றால் குறைந்தது 3 கிமீட்டர் குப்பைக் கூளத்தைக் கடந்து போகவேண்டும். அதற்காக உள்ள நீர்வழி பாதையில் படகுகளால் போக்குவரத்து நெரிசலே வரும் அளவுக்குப் படகுகள் ஒன்றை ஒன்று உரசிக் கொண்டு பயணிக்கின்றன.
அங்கே தேங்கி நிற்கும் மிகப்பெரிய உப்புநீரில் மக்கள் கம்புகளை நட்டு அதன் மீது குடிசைகளை அமைத்துள்ளனர். ஆகவே வீடுகள், கடைகள் அனைத்து நீரில் மிதக்கின்றன. பார்க்கவே பரிதாபமாக இருக்கும் இந்த இடத்தில் படகு போக்குவரத்து மூலமே மக்கள் தங்களின் அன்றாட சமையல் பொருட்களை வாங்கிக் கொண்டு உள்ளே செல்கின்றனர். இங்கே பெரும்பாலான மக்கள் மீனவர்கள். கடலில் மீன் பிடித்து வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இவர்களுக்குச் சுகாதாரமான இடத்தை அரசு ஏற்பாடு செய்து கொடுத்தாலும், இவர்கள் இங்கேயே வாழவே விரும்புகின்றனர். இங்கேயே பிள்ளைகள் படிக்கப் பள்ளிக்கூடம் ஒன்றும் செயல்பட்டு வருகின்றது. இங்கே உள்ள மக்கள் பெனின் குடியரசு மற்றும் படகரி ஆகிய பகுதிகளிலிருந்து குடியேறியுள்ளன, இங்கே சுமார் 2 லட்சத்து 50 மக்கள் வசிப்பதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. இதை ஆப்பிரிக்காவின் வெனிஸ் என்று அழைக்கிறார்கள். ஆனால், வெனிஸ் அளவுக்கு இது அழகான நகரம் அல்ல. பாதுகாப்பற்ற நகரம்.

மகோகோ என்ற பெயர் எப்படி வந்தது என்றால், இந்த உப்புநீரில் மாங்குரோவ் செடிகள் செழிப்பாக வளரக்கூடியவை. அதைக் கொண்டு இந்தப் பெயர் வந்திருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த 2021 இல் சட்டத்திற்குப் புறம்பாகக் குடியேறிய இவர்களின் வீட்டை அரசு இடித்து தள்ளியது. அதனால் 3 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். அதன்பின்னர் நிறைய தொண்டு நிறுவனங்கள் இம்மக்களுக்கு உதவ முன்வந்தனர். இந்த நகரத்தை மறு உருவாக்கம் செய்ய அரசு பல திட்டங்களைப் பின்னர் வகுத்தது. ஆனாலும், இந்த மக்கள் எந்தவிதமான வளர்ச்சியையும் விரும்பாமல் இங்கேயே இருந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த ஒரு இந்தியர் உள்ளே சென்றாலும் கூட அவரை இந்த மக்கள் வெள்ளைக்காரர் என்றே நினைக்கிறார்கள். இவர்களின் பார்வையில் ஆப்பிரிக்க மக்கள் இல்லாதவர் அனைவரும் வெள்ளையர்கள்தான். 19 ஆம் நூற்றாண்டு உருவான இந்த மிதக்கும் நகரம் பெரிய அளவில் மாற்றங்கள் அடையவில்லை. கழிமுக நீர் பகுதிகளில் காலங்காலமாக இந்த மக்கள் வாழ்கின்றனர். இங்கே உள்ள தரைப்பகுதியில் ஊற்று நீர் பொங்கி எழுவதால் நடக்கக்கூட முடிவதில்லை. கால்கள் புதைகுழி போல உள்ளே இழுக்கின்றன. அதனால் அந்த இடங்களில் பிளைவுட் போட்டு மக்கள் நடக்கின்றனர்.

பெயரளவில் இது ஸ்லம் பகுதியாக இருந்தாலும் ஆப்பிரிக்காவின் ஐந்தாவது பெரிய பொருளாதார நகரமாக லாகோஸ் விளங்கி வருகிறது. இங்கே உள்ள சிறுவர்கள் முதல் வயதான பெண்கள் வரை உழைப்பதில் தேனிக்கு இணையானவர்கள். நைஜீரியாவில் வாழும் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் சேரிகளில்தான் வசித்து வருகின்றன. இந்த நகரத்தை 2020 ஆம் ஆண்டு இந்நகரத்தை முன்னேற்ற டிஜிட்டல் மேப்பிங் செய்ய முயற்சிகள் செய்யப்பட்டன. 14 மில்லியன் மக்கள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் லாகோஸ் மாநில அரசு 20 மில்லியனுக்கும் அதிகமாக இருப்பதாகக் கூறுகிறது. மகோகோ கழிமுகத்தில் உள்ள மக்களுக்கு இங்கே வசிப்பது குறித்து எந்தப் புகாரும் இல்லை.












Click it and Unblock the Notifications