இதயம் கொடுத்து வாழ்வித்தவனுக்காக நெஞ்சில் ”இதய வடிவ டாட்டூ” குத்திக் கொண்ட இளைஞர்!
நியூயார்க்: அமெரிக்காவில் தனது உறுப்பினை கொடுத்து காப்பற்றியவரின் மாண்பை போற்றியுள்ளார் தானம் பெற்ற இளைஞர். இச்சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உறுப்பு தானத்தினை சரியாக உணர்ந்த அந்த இளைஞர் தனக்கு இதயம் கிடைக்க காரணமான குடும்பத்தாருக்கு வித்தியாசமான முறையில் நன்றி செலுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் ஆர்லாண்டோ நகரத்தைச் சேர்ந்த அந்த இளைஞருக்கு 12 வயதானபோது அவரது இதயத்தின் அளவு இயல்பை விட பெரியதாக இருப்பதாக கண்டறியப்பட்டது.

ரத்தம் செலுத்த இயலாத இதயம்:
இதனால், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இந்த பிரச்சனையால் இதயம் ரத்தத்தை உந்திச் செலுத்த முடியாமல் போனது.
இதய மாற்று அறுவை சிகிச்சை:
தொடர்ச்சியாக, அவரது உடல்நிலை மோசமடையவும், உடலின் எடை பாதியாக குறையவும் காரணமானது. இதனால் இதயமாற்று அறுவை சிகிச்சையை இரு ஆண்டுகளுக்குள் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.
நல்ல உடல்நிலை:
இறந்த ஒருவரின் இதயத்தை தானமாகப் பெற்று இதயமாற்று அறுவை சிகிச்சைக்குப் பின்னர் தற்போது ஆறாண்டுகளாக நல்ல உடல்நிலையுடன் அந்த இளைஞர் உள்ளார்.
இதய வடிவ டாட்டூ:
சமீபத்தில், தனக்கு இதய தானம் கிடைக்க காரணமான அந்த நபரின் குடும்பத்தாருக்கு நன்றி செலுத்தும் விதமாக அவரது பெயருடன் தனது மார்பில் இதய வடிவத்தை பச்சை குத்திக்கொண்டுள்ளார்.
வாழவைத்த மனிதம்:
இதய தானம் கிடைத்த நாள்முதல் இன்றுவரை அந்தக் குடும்பத்தாருடன் தமது குடும்பம் நல்ல நட்புடன் இருப்பதாகவும், அவர்களது பரந்த மனப்பான்மைக்காக நன்றி செலுத்த எண்ணியதாலேயே இதுபோல பச்சைக் குத்திக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications