வரம்பு மீறாதீங்க.. இதுவெல்லாம் சரியில்லை.. காசாவை ஏன் இப்படி தாக்குறீங்க? இஸ்ரேலை சீண்டும் சீனா

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இடையேயான போர் குறித்து எச்சரிக்கும் வகையில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ள கருத்து இஸ்ரேலை கடும் கோபமடைய செய்துள்ளது.

பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக காசா உள்ளது. இந்த பகுதி ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த கசா என்பது முன்பு இஸ்ரேல் வசம் இருந்தது. தற்போது காசாவில் இஸ்ரேலியர்களை ஹமாஸ் அனுமதிப்பது இல்லை. இதுதொடர்பாக ஏற்படும் மோதலில் இருதரப்பும் மோதிக்கொள்வது உண்டு.

This is Beyond Scope Of Self-Defence in Gaza, China slams Israel

இந்த பிரச்சனை என்பது ஒன்றும் புதிது இல்லை. பல ஆண்டுகளாக இது தொடர்ந்து நடந்து வருகிறது. அவ்வப்போது ஏவுகணை தாக்குதல்களை இருதரப்பும் நடத்தி கொள்ளும். இதற்கிடையே தான் கடந்த 7 ம் தேதி 'ஹமாஸ்' தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது மிக கடுமையான தாக்குதலை நடத்தினர். 7 ஆயிரம் ஏவுகணைகளை ஏவி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து போர் தொடங்கி உள்ளதாக கூறி இஸ்ரேல் காசா மீது உக்கிரமான வான்வெளி தாக்குதலை தொடங்கினார். இன்று 9 வது நாளாக போர் நடந்து வருகிறது. 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியான நிலையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் தான் இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் இடையேயான போர் குறித்து சீனா கருத்து தெரிவித்துள்ளது.

சீனாவில் உள்ள தூதரக அதிகாரி ஒருவர் மீது நேற்று முன்தினம் கத்திக்குத்து நடத்தப்பட்ட நிலையில் போர் குறித்து சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி கூறியுள்ளதாவது: காசாவில் இஸ்ரேலின் செயல்பாடு என்பது தற்காத்து கொள்ளும் வரம்பை மீறிய தாக்குதலாக உள்ளது. இந்த பிரச்சனையை உடனடியாக தீர்த்து கொள்ள வேண்டும். காசா மக்களுக்கு இருதரப்பும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு வழங்க வேண்டும். போர் சூழலை அதிகரிக்ககூடாது. விரைவில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்'' என கூறியுள்ளார்.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான மோதல் பெரிய அளவிலான போராக மாறுவதை தடுக்க சீனாவும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆன்டனி பிளிங்கன வாங் யியுடன் தொலைபேசியில் பேசினார். இந்த பேச்சுவார்த்தை நடந்த ஒரு நாளுக்கு பிறகு சீனா இப்படி தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த வாரம் சீன தூதர் ஜாய் ஜூன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்ல உள்ளார். அப்போது அவர் இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டியது குறித்து பிற நாடுகளுடன் வலியுறுத்த உள்ளார்.

முன்னதாக சமீபத்தில் சீனா தரப்பில், ‛‛மோதலை நிறுத்த வேண்டும் என்றால் ஒரு வழி உள்ளது. இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதோடு பேச்சுவார்த்தை மூலம் சுதந்திரமான பாலஸ்தீன நாட்டை நிறுவுது தான் பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும்'' என தெரிவிக்கப்பட்டது. இருந்தது. இதற்கு ஏற்கனவே இஸ்ரேல் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. தெளிவான கண்ணோட்டம் இன்றி சீனா செயல்படுவதாக இஸ்ரேல் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் தான் தற்போது சீனா மீண்டும் இஸ்ரேலை சீண்டியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+