உச்சக்கட்டத்தில் போருக்கு நடுவில்.. உக்ரைனுக்கு சென்ற மோடி! பயணத்திற்கான காரணம் இதுதான்!

Subscribe to Oneindia Tamil

கீவ்: ரஷ்யா-உக்ரைன் போர் தீவிரமடைந்திருக்கும் சூழலில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று உக்ரைன் சென்றிருக்கிறார். அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கியுடன், மோடி கலந்துரையாட உள்ள நிலையில், அவரது பயணம் போரின் தீவிரத்தை குறைக்ககுமா? பயணத்திற்கான நோக்கம் என்ன? என்கிற கேள்விகளை எழுப்பியுள்ளன.

ஒரு காலத்தில் ரஷ்யாவில் பாதிப்பு ஏற்பட்டால், அது இந்தியாவில் விளைவுகளை ஏற்படுத்தி வந்தது. ஆனால், இப்போது அப்படியல்ல.. இந்தியா ரஷ்யாவுடன் எந்த அளவுக்கு நெருக்கம் காட்டுகிறதோ, அதே அளவுக்கான நெருக்கத்தை மற்ற நாடுகளிலும், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளிடம் காட்டி வருகிறது. இந்த நெருக்கத்தை மறு புத்துணர்ச்சி செய்யும் சூழலை ரஷ்யா-உக்ரைன் போர் ஏற்படுத்தியிருக்கிறது.

Narendra Modi PM Modi Ukraine Visit Ukraine

போருக்கான காரணம்: ரஷ்ய மக்களும், உக்ரைன் மக்களும் அங்காளி-பங்காளிகள். ஆரம்பத்தில் ஒன்றாகத்தான் இருந்தார்கள். ஆனால், 1991ல் சோவியத் உடைந்த பிறகு, பங்காளிகளுக்குள் சண்டை வந்து, உக்ரைன் தனி நாடாக உருவாகிவிட்டது. பங்காளிக்குள் எப்போ சண்டை வரும், பஞ்சாயத்து செய்யும் போர்வையில் எப்படி உள்ளே நுழையலாம் என காத்திருந்த அமெரிக்கா.. சட்டென உக்ரைனை டேக் ஓவர் செய்துவிட்டது.

நேட்டோ: இப்போது உக்ரைன் அதிபராக இருக்கும் ஜெலன்ஸ்கி அமெரிக்க ஆதரவாளர். ஆக.. சண்டைக்கு காரணம் அமெரிக்காவாக இருக்கிறது. உக்ரைன் உள்ளே வந்த அமெரிக்கா, நேட்டோ பெயரில், ரஷ்ய எல்லையில் எனது படையை நிறுத்த வேண்டும் என கேட்க.. ஜெலன்ஸ்கியும் ஓகே சொல்லிவிட்டார். அவ்வளவுதான் வெடித்தது போர். ரஷ்யா தாக்குதல் நடத்த, அமெரிக்காவின் ஆயுதங்களை வைத்துக்கொண்டு உக்ரைன் பதில் தாக்குதல் நடத்த.. கடைசியில் மாண்டது என்னவோ மக்கள்தான்.

இந்தியா: இப்படி இருக்கையில்தான் சீனுக்குள் இந்தியா வருகிறது. அதாவது, போர் தொடங்கிய பின்னர் உக்ரைனுடனான இந்திய வர்த்தகம் ஒரேயடியாக படுத்துவிட்டது. கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரியில் போர் தொடங்கியது. அதற்கு முன்னர் இந்தியா-உக்ரைன் வர்த்தகம் 3.39 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (ரூ.28 ஆயிரம் கோடியாக) இருந்தது. போர் தொடங்கி பின்னர் இது, வெறும் ரூ.6.4 ஆயிரம் கோடியாக சுருங்கி போனது. இது இந்தியாவுக்கு பெரிய அடி.

சிக்கல்: எனவே இந்த வர்த்தகத்தை மீட்டெடுக்க இந்தியா தொடர்ந்து தீவிரமாக முயன்று வருகிறது. ஆனால் இதில் சிக்கல் இருக்கிறது. அதாவது, இந்தியா ரஷ்யாவுக்கு நட்பு நாடு. போர் குறித்து ஐநாவில் பஞ்சாயத்து வெடிக்கும்போதெல்லாம் இந்தியா, ரஷ்யாவுக்கும் எதிர்ப்பு தெரிவிக்காமலும், உக்ரைனுக்கும் ஆதரவு தெரிவிக்காமலும் சைலன்ட்டாக இருந்து வந்தது. இப்படி இருந்துவிட்டு, போர் தீவிரமாகிக்கொண்டிருக்கும் சூழலில், உக்ரைனுக்கு மோடி செல்வது ரஷ்யாவுக்கு கொஞ்சம் எரிச்சலை ஏற்படுத்தாதா என்ன?

இந்தியாவின் கணக்கு: ஆனால், இதை சமாளிக்க இந்தியாவிடம் வழியில்லாமலா இருக்கும்? இப்படி யோசித்து பாருங்களேன். சீனா சும்மா, சும்மா நம் எல்லையில் ஏழரையை கூட்டிக்கொண்டே இருக்கிறது. கால்வான் பள்ளத்தாக்கு மோதலில் நாம் சில வீரர்களையும் இழந்திருக்கிறோம். அப்பேற்பட்ட சீனாவுடன், ரஷ்யா மட்டும் ஃபிரெண்டா இருக்கலாமா? இதுதான் இந்தியாவின் கணக்கு. நான் உன்னை எதுவும் கேட்காத வரைக்கும், நீயும் என்னை எதுவும் கண்டுக்காத.. என்று சூசகமாக சொல்லிவிட்டுதான், இந்தியா பிரதமர் உக்ரைனுக்கு சென்றிருக்கிறார்.

போர் நிறுத்தம் சாத்தியமா?: இந்த பயணம், போர் நிறுத்தத்தை ஏற்படுத்த கூடும் என சிலர் பேசி வருகிறார்கள். ஆனால், அதெற்கெல்லாம் வாய்ப்பு இல்லை. ரஷ்யா-உக்ரைன் (அமெரிக்கா) இதுல ஒன்னு மொரட்டு பீஸ்.. இன்னொன்னு கோபக்கார பீஸ்.. இதுக்கிடையில் போய் நாம சமாதானம் பேச முடியுமா? அது இந்தியாவுக்கு அவ்வளவு நல்லதும் இல்ல. அதனால, கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்தி, நாட்டின் முன்னேற்றத்தை வேகப்படுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதுதான் மோடி பயணத்தின் நோக்கம் என்றும் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+