Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜப்பானில் இந்த தமிழ்நாட்டு உணவகம் தான் செம்ம டிரெண்டிங்.. சாப்பாடு மட்டுமல்ல.. இன்னொரு காரணமிருக்கு

Subscribe to Oneindia Tamil

டோக்கியோ: நம் தமிழ்நாட்டு உணவு வகைகள் உலக அளவில் புகழ் பெற்றுள்ளன.நம்ம ஊர் தோசை, இட்லி , சட்னி, சாம்பார், சாப்பாடு ஜப்பானில் ரொம்பவே பேமஸாக உள்ளன. ஜப்பானில் தென்னிந்திய உணவுகளுக்கான ஓட்டல் ஒன்று இயங்குகிறது. இதை அக்மார்க் இந்தியர்கள் போலவே ஜப்பானியர்கள் நடத்துவது தான் ஆச்சர்யமான உண்மை.

பொதுவாகவே இந்தியாவின் உணவு வகைகள் உலகளவில் பெரும் புகழ் பெற்றவை. அதிலும் குறிப்பாக தென்னிந்திய உணவு வகைகள் பலருக்கும் பிடிக்கும். நம்ம ஊர் இட்லி, சாம்பார், பொங்கல், உளுந்த வடை, தோசை, காய்கறி கூட்டுடன் சாப்பாடு ஆகியவை உலகின் பல நாடுகளில் வரவேற்பை பெற்றுள்ளன. வெளிநாடுகளில் இயங்கும் நம்ம ஊர் ஓட்டல்களில் கிடைக்கும் வரவேற்பே இதற்கு சாட்சி.

This South Indian restaurant is trending in Japan right now: Do you know why?

இந்நிலையில் ஜப்பானில் உள்ள தென்னிந்திய உணவகம் ஒன்று இப்போது சமூக வலைதளங்களில் அதிக அளவில் பேசுபொருளாக உள்ளது. கோவா முதலமைச்சரின் முன்னாள் கொள்கை ஆலோசகரான பிரசன்னா கார்த்திக் வெளியிட்ட பதிவு தான் காரணம். சமீபத்தில் ஜப்பானின் கியோட்டோவிற்கு பிரசன்னா கார்த்திக் சென்றுள்ளார். அங்கு ஒரு தென்னிந்திய உணவகத்தைக் கண்டார். இந்த இந்திய உணவகம் இந்தியர்களால் நடத்தப்படாமல் ஜப்பானிய உள்ளூர்வாசிகளால் நடத்தப்படுவதை கேட்டு வியந்து போனார். அங்கு இந்து கடவுளின் படங்களுடன், அக்மார்க் இந்தியர்களை போல் உணவகத்தை நடத்தி வருகிறார்கள் ஜப்பானியர்கள். அங்கு சென்று வந்த அனுபவத்தை பிரசன்னா கார்த்திக் எக்ஸ் தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், ஜப்பானின் கியோட்டோவில் உள்ள தட்கா என்ற தென்னிந்திய உணவகத்திற்கு அண்மையில் நான் பார்வையிட்டேன். தட்கா உணவகம் ஜப்பானியர்களுக்கு சொந்தமானது. முழுக்க முழுக்க ஜப்பானியர்களால் நடத்தப்படுகிறது. அவர்கள் 6 மாதங்களுக்கு ஒருமுறை சென்னைக்கு வந்து, புதிய உணவுகளைக் கற்றுக்கொண்டு, அதை முழுமையாகப் பயிற்சி செய்து, தங்கள் மெனுவில் சேர்த்து வருகிறார்கள்.

அந்த தட்காவில், நான் சென்னையில் வளர்ந்த போது சாப்பிட்டது போன்ற, சிறந்த தென்னிந்திய உணவுகளை சாப்பிட்டேன். தோசையும் இட்லியும் நம்ப முடியாத அளவிற்கு அப்படியே நம்மூரில் இருந்தது போல் இருந்தது. இந்த தட்காவில் சாப்பிடும் இந்தியர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. அதன் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் ஜப்பானிய வாடிக்கையாளர்கள் தான். அவர்கள் இந்திய உணவின் மீது அளவற்ற பிரியம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.

ஓட்டல் வைத்துள்ள ஜப்பானியர்கள் இருவருமே உண்மையிலேயே இந்திய கலாச்சாரத்தை தங்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பது ஓட்டலை பார்த்த போது எனக்கு புரிந்தது. மேலும் இந்து மதத்தைப் பற்றிய ஆழமான புரிதலை வளர்த்து, அதன் மீது அளவற்ற பற்றும் வைத்திருக்கிறார்கள்.

அவர்கள் சென்னைக்கு வரும் போதெல்லாம், தமிழ்நாட்டின் புகழ் பெற்ற கோயில் நகரமான திருவண்ணாமலைக்கு சென்று, பகவான் ரமண மகரிஷியின் ஆசிரமத்தில் தியானம் செய்து தங்கள் நேரத்தை செலவிடுகிறார்கள். அவர்கள் ஓட்டலின் பின்னணியில் ரமணரின் படம் தெரியும்.

நான் காபியோ டீயோ கேட்கவில்லை.. ஆனால் நான் கிளம்பும் போது, தென்னிந்திய பில்டர் காபியை சுடச்சுட கப்பில் கொடுத்தார்கள். நான் இதைபார்த்து அசந்து போய் ஏற்றுக்கொண்டேன். நான் சாப்பிட்டதில் சிறந்த ஃபில்டர் காபியாக அது மாறியது. பொதுவாக ஜப்பானியர்கள் வேலையில் துல்லியமாக செயல்படுவார்கள் . இவர்கள் வேலையில் அந்த துல்லியத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளார்கள்." இவ்வாறு வியந்து போய் பிரசன்னா கார்த்திக் பாராட்டி உள்ளார்.இந்த பதிவு காரணமாக இந்தியா ஜப்பானிய உணவகம் ஜப்பானில் டிரெண்டிங் ஆக உள்ளது.

ஜப்பான் தட்கா உணவகம் பற்றி பிரசன்னா கார்த்திக்கின் பதிவு மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை 7 லட்சம் பேர் அவரது பதிவினை பார்த்துள்ளனர். 18 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். 2300 பேர் ஷேர் செய்துள்ளனர். ஏராளமானோர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்,

பார்வைகளைக் குவித்துள்ளது. ஜப்பானின் கியோட்டோவில், தாட்கோ ஓட்டலை நடத்துவது செஃப் டாய் ஓகோனோகி என்பவர் ஆவார். இவர் ஜனவரி 2012 இல் ஜப்பானின் கியோட்டோவில் முதல் உணவகத்தைத் தொடங்கி உள்ளார். பின்னர், டிசம்பர் 2021 இல், ஓஷிகோஜி தெருவில் மற்றொரு கிளையைத் திறந்து உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+