பூகம்பத்தில் பூத்த பூ.. பெற்றோரை இழந்து தவிக்கும் அதிசய குழந்தை அயா.. தத்தெடுக்க உலக மக்கள் ஆர்வம்

பூகம்பத்தின் போது தாய், தந்தையரை இழந்த பச்சிளம் குழந்தை அயாவை தத்தெடுத்து வளர்க்க ஆர்வம் காட்டும் மக்கள்

Subscribe to Oneindia Tamil

சிரியா: துருக்கி- சிரியா எல்லையில் பூகம்பத்தின் போது தாய், தந்தையரை இழந்த பச்சிளம் குழந்தை அயாவை தத்தெடுத்து வளர்ப்பதற்கு உலகில் உள்ள மக்கள் போட்டி போடுகிறார்கள்.

துருக்கி- சிரியா எல்லையில் பிப்ரவரி 6ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் விண்ணுயர்ந்த கட்டடங்கள் எல்லாம் மடமடவென சரிந்து விழுந்தன. இந்த நிலையில் மக்கள் தூங்கிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மக்களால் தப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் இடிபாடுகளில் நிறைய பேர் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த சம்பவத்தால் இதுவரை 23, 766 பேர் பலியாகிவிட்டனர். ஆங்காங்கே கொத்துக் கொத்தாக சடலங்களும், குவியல் குவியலாக இடிபாடுகளும் உள்ளன.

பிரத்யேக இயந்திரங்கள்

பிரத்யேக இயந்திரங்கள்

அவற்றை பிரத்யேக இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டு அங்கு சடலம் இருந்தாலும் மனித உயிர், வீட்டு விலங்குகள் என மீட்டு வருகிறார்கள். அவ்வாறு மீட்பு பணிகளின் போது மீட்பு படையினருக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி, ஒரு பக்கம் சோகம். பூகம்பத்தின் போது தொப்புள் கொடி கூட அறுக்கப்படாமல் ஒரு குழந்தை உயிருடன் இருந்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த குழந்தையின் பெற்றோர், கூட பிறந்த 4 பேரும் இறந்துவிட்டனர்.

 பிரத்யேக இயந்திரங்கள்

பிரத்யேக இயந்திரங்கள்

அவற்றை பிரத்யேக இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டு அங்கு சடலம் இருந்தாலும் மனித உயிர், வீட்டு விலங்குகள் என மீட்டு வருகிறார்கள். அவ்வாறு மீட்பு பணிகளின் போது மீட்பு படையினருக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி, ஒரு பக்கம் சோகம். பூகம்பத்தின் போது தொப்புள் கொடி கூட அறுக்கப்படாமல் ஒரு குழந்தை உயிருடன் இருந்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த குழந்தையின் பெற்றோர், கூட பிறந்த 4 பேரும் இறந்துவிட்டனர்.

பூகம்பத்தில் பூத்த பூ

பூகம்பத்தில் பூத்த பூ

இந்த குழந்தையை பூகம்பத்தின் போது பூத்த பூ என மக்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த குழந்தையை தூரத்து உறவினர் ஒருவர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். லேசான காயமடைந்த அந்த குழந்தைக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த பெண் குழந்தைக்கு அயா என பெயர் வைத்துள்ளனர். அயா என்றால் அரபு மொழியில் அதிசயம் என்ற பொருளாகும்.

பேரிடர் மீட்பு படை

பேரிடர் மீட்பு படை

அயாவை அந்த பகுதி மக்களும் பேரிடர் மீட்பு படையினரும் கொண்டாடி வருகிறார்கள். தாய், தந்தையை இழந்து தவிக்கும் இந்த குழந்தையை தத்தெடுத்து வளர்க்க நீ நான் என உலக மக்கள் போட்டி போட்டுக் கொண்டு வருகிறார்கள். குவைத்தை சேர்ந்த தொலைகாட்சி பிரபலம் உள்பட பலர் இந்த குழந்தையை வளர்க்க விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.

மருத்துவமனை

மருத்துவமனை

இந்த மருத்துவமனையின் மருத்துவர் காலித் அட்டாயா குழந்தையை தற்போதைக்கு யாருக்கும் தத்து கொடுக்க போவதில்லை என தெரிவித்துள்ளார். இந்த குழந்தையின் தூரத்து உறவுக்காரர்கள் யாராவது திரும்பி வந்து குழந்தையை வந்தால் அவரிடம் குழந்தையை கொடுத்து விடுவதாக தெரிவித்த மருத்துவர் காலித், அதுவரை இதை என் சொந்த குழந்தை போல் வளர்க்க போவதாகவும் தெரிவித்துள்ளார்.

 மருத்துவரிடம் இருக்கும் அயா

மருத்துவரிடம் இருக்கும் அயா

மருத்துவர் காலித்தின் மனைவிக்கு 5 மாதத்திற்கு முன்புதான் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையுடன் அயாவுக்கும் காலித்தின் மனைவிதான் தாய் பால் கொடுத்து பராமரித்து வருகிறார். ஒரு வேளை குறிப்பிட்ட காலம் வரை எந்த உறவினரும் வராவிட்டால் காலித்தே இந்த குழந்தையை வளர்ப்பார் என தெரிகிறது. இல்லாவிட்டால் அப்போது அந்த நாட்டின் சட்டபடி தத்து கொடுக்க முற்படலாம் என்றும் தெரிகிறது.

உதவிகள்

உதவிகள்

இந்த குழந்தையை போல் ஏராளமான குழந்தைகள் சிறுவர்கள் தாய் தந்தை இருவரையுமோ அல்லது ஒருவரையோ இழந்து தவித்து வருகிறார்கள். தற்போது சிரியாவில் ஏற்பட்டுள்ள சேதாரத்தை பார்த்தால் பழைய நிலைக்கு கொண்டு வர இன்னும் பல காலம் ஆகும் என தெரிகிறது. அதுவரை மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. துருக்கி, சிரியா மக்களுக்காக இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிலிருந்து மருத்துவ குழு, மருந்துகள், உலர் உணவுகள் உள்ளிட்டவை அனுப்பப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+