ஜப்பானில் குட்டி விமானம் விழுந்து நொறுங்கி விபத்து- விமானி உட்பட 3 பேர் பரிதாப பலி!
ஜப்பான்: ஜப்பானில் குடியிருப்புப் பகுதியில் சிறிய ரக விமானம் நொறுங்கி விழுந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர்.
தலைநகர் டோக்கியோவில் நேற்று காலை இந்த விபத்து நிகழ்ந்தது. டோக்கியோவின் சோஃபு விமான நிலையத்திலிருந்து, உள்ளூர் நேரப்படி காலை 11 மணிக்கு அதாவது இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு புறப்பட்ட அந்த விமானத்தில் நான்கு பயணிகளும் ஒரு விமானியும் இருந்தனர்.

ஆனால் புறப்பட்ட ஓரிரு நிமிடங்களிலேயே விமானம் விபத்துக்கு உள்ளானது. அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து குடியிருப்புப் பகுதியில் நொறுங்கி விழுந்தது. நொறுங்கி விழுந்தவுடன் விமானத்தில் தீப்பிடித்தது.
விமானம் விழுந்த பகுதியில் இருந்த 3 வீடுகளில் தீ பரவியது. அப்பகுதியில் இருந்த இரு கார்களுக்கும் தீ பரவியது. அருகிலிருந்த பல வீடுகளின் கூரைகள் சேதமடைந்தன. தீயணைப்பு வண்டிகள் அந்த இடத்துக்கு விரைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனால் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
இந்நிலையில் விமானத்துக்கு அடியில் சிக்கி ஒரு கார் நசுங்கியது.இந்த விபத்தில் விமானியும், ஒரு பயணியும் உயிரிழந்தனர். விமானம் விழுந்த ஒரு வீட்டில் இருந்த பெண்ணொருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்திலிருந்த ஏனைய பயணிகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. அந்த விமானத்தில் பயணம் செய்தவர்கள், டோக்கியோவிலிருந்து 100 கி.மீ. தொலைவிலிருக்கும் இசுஷிமா தீவுக்குச் சென்று, அங்கு விமான ஓட்டுதல் பயிற்சி மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications