இதே நாளில் 2008ம் ஆண்டு 87,000 உயிர்களைக் காவு கொண்ட பயங்கர சீன நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
பெய்ஜிங் : சீனாவில் இதே நாளில் கடந்த 2008ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 87 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்ற உண்மை அனைவரையும் உலுக்குவதாக உள்ளது.
சீனாவின் ஷாம் நகரை மையமாக வைத்து இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு 7.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த பூகம்பமானது பூமிக்குக் கீழே 18.5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 2008ம் ஆண்டும் இதே நாளில் பயங்கர நிலநடுக்கம் ஒன்றை சீனா சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

இதோ, அதன் விபரங்களாவன:-
- கடந்த 2008ம் ஆண்டு மே 12ம் தேதி சீனாவின் சிங்ச்சுவான் மாகாணத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி சுமார் 70 ஆயிரம் மக்கள் உயிரிழந்தனர்.
- மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்கள் காயமடைந்தனர். 18 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இந்த நிலநடுக்கத்தில் காணாமல் போனார்கள். மாயமான மக்களும் நிலநடுக்கத்தில் உயிரிழந்ததாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
- இந்தப் பயங்கர நிலநடுக்கத்தில் 1.5 கோடி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். சுமார் 50 லட்சம் மக்கள் வீடுகளை இழந்தனர்.
- சுமார் 53.6 லட்சம் கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. 2.1 கோடி வீடுகள் பலத்த சேதத்தைச் சந்தித்தது. 10 மாகாணங்கள் பாதிக்கப்பட்டன.
- இந்த நிலநடுக்கத்தினால் சீனாவில் 86 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட்டது.
- நிலநடுக்கத்தால் நிலச்சரிவு ஏற்பட்டு பல்வேறு மலைப்பிரதேச நகரங்களின் தொடர்பு துண்டிக்கப் பட்டது. சுமார் ஒரு வார காலத்திற்குப் பின்னரே இந்தச் சேதாரம் சரி செய்யப்பட்டது.
- சிங்ச்சுவான் பகுதியில் 700 பேர் மண்ணில் உயிரோடு புதையுண்டு பலியானார்கள்.
- லாங்க்னான் பகுதியில் ரயில் ஒன்று நிலச்சரிவில் சிக்கி புதையுண்டது,
- இந்த நிலநடுக்கத்தால் 2,473 அணைகள் சேதமடைந்தன. 53 ஆயிரம் கிமீ சாலைகள் உருக்குலைந்தது. 48 ஆயிரம் கிமீ நீளமுள்ள குடிநீர் குழாய் சேதமடைந்தது.
- 3 மலைகள் கடும் சேதத்தைச் சந்தித்தன. தெருக்கள் அனைத்தும் பிளவுபட்டன.சனா தவிர வங்கதேசம், தாய்லாந்து, தைவான், வியட்நாமிலும் இந்த நிலநடுக்கம் பாதிப்புகளை ஏற்படுத்தியது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications