அமெரிக்கா அமெரிக்காதான்.. அது ஆமையா இருந்தாலும் சரி.. ஆசாமியா இருந்தாலும் சரி!
கால் ஒடிந்த ஆமைக்கு வீல் சேர் பொருத்தப்பட்டுள்ளது.
மேரிலாண்ட்: நமக்கெல்லாம் இங்கே ரோட்டில் அடிபட்டு ரத்தம் பிச்சிக்கிட்டு ஒழுகிட்டு கிடந்தாலும் பெரும்பாலும் அதை யாருமே மதிக்கிறதும் கண்டுக்கறதும் கிடையாது. ஆனால் அமெரிக்காவில் அடிபட்ட ஒரு நட்சத்திர ஆமைக்கு வந்த வாழ்வு இருக்கிறதே.. அடேயப்பா!!
அமெரிக்காவில் மேரிலேண்ட் நகரில் உயிரியல் பூங்கா இருக்கிறது. இங்கு கடந்த ஜூலை மாதத்தில் ஒரு ஆமை எங்கேயோ போய் முட்டிக் கொண்டு விட்டது. இதனால் அந்த ஆமைக்கு உடலெங்கும் ஒரே காயங்கள்.

ஆமைக்கு ஆபரேஷன்
இதை கண்டுபிடித்த அந்த ஊழியர்கள் அந்த ஆமைக்கு பூங்காவிலேயே இருந்த மருத்துவமனையில் சிகிச்சை அளித்தார்கள். ஆமைக்கு எல்லான் ஃபிரான்சன் என்பவர்தான் சிகிச்சை செய்தார். ஆனாலும் ஆமைக்கு காயங்கள் குணமாகவே இல்லை. அதனால் ஆமைக்கு ஆபரேஷன் செய்யலாம் என டாக்டர் முடிவு செய்தார். அதற்காக ஆமைக்கு இரும்பு தகடு பொருத்தி அந்த ஆபரேஷனை செய்தார்கள்.
[என்னது.. இளவரசி கார் கதவை திறந்து அவரே மூடினாரா.. இங்கிலாந்தில் ஒரே பரபரப்பு]

வீல் சேர் ஐடியா
அதன் பின்னரும் ஆமைக்கு பின்னங்கால்கள் ரொம்ப மோசமாகி விட்டது. கால்களை எடுத்து வைத்து நடக்கவே முடியவில்லை. அதனால் மிகவும் சிரமப்பட்டது. மீண்டும் என்ன செய்யலாம் என டாக்டர் சிந்தனையில் மூழ்கினார். ஆமைக்கு செயற்கை கால்கள் பொருத்த முடியாது என்பதால் வேறு ஐடியா யோசித்தார். அப்போது பிறந்ததுதான் வீல் சேர் ஐடியா!! பேசாமல் இந்த ஆமைக்கு வீல் சேர் வடிமைத்து தந்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்தார்.

டிசைன் செய்த மாணவன்
அதற்காக கால்நடை மருத்துவம் படித்து வரும் ஒரு மாணவனிடம் உதவி கேட்டார் டாக்டர். அந்த மாணவன் இப்போதுதான் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். உடனே மாணவனும் அந்த வீல் சேருக்கு ஒரு டிசைன் செய்து டாக்டரிடம் காட்டியுள்ளார். இந்த படத்தை வாங்கி கொண்ட டாக்டர், சமூக ஆர்வலர் ஒருவரது உதவியுடன் வீல் சேல் செய்ய துவங்கினார். ஒருவழியாக ஆமைக்கு வீல் சேர் ரெடியாகிவிட்டது!!
ஹாயாக சுற்றி வருகிறது
அந்த வீல் சேரை வைத்து டாக்டர் ஆமைக்கு மீண்டும் ஒரு ஆபரேஷனை செய்து அந்த வீல் சேரை பொருத்தினார். இப்போது ஆமை வீல் சேர் உதவியுடன் ஹாயாக அந்த பூங்காவை சுற்றி வருகிறது. புதிய வசதியை அது ஈஸியாக எடுத்துக் கொண்டு அடாப்ட் ஆகி விட்டதாம். எந்த சிரமமும் இல்லையாம். அதன் ஆரோக்கியம் சரியாகி விட்டால் மீண்டும் இயல்பு நிலைக்கு அது திரும்பி விடுமாம்.
அமெரிக்கா அமெரிக்காதான்!
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications