லீ குவான் யூ உடலுக்கு 7 நாட்கள் அஞ்சலி... மார்ச் 29ல் அரசு மரியாதையுடன் அடக்கம்
சிங்கப்பூர்: சிங்கப்பூர் முன்னாள் பிரதமரும் தேசத்தந்தை என்று போற்றப்படுபவருமான லீ குவான் யூ உடல் ஒருவார அஞ்சலிக்குப் பின்னர் வரும் 29 ஆம் தேதி அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த லீ இன்று அதிகாலை 3.18 மணிக்கு உயிரிழந்ததாக சிங்கப்பூர் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தற்போது அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

குட்டி நாடாக இருந்தாலும், பொருளாதார வல்லரசாக மாற்றியவர் லீ. அதோடு பலமிக்க ராணுவத்தை கொண்டதாக சிங்கப்பூர் மாறியதற்குக் காரணம் இதற்கு லீயின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையே ஆகும்.
கடந்த 1963ஆம் ஆண்டு, சிங்கப்பூரை இந்தோனேஷியா படை தாக்கியது. அந்த தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் சிங்கப்பூர் தவித்தது.
இந்த தாக்குதலுக்கு பின்னர், பலமான ராணுவத்தை உருவாக்க நினைத்தார் லீ. உடனடியாக கட்டாய ராணுவ சேவை திட்டத்தை அமல்படுத்தினார். 1967ம் ஆண்டு சிங்கப்பூரில் கட்டாய ராணுவ சேவை அறிமுகமானது. இதனால், சிங்கப்பூர் ராணுவம் பலம் கொண்டதாக மாறியது.
31 ஆண்டுகாலம் சிங்கப்பூரின் பிரதமராக இருந்த லீ அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இன்று அதிகாலையில் அவர் மரணமடைந்தார்.
அவரது இன்று முதல் மார்ச் 28 வரை அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக நாடாளுமன்ற வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும், அரசியல் தலைவர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்திவருகின்றனர். லீயின் உடன் மார்ச் 29 அன்று அரசு மரியாதையுடன் அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளதாக சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications