விலக்கிக் கொள்ளப்பட்டது தடை.. 8 விமான நிலையங்களில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது
Recommended Video

டெல்லி: இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவியதால் நிறுத்தப்பட்டிருந்த விமானச் சேவைகள் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
புல்வாமா தாக்குதலுக்கு இந்திய விமான படையினர் நேற்று அதிகாலை பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுத்தனர். இதனால் பாகிஸ்தான் அச்சமும் வெறியும் கொண்டு இந்தியாவை தாக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதை இந்தியா முறியடித்து வருகிறது. இந்த நிலையில் இன்று பாகிஸ்தானிலிருந்து ஊடுருவிய அந்நாட்டு போர் விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியது.

விமான நிலையங்கள் மூடல்
இதனால் தொடர்ந்து எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. எல்லையில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு- காஷ்மீர், பஞ்சாப், உத்தரகாண்ட், ஹிமாச்சல் பிரதேசம், சிம்லா, குலுமணாலி, பிதாரோகார், பதான்கோட், ராஜஸ்தானின் ஜெய்சால்மர் ஆகிய இடங்களில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டன.

வான் வழித் தாக்குதல்
இந்தியா - பாகிஸ்தான் இடையே விமான சேவை இயக்கப்படாததால் சர்வதேச விமானங்கள் வர தயக்கம் காட்டுகின்றன. டெல்லிக்கு வடக்கே பயணிகள் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது.

சேவைகள் நிறுத்தம்
இதே போல் பாகிஸ்தானிலும் உள்நாட்டு, சர்வதேச விமான சேவைகளை லாகூர், முல்தான், ஃபைசலாபாத், சியால்கோட், இஸ்லாமாபாத் ஆகிய இடங்களிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மாற்று பாதை
இந்தியா-பாகிஸ்தான் வான் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில சர்வதேச விமானங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பின. சில விமானங்கள் மாற்று பாதையை நோக்கி சென்றன. இந்த நிலையில் போர் பதற்றம் காரணமாக 8 விமான நிலையங்களில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications