நைஜீரியாவில் போகோ ஹரம் தீவிரவாத அமைப்பின் தலைமைத் தளபதி கைது
அபூஜா: நைஜீரியாவில் ஆக்கிரமித்து வரும் போகோ ஹரம் தீவிரவாத இயக்கத்தின் தலைமை தளபதியை அந்நாட்டு ராணுவம் கைது செய்துள்ளது.
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் இஸ்லாமிய சட்டதிட்டங்களின் படி தனி நாடு வேண்டி போராடி வருகின்றனர் போகோ ஹரம் தீவிரவாதிகள். கடந்த 2009ம் ஆண்டு முதல் நைஜீரியாவில் இவர்களது ஆதிக்கம் அதிகரித்துள்ளது.
ஆயுதம் ஏந்திப் போராடி வரும் போகோ ஹரம் தீவிரவாதிகள் இதுவரை நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்று குவித்துள்ளனர். மேலும், பலரைக் கடத்திச் சென்றுள்ளனர். கடத்தப்பட்டவர்களில் பலரது நிலைமை என்ன என்பது இன்னமும் விடைக் காணப் படாத கேள்வியாகவே உள்ளது.
இந்நிலையில் அந்த இயக்கத்தின் முக்கிய நபரும் தலைமை தளபதியுமானவரை நைஜீரிய ராணுவம் கைது செய்ததாக சினுவா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
நைஜீரியாவின் முக்கிய நகரான கொடுங்காவைக் கைப்பற்றுவதற்காக பயங்கர ஆயுதங்களுடன் உள்ளே நுழைய முற்பட்ட போது, போகோ ஹரம் தலைமை தளபதி கைது செய்யப்பட்டதாக அச்செய்தியில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும், போகோஹரம் தளபதியை கைது செய்யும் போது நடந்த இத்தாக்குதலின் போது சுமார் 60க்கும் அதிகமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது.
கைது செய்யப்பட்டுள்ள போகோ ஹரம் தலைமைத் தளபதியின் பெயர், வயது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் நைஜீரிய ராணுவம் ரகசியமாக பாதுகாத்து வருகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications