அப்பாடா.. சண்டை முடிஞ்சது! இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நிறுத்தம்! ட்ரம்ப் சொன்னவுடன் மறுத்த ஈரான்
நியூயார்க்: இஸ்ரேல் ஈரான் இடையே 10 நாட்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வந்த நிலையில் அமெரிக்காவின் தாக்குதல் ஈரானுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. நேற்று கத்தார் மீது ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில் 3ஆம் உலகப் போர் மூளும் வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்பட்டது. இந்த நிலையில் இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அதே நேரத்தில் இப்போதைக்கு போர் நிறுத்தம் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து ஒப்பந்தம் இல்லை என ஈரான் மறுத்துள்ளது.
காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்த நிலையில், அந்நாட்டின் கவனம் ஈரான் மீது திரும்பியது. ஈரான் பயங்கரவாதிகளுக்கு உதவுவதாக கூறி திடீரென கடந்த வாரம் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் கடும் கோபமடைந்த ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
இதனால் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் ஜெருசலும் உள்ளிட்ட நகரங்கள் கடும் சேதத்தை சந்தித்தது. இரு நாடுகளும் மூர்க்கத்தனமாக மாறி மாறி தாக்குதல் நடத்தி வந்த நிலையில் உயிரிழப்புகளும் பொருட்சேதமும் அதிகரித்தது.

இதற்கிடையே இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் குதித்தது. கடந்த 22ஆம் தேதி அதிகாலை ஈரான் மீது அமெரிக்கா நேரடியாக தாக்குதல் நடத்தியது. ஈரானின் போர்ட்டோ, நார்டன்ஸ், எஸ்பகான் ஆகிய மூன்று பகுதிகளில் உள்ள அணுசக்தி நிலையங்களை குறிவைத்து அமெரிக்காவின் பி-2 ரக விமானங்கள் பங்கர் பஸ்டர் குண்டுகளை வீசின. இதில் அந்த அணுசக்தி நிலையங்கள் கடுமையாக சேதம் அடைந்ததாக சொல்லப்படுகிறது.
அமெரிக்காவின் இன்று நடவடிக்கையால் மேலும் கோபமடைந்த ஈரான் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் கத்தாரில் அமெரிக்கா விமான தளங்கள் அமைத்திருக்கும் நிலையில் அங்கு தாக்குதல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தபடியே நேற்று கத்தாரின் தோகாவில் உள்ள அமெரிக்க விமான படைக்கு சொந்தமான அல்-உதெய்த் விமான தளத்தை குறி வைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது.
24 ஹெக்டேர் பரப்பளவில் இந்த விமான தளம் அமைந்திருக்கும் நிலையில் ஈரான் சரமாரியாக ஏவுகணை தாக்குதலை நடத்தியது. அதே நேரத்தில் கத்தார் இந்த தாக்குதலை சாமர்த்தியமாக சமாளித்ததாகவும் ஈரானின் தாக்குதல் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது. நிகழ்வுகள் இவ்வாறு அரங்கேறிக் கொண்டிருக்க தங்கள் விமானப்படை தளத்தின் நீதான தாக்குதலால் கோபமடைந்த அமெரிக்கா ஈரான் மீது தாக்குதலை தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக இஸ்ரேல் ஈரான் இடையே போர் நிறுத்தம் வருவதாக அறிவித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்," அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இஸ்ரேலும் ஈரானும் போர் நிறுத்தத்திற்கு முழுமையாக ஒப்புக்கொண்டன. இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகள் முடிவடைந்த உடன் சுமார் 6 மணி நேரத்தில் ஈரான் போர் நிறுத்தத்தை ஆரம்பிக்கும். அதனைத் தொடர்ந்து 12 மணி நேரத்தில் இஸ்ரேலும் போர் நிறுத்தத்தை தொடங்கும். அடுத்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் ஈரான் இடையே 12 நாட்கள் நடைபெற்ற போரின் முடிவு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். இந்த போர் பல ஆண்டுகளாக நடந்து மத்திய கிழக்கையே அழித்திருக்க வேண்டிய ஒரு போராக மாறி இருக்கும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. அதுபோல நடக்காது. இஸ்ரேல் ஈரானை கடவுள் ஆசிர்வதிப்பார். மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்காவையும் கடவுள் ஆசிர்வதிப்பார்" உலகை கடவுள் ஆசிர்வதிப்பார்" எனக் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் தற்போதைக்கு போர் நிறுத்தம் குறித்த எந்த ஒப்பந்தமும் இல்லை என ஈரான் மறுத்துள்ளது. இது தொடர்பாக பேசியுள்ள ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அராக்சி," இப்போதைக்கு போர் நிறுத்தம் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை. ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து இறுதி முடிவு பின்னர் எடுக்கப்படும். தெஹ்ரான் நேரப்படி அதிகாலை 4 மணி வரை ஈரானின் ராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்தன. ஈரான் மக்களுக்கு எதிரான சட்ட விரோத ஆக்கிரமிப்பை இஸ்ரேல் நிறுத்தினால் நாங்களும் தொடர மாட்டோம். கடைசி நிமிடம் வரை எதிரியின் தாக்குதலுக்கு பதில் தர தயாராக இருக்கும் ஆயுதப்படைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" என கூறியுள்ளார். இதன் மூலம் மத்திய கிழக்கில் போர் நிறுத்தம் அமலுக்கு வருமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
-
"நீங்க சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.." கண்டிஷன் போட்ட அமெரிக்கா.. திட்டவட்டமாக நிராகரித்த ஈரான்! -
அமெரிக்காவின் அஸ்திவாரமே ஆடிடுமே.. "போரை முடிவுக்கு கொண்டு வர ரெடி.." ஈரான் போட்ட 7 கண்டிஷன்கள் -
ஈரான் போரால்.. எமெர்ஜென்சியை அறிவித்த ஆசிய நாடு! அடுத்து இந்தியாதான்! எச்சரிக்கும் நிபுணர்கள் -
லாட் டவுன் வந்துருச்சு..கொஞ்சம் கொஞ்சமாய் முடங்கும் உலக நாடுகள்! பெட்ரோல், டீசலால் ஒர்க் ஃப்ரம் ஹோம் -
Iran: அமெரிக்காவின் F18 போர் விமானத்தை குருவியை சுடுவது போல சுட்டு வீழ்த்திய ஈரான் ராணுவம்.. வீடியோ! -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
இந்தியாவிடம் உள்ள கச்சா எண்ணெய் இருப்பு வெறும் 10 நாட்களுக்கு கூட தாங்காது? அதிர்ச்சி RTI தகவல் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
Dubai Real Estate: துபாயில் வீடு வாங்க போறீங்களா? கவனிக்க வேண்டியவை என்னென்ன? -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்!












Click it and Unblock the Notifications