ஈரானுக்கு நாங்க இருக்கோம்.. டிரம்ப்-ன் அடுத்தடுத்த போஸ்ட்.. கண்ணிவெடி டூ அணு துகள்கள் வரை!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் ஹார்முஸ்-ஐ திறக்கப்படுவதாக ஈரான் தெரிவித்த பின்பு அடுத்தடுத்து பல முக்கிய பதிவுகளை தனது டிரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்டு வருகிறார்.
இதேவேளையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தற்காலிக போர் நிறுத்தத்தை நிரந்தரமாக மாற்றும் நோக்கில், புதிய 3 பக்க அமைதி திட்டம் குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாக, ஈரான் தன்னிடம் இருக்கும் செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை அளிப்பதற்காக அமெரிக்கா 20 பில்லியன் டாலர் பணத்தை அமெரிக்க அளிக்க உள்ளது என தகவல் வெளியானது. இதுக்குறித்து டிரம்ப் சுட சுட பதிவை டிரூத் சோஷியல் தளத்தில் செய்துள்ளார் டிரம்ப்.

ஹார்முஸ் நீரிணை
ஈரான் ஹார்முஸ் நீரிணையை ஒருபோதும் மூடாது என்று உறுதியளித்துள்ளது. இந்த நீரிணை உலக வர்த்தகத்துக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தப்படாது என்றும் ஈரான் உத்தரவாதம் கொடுத்துள்ளதாக டிரம்ப் தனது பதிவில் தெரிவித்தார். ஹார்முஸ் நீரிணை உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையாகும். இது முழுமையாக திறந்திருக்கும் நிலையில் உலக எரிபொருள் வர்த்தகம் சீராக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிரம்ப் ஈரானின் உத்தரவாத்தை வரவேற்று, இது உலகுக்கும், அமெரிக்காவும் நல்ல செய்தி, நல்ல நாள் என்று குறிப்பிட்டார்.
கடல் கண்ணிவெடிகள்
ஈரான் அமெரிக்காவின் உதவியுடன் கடலில் வைக்கப்பட்டுள்ள கடல் கண்ணிவெடிகளை அகற்றி வருகிறது அல்லது அகற்றியுள்ளது என்று டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை மூலம் ஹார்முஸ் நீரிணை பகுதியில் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்யும் என டிரம்ப் தெரிவித்தார். ஹார்மூஸ் நீரிணையில் முக்கிய அச்சுறுத்தலாக இருந்தது இந்த கடல் கண்ணிவெடிகள்.
கடல் கண்ணிவெடிகள் அகற்றப்படுவது வணிகக் கப்பல்கள் மற்றும் எண்ணெய் ஏற்றுமதிக்கு பெரும் நிம்மதியை அளிக்கும்.
அணு துகள்கள் அகற்றம்
அமெரிக்கா தனது B2 போம்பர்கள் விமானம் மூலம் உருவாக்கப்பட்ட அணு 'தூசு' (நியூக்ளியர் டஸ்ட்) அனைத்தையும் அகற்றும் என்று டிரம்ப் தெரிவித்தார். மேலும் ஈரான் உடனான இந்த ஒப்பந்தத்தில் எந்த வகையிலும் பணம் பரிவர்த்தனை நடைபெறாது. இது முழுக்க முழுக்க பணமற்ற ஒப்பந்தம் என்று தனது பதிவு மூலம் விளக்கம் அளித்தார்.
இதனால் ஈரான் கொடுக்க திட்டமிடும் செறிவூட்டப்பட்ட யூரேனியத்திற்கு 20 பில்லியன் டாலர் நிதி பரிமாற்றம் தகவல் பொய்யானது.
லெபனான் விவகாரம்
ஹார்முஸ் நீரிணை திறப்பது, ஈரான் உடனான ஒப்பந்தம் ஆகியவற்றில் லெபனானுடன் எந்த வகையிலும் தொடர்புடையது அல்ல என்று டிரம்ப் தெளிவுபடுத்தினார். இதேவேளையில் அமெரிக்கா லெபனானுடன் தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, அங்குள்ள ஹிஸ்புல்லா பிரச்சனையை சரியான முறையில் கையாளும்.
இஸ்ரேல் லெபனான் மீது இனி குண்டு வீசி தாக்கக் கூடாது என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்கா இஸ்ரேலுக்கு தாக்குதல் நடத்த தடை செய்துள்ளது. Enough is enough!!! என்று டிரம்ப் தனது பதிவில் கூறியுள்ளார். மேலும் லெபனானை மீண்டும் சிறப்பாக்குவோம் (மேக் லெபனான் கிரேட் அகெயின்) என்றும் தெரிவித்தார்.
டிரம்பின் இந்த தொடர்ச்சியான பதிவுகள் உலக அரசியல் மற்றும் வணிக சூழலை புதிய திசையில் கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.















Click it and Unblock the Notifications