Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பரபரப்புக்கும் கிம்-டிரம்ப் சந்திப்பு.. வித்தியாசமான விதிகளை அறிமுகப்படுத்திய சிங்கப்பூர் அரசு

வட கொரிய அதிபர் கிம் ஜாங்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் வரும் ஜூன் மாதம் 12ம் தேதி சந்திப்பு நடத்த இருக்கிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்: வட கொரிய அதிபர் கிம் ஜாங்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் சந்திக்க இருப்பதை தொடர்ந்து, சிங்கப்பூரில் வித்தியாசமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது

அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், வட கொரிய அதிபர் கிம் ஜாங்கும் இன்னும் சில தினங்களில் சந்திக்க இருக்கிறார்கள். இரண்டு அதிபர்களும் சிங்கப்பூரில் சந்திக்க இருக்கிறார்கள்.

வரும் ஜூன் 12ம் தேதி இருவரும் சிங்கப்பூரில் சந்திக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இதில் அணு ஆயுதம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளது. இதற்காக அந்த நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

 ஹோட்டல்

ஹோட்டல்

இவர்கள் இருவரும் சிங்கப்பூரின் ஷங்கிரி லா ஹோட்டலில் சந்திக்க உள்ளனர். இதற்காக அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரு நாட்டு அதிபர்களும் தங்களது தனிப்பட்ட பாதுகாவலர்களை அழைத்து வருகிறார்கள். இந்த ஹோட்டலில்தான் பொதுவாக வெளிநாட்டு அதிபர்கள் தங்குவது வழக்கம். சிங்கப்பூர் சென்று இருந்த பிரதமர் மோடியும் இங்குதான் தங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 ஊடகம்

ஊடகம்

உலகிலேயே இல்லாதா அளவிற்கு இரு நாட்டு அதிபர்கள் சந்திப்பை பற்றி செய்தி வெளியிட, பல நாட்டு ஊடகவியலாளர்கள் சிங்கப்பூர் விரைந்து இருக்கிறார்கள். மொத்தம், 2500 பத்திரிக்கையாளர்கள், செய்தியாளர்கள் இந்த நிகழ்வை குறித்து செய்தி வெளியிட சிங்கப்பூர் வந்துள்ளனர். இவர்கள் எல்லோரும் 12ம் தேதி, ஹோட்டல் வாசலில் கூட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

 விமான போக்குவரத்து

விமான போக்குவரத்து

இந்த சந்திப்பும் முக்கிய கட்டமாக அங்கு பெரிய அளவில் பாதுகாப்பு உயர்த்தப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பு படை தவிர யாரும் ஆயுதங்களை பயன்படுத்த கூடாது என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிங்கப்பூர் விமான போக்குவரத்தும் 24 மணி நேரம் நிறுத்தப்பட்டுள்ளது. ஜூன் 11ம் தேதி இரவில் இருந்து ஜூன் 12 இரவு வரை விமான போக்குவரத்து இருக்காது. எந்த நாட்டில் இருந்து விமானம் உள்ளே நுழைய முடியாது.

 போஸ்டர்கள்

போஸ்டர்கள்

அனுமதி இல்லாமல் நுழையும் விமானங்களை சுட்டு வீழ்த்த வடகொரியா ராக்கெட்டுகள் உதவிக்கு வரவழைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் ஜூன் 7 ம் தேதியில் இருந்து, சிங்கப்பூரில் பெரிய போஸ்டர்கள் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிபர்களுக்கு எதிராக வாசகம் எழுத வாய்ப்பு இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பெயிண்ட் விற்பனை 2 நாட்களுக்கு முன் தடை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சுவற்றில் வரைவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+