H1B Visa: விமானத்தில் ஏறிவிட்டு அலறி அடித்துக்கொண்டு இறங்கிய இந்தியர்கள்.. அமெரிக்க முடிவால் பீதி!
நியூயார்க்: அமெரிக்காவின் திடீர் முடிவால், ஹெச்1பி விசா வைத்திருப்பவர்கள் கடும் பீதி அடைந்துள்ளனர். இன்று பல இந்திய பயணிகள் விமானங்களில் ஏறிவிட்டு, அமெரிக்க அதிபர் டிரம்ப், ஹெச்1பி விசா கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியதன் காரணமாக அலறி அடித்துக் கொண்டு இறங்கியுள்ளனர்.
அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் பணிபுரிவதற்காக வழங்கப்படும் ஹெச்1பி விசாவின் ஆண்டு கட்டணத்தை 1 லட்சம் டாலராக அதாவது இந்திய மதிப்பில் ரூ. 88 லட்சமாக உயர்த்தி உள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இதனால், இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் ஹெச்1 பி விசா எடுத்து பணிபுரிந்து வரும் ஐடி ஊழியர்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளனர்.

ஹெச் 1பி விசா கட்டுப்பாடு
ஹெச்1பி விசா மீதான கட்டுப்பாடுகளை தொடர்ந்து, தற்போது அமெரிக்காவுக்கு வெளியே வசிக்கும் தங்கள் ஊழியர்கள், மீண்டும் அமெரிக்காவுக்குள் நுழைய மறுக்கப்படுவதைத் தவிர்க்க உடனடியாக அமெரிக்கா திரும்ப வேண்டும் என்று பல முன்னணி நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன.
மேலும், ஹெச்1பி விசா மற்றும் எச்4 விசா வைத்திருப்பவர்கள் புதிய நடைமுறைக்கான விண்ணப்பங்கள் குறித்து புரிந்துகொள்ளும் வரை குறைந்தது இரண்டு வாரங்கள் அமெரிக்காவில் தங்கியிருக்க வேண்டும் என்றும் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை மின்னஞ்சல் வாயிலாக கேட்டுக்கொண்டுள்ளன.
நாளை காலைக்குள்
வெளிநாட்டவர்கள் இந்திய நேரப்படி நாளை காலை 9.30 மணிக்குள் அமெரிக்கா சென்றாக வேண்டும். அதன் பிறகு செல்பவர்களுக்கு புதிய நடைமுறைப்படி கூடுதல் கட்டணம் விதிக்கப்படும். இதனால் ஹெச்1 பி விசா வைத்துள்ள வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் பீதி அடைந்துள்ளனர்.
டிரம்ப் அறிவிப்பால் அமெரிக்க விமான நிலையங்களில் இன்று காலை பெரும் குழப்பம் ஏற்பட்டது. வெளிநாடு செல்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தவர்கள் அவற்றை ரத்து செய்தனர். ஹெச்1பி விசாவில் அமெரிக்காவில் வசித்து வருபவர்கள் வெளிநாடு மற்றும் விடுமுறையில் செல்வதற்காக விமானங்களில் புறப்பட இருந்தனர்.
அலறி அடித்து இறங்கிய பயணிகள்
ஹெச்1பி விசா கட்டண உயர்வால் நிறுவனங்கள் அவசர மின்னஞ்சல்களை அனுப்பியதுமே, விமான இருக்கைகளில் அமர்ந்திருந்தவர்கள், அலறி அடித்துக் கொண்டு விமானங்களில் இருந்து இறங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சான் பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்தில், இந்தியாவுக்குச் செல்லும் எமிரேட்ஸ் விமானத்தில் பயணித்த பயணிகள் இன்று காலை அடித்துப் பிடித்து விமானத்தில் இருந்து கீழே இறங்கினர். டிரம்பின் விசா கொள்கை முடிவால் மீண்டும் அமெரிக்காவிற்குள் மீண்டும் அனுமதிக்கப்படாமல் போகலாம் என்ற அச்சத்தில், புறப்படுவதற்கு முன்பே பலரும் விமானத்தில் இருந்து இறங்கினர்.
விமானத்தில் குழப்பம்
அமெரிக்காவில் ஹெச்1 பி விசாவுடன் பணியாற்றும் இந்தியர்கள் பலர் துர்கா பூஜைக்காக, இந்தியாவுக்கு பயணம் செய்ய திட்டமிட்டனர். அதன்படி விமானம், சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்தது. அப்போது H1 B விசாவின் புதிய விதிகள் பற்றிய செய்தி வெளியானது. இதையடுத்து உடனடியாக விமானத்தில் இருந்த இந்தியர்கள் பீதியடைந்து, விமானத்தை விட்டு இறக்கி விடுமாறு பணியாளர்களிடம் கேட்டு உடனடியாக இறங்கி உள்ளனர்.
அவசரமாக விமானத்தில் இருந்து பலரும் இறங்கியதால் அங்கு குழப்பம் ஏற்பட்டது. குழப்பமான வெளியேறும் செயல்முறை காரணமாக, புறப்பட திட்டமிடப்பட்டிருந்த எமிரேட்ஸ் விமானம் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக புறப்பட்டதாக கூறப்படுகிறது. அதேசமயம், முன்கூட்டியே அமெரிக்காவில் இருந்து விடுமுறைக்காக கிளம்பிய பலருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விமான கட்டணம் உயர்வு
இதற்கிடையே விமான நிறுவனங்கள், அமெரிக்கா செல்வதற்கான கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தி உள்ளனர். வழக்கமாக டெல்லியில் இருந்து நியூயார்க் செல்வதற்கு விமான கட்டணம் 37 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும். தற்போதைய நெருக்கடியை பயன்படுத்தி விமான நிறுவனங்கள், 70 ஆயிரம் ரூபாய் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை வசூலித்துள்ளன.
-
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
அமைதி ஒப்பந்தம் ரெடி.. டிரம்ப் கையெழுத்து போட்டால் ஈரான் போர் முடிவுக்கு வந்துடும்! -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications