துப்பாக்கி சூட்டில் தன் நண்பனை இழந்த சிறுமிக்கு அதிபர் டிரம்ப் கடிதம்.. என்ன சொன்னார் தெரியுமா?
துப்பாக்கி சூட்டில் தன் நண்பனை இழந்த சிறுமி ஒருத்திக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடிதம் எழுதி இருக்கிறார்.
Recommended Video

நியூயார்க்: துப்பாக்கி சூட்டில் தன் நண்பனை இழந்த சிறுமி ஒருத்திக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடிதம் எழுதி இருக்கிறார். இந்த சம்பவம் நடந்து ஒரு வருடத்திற்கு பின் டிரம்ப் கடிதம் எழுதி இருக்கிறார்.
ஏவா என்ற அந்த சிறுமிக்கு கடந்த கிறிஸ்துமஸ் அன்று அவர் கடிதம் எழுதியுள்ளார். தற்போது ஏவாவின் அம்மா மூலம் அந்த கடிதம் பொதுவில் வெளியாகி இருக்கிறது.
ஏவாவின் வாழ்க்கையில் நடந்த சில மோசமான சம்பவங்களும், அதன் பின் அந்த சிறுமி அதிபருக்கு எழுதிய கடிதமும், அதற்கு அவர் எழுதிய பதிலும் மனதை உருக்கும் வகையில் இருக்கிறது.

என்ன ஆனது
15 மாதங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளது. ஏவா படிக்கும் பள்ளியில் திடீர் என்று ஒரு இளைஞன் புகுந்து துப்பாக்கியால் தாக்குதல் நடந்தி இருக்கிறான். இதில் 3 பேர் மரணம் அடைந்தார்கள். அந்த பள்ளியில் படித்த பலருக்கு மோசமாக காயம் ஏற்பட்டது.

நண்பர் மரணம்
இதில் ஏவாவின் நெருங்கிய நண்பன் ஜேக்கப் ஹால் என்ற சிறுவன் மரணம் அடைந்தான். சம்பவ இடத்திலேயே அந்த சிறுவன் மரணம் அடைந்துள்ளான். இருவரும் சிறு வயதில் இருந்தே ஒன்றாக வளர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதிப்பு
இதனால் ஏவா மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. யாரைப் பார்த்தாலும் பயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக அந்த சிறுமி மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அதிபருக்கு கடிதம்
இதில் இருந்து கொஞ்சமாக வெளியே வந்த அந்த சிறுமி அமெரிக்க அதிபருக்கு கடிதம் எழுதி இருக்கிறாள். அதில் அந்த மரணம் குறித்து குறிப்பிட்டு உள்ளாள். பள்ளி மாணவர்களை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்று கேட்டு இருக்கிறாள்.

குட்டி காதல்
அதுமட்டும் இல்லாமல் ''நானும் ஜேக்கப்பும் காதலித்தோம். கல்யாணம் செய்து கொள்ள நினைத்தோம். என்னால் கொலையாளியை மறக்க முடியவில்லை. துப்பாக்கி என்ற வார்த்தையை கேட்டாலே பயமாக இருக்கிறது'' என்று சிறுமி குறிப்பிட்டு இருக்கிறாள்.

லெட்டர்
தற்போது இதற்கு அதிபர் டிரம்ப் பதில் கடிதம் அனுப்பி உள்ளார். கடந்த கிறிஸ்துமஸ் அன்று பதில் கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது. இதை அந்த சிறுமி வீட்டு வாசலில் வந்து அதிகாரிகள் கொடுத்து இருக்கிறார்கள்.

என்ன சொன்னார்
அந்த கடிதத்தில் ''பள்ளி மாணவர்களை காக்க வேண்டியது என் கடமை. அமெரிக்காவில் இருக்கும் ஒவ்வொரு நபர்களையும் காக்க நான் நடவடிக்கை எடுப்பேன். பள்ளிகளை, மாணவர்கள் சந்தோசமாக வாழும் இடமாக பார்த்துக் கொள்வேன்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

மீண்டும் கடிதம்
இதற்கு ஏவா பதில் கடிதம் அனுப்பி இருக்கிறாள். அதிபருக்கு அதில் நன்றி என்று குறிப்பிட்டு உள்ளார். அதிபருக்கு அந்த சிறுமி எழுதிய கடிதம் மிகவும் பிடித்து இருந்ததாகவும், அந்த கடிதத்தால் அவர் அதிகம் பாதிக்கப்பட்டார் என்றும் அவர் வெள்ளை மாளிகை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளார்கள்.












Click it and Unblock the Notifications