வெனிசுலா அரசை கலைக்க "ஹீரோக்களை" அனுப்பிய டிரம்ப்.. கையும் களவுமாக சிக்கினர்.. மதுரோவின் ஷாக் புகார்

இரண்டு முன்னாள் அமெரிக்க ராணுவ வீரர்கள் வெனிசுலாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

கராக்கஸ்: முன்னாள் அமெரிக்க ராணுவ வீரர்கள் இரண்டு பேர் வெனிசுலாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவின் ஆட்சியை கவிழ்க்க இவர்கள் சதி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் பெருமைமிகு தயாரிப்புகளில் ஒன்றான அமேசான் பிரைம் வெளியிட்ட சீரியல்களில் ஒன்றுதான் ஜாக் ரேயான் சீரியல். இதன் இரண்டாவது சீசனை அமெரிக்காவிற்கும் - வெனிசுலாவிற்கும் இடையில் உள்ள பிரச்சனையை மையமாக வைத்து எடுத்து இருப்பார்கள். சீரியலின் ஹீரோ ஜேக் ரேயான் வெனிசுலா உள்ளே புகுந்து புரட்சி செய்வது போல கதை செல்லும்.

அந்த நாட்டிற்கு உள்ளே சென்று மிக மோசமான அந்நாட்டு அதிபரை நீக்கிவிட்டு, ஆட்சியை கவிழ்த்துவிட்டு அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஹீரோ வெளியேறுவது போல கதை முடியும். அதே விஷயம் தற்போது வெனிசுலாவில் நடந்துள்ளது. என்னவொன்று ஹீரோக்கள் அங்கிருந்து தப்பிப்பதற்கு பதிலாக வெனிசுலா அதிபரிடம் நன்றாக மாட்டிக்கொண்டுள்ளனர்.

நடந்தது என்ன?

நடந்தது என்ன?

வெனிசுலாவின் அதிபராக ஹுயூகோ சாவேஸ் இருந்தவரை எல்லாம் அந்த நாட்டில் சரியாகவே சென்று கொண்டு இருந்தது. உலகில் அதிக தங்கம் வைத்திருக்கும் அந்த நாட்டின் பொருளாதாரமும் சரியாக இருந்தது. ஆனால்
2013ல் ஹியூகோ சாவேஸ் பலியாகவே அந்த இடத்திற்கு அதிபராக நிகோலஸ் மதுரோ வருகிறார். நிகோலஸ் மதுரோ ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அந்நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக சரிந்தது. பண மதிப்பு பூஜ்ஜியத்திற்கு கீழே சென்றது.

தேர்தலில் தோல்வி

தேர்தலில் தோல்வி

இதனால் மக்கள் அவர் மீது கடும் கோபத்தில் இருக்க 2016ல் நடந்த அதிபர் தேர்தலில் நிகோலஸ் மதுரோ தோல்வி அடைந்தார். ஆனால் தனது பதவியை நிகோலஸ் மதுரோ விட்டுக்கொடுக்காமல், நாடாளுமன்றத்தில் இன்னொரு அவையை உருவாக்கி, அந்த அவை மூலம் மெஜாரிட்டியை பொய்யாக நிருபித்து ஆட்சியில் இருந்து வருகிறார். 2013ல் இருந்து இந்த பிரச்சனைதான் நடந்து வருகிறது. இடையில் 2018 தேர்தலிலும் அவர் முறைகேடாக வென்றதாக புகார் உள்ளது.

 அமெரிக்கா ஆதரவு

அமெரிக்கா ஆதரவு

இதில் அமெரிக்கா எங்கே வந்தது என்று கேட்கலாம். தற்போது வெனிசுலாவில் எதிர்க்கட்சியாக இருக்கும் பாப்புலர் வில் கட்சியின் ஜான் கைடோ அமெரிக்காவிற்கு நெருக்கம் ஆனவர். இவர் தன்னை அதிபர் என்று அறிவித்துக்கொண்டு வலம் வருகிறார்கள். இதனால் அங்கு நிகோலஸ் மதுரோ அதிபரா அல்லது ஜான் அதிபரா என்ற சண்டை வந்துள்ளது. இந்த நிலையில் ஜானை அதிபராக்கிவிட்டு, நிகோலஸ் மதுரோவை ஆட்சியில் இருந்து அகற்ற அமெரிக்கா பல வருடமாக முயன்று வருகிறது.

அமெரிக்கா முயற்சி

அமெரிக்கா முயற்சி

இதனால்தான் வெனிசுலா மீது அமெரிக்கா கவனம் செலுத்த காரணம், அந்நாட்டு ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கவும் காரணம். இந்த நிலையில்தான் வெனிசுலாவில் இரண்டு நாட்களுக்கு முன், அமெரிக்காவை சேர்ந்த ஐரன் பெரி மற்றும் லுக் டென்மென் ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டார்கள். முன்னாள் அமெரிக்க ராணுவ வீரர்களான இவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர். இதுதான் அங்கு தற்போது பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது.

யார் இவர்கள் என்ன புகார்

யார் இவர்கள் என்ன புகார்

இவர்கள் குறித்து செய்தியாளர் சந்திப்பில் மதுரோ வெளிப்படையாக புகார் அளித்துள்ளார். அதில், இந்த 2 பேரும் முன்னாள் அமெரிக்க ராணுவ வீரர்கள். கொலம்பியாவில் இருந்து கடல் மூலமாக மகோடோ நகரத்திற்கு வந்துள்ளனர். அங்கிருந்து வெனிசுலா தலைநகர் கராக்கஸ் உள்ளே வந்து தாக்குல் நடத்தி புரட்சி செய்ய திட்டமிட்டுள்ளனர். இங்கிருக்கும் கிளர்ச்சியாளர்கள் குழுவிடம் ஆயுதங்களை வழங்கி புரட்சி செய்ய திட்டமிட்டனர். வெனிசுலாவிற்குள் வந்து ஹீரோயிசம் செய்ய முயன்றனர்.

கைது செய்துவிட்டோம்

கைது செய்துவிட்டோம்

ஆனால் நாங்கள் இவர்களை கைது செய்துவிட்டோம் என்று மதுரோ குறிப்பிட்டுள்ளார். இவர்கள் இருவரின் அமெரிக்கா பாஸ்போர்ட்டை ஆதாரமாக வெனிசுலா அதிபர் மதுரோ காட்டி இருக்கிறார். அதோடு மிக முக்கியமாக, நாங்கள் மதுரோ ஆட்சியை கவிழ்க்கத்தான் வெனிசுலாவிற்குள் வந்தோம் என்று அந்த இரண்டு பேரும் வாக்குமூலம் அளிக்கும் வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

மறுப்பு தெரிவித்தார்

மறுப்பு தெரிவித்தார்

ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் இதை அப்படியே மறுத்துள்ளார். நான் அமெரிக்காவில் இருந்து யாரையும் அங்கே அனுப்பவில்லை. வெனிசுலா ஆட்சியை கவிழ்க்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. அவர்கள் முன்னாள் ராணுவ வீரர்கள் என்கிறார்கள். இப்போது அவர்கள் ராணுவத்தில் இல்லை. அவர்களின் செயலுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது. இதுகுறித்து விசாரிப்போம் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மதுரோ புகார்

மதுரோ புகார்

ஆனால் மதுரோ உறுதியாக இது டிரம்பின் செயல்தான். என்னுடைய ஆட்சியை கவிழ்க்க இது அவர்கள் செய்யும் திட்டம் என்று கூறுகிறார். இன்னொரு பக்கம் இது தொடர்பாக வேறு தகவலும் வெளியாகி உள்ளது. அதன்படி எதிர்க்கட்சியாக இருக்கும் பாப்புலர் வில் கட்சியின் ஜான் கைடோ தனியார் அமைப்பு மூலம் இந்த இருவரை அனுப்பி உள்ளார் என்றும் கூறுகிறார்கள். மதுரோ ஆட்சியை கவிழ்க்க ஜான் இப்படி செய்துள்ளார் என்கிறார்கள்.

ஆட்சி கவிழ்ப்பு திட்டம்

ஆட்சி கவிழ்ப்பு திட்டம்

அதன்படி அமெரிக்காவில் ஜோர்டன் கவ்டெர் என்ற முன்னாள் அமெரிக்கா ராணுவ வீரரின் கீழ் ஒரு தனியார் பாதுகாப்பு படை குழு இயங்கி வருகிறது. இவர்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் ஜான் கைடோ காசு கொடுத்துள்ளார். மதுரோவிற்கு எதிராக புரட்சி செய்ய படைகளை அனுப்பும்படி காசு கொடுத்துள்ளார் என்கிறார்கள். ஜோர்டன் கவ்டெர் கூட, ''அந்த இரண்டு பேரும் எனக்கு கீழ் வேலை பார்க்கும் நபர்கள்தான்'' என்று ஒப்புக்கொண்டுள்ளார்.

சிக்கல்

சிக்கல்

ஆனால் ஜோர்டன் கவ்டெர் ஒப்புக்கொள்வதை மதுரோ ஏற்கவில்லை. கண்டிப்பாக இது டிரம்ப் செய்த வேலைதான். தனியார் அமைப்பு எல்லாம் இதில் தலையிடவில்லை. இதை அந்த இரண்டு பேரும் ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களை விடுதலை செய்ய மாட்டோம் என்று கூறியுள்ளார். இரண்டு முன்னாள் அமெரிக்க ராணுவ வீரர்கள் இப்படி ஏழ்மையான வெனிசுலாவில் கைதிகளாக அடைபட்டு கிடப்பது அமெரிக்காவிற்கு பெரிய இழுக்காக பார்க்கப்படுகிறது. இதற்கு டிரம்ப் எப்படி பதிலடி கொடுக்க போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+