வெடிக்கும் 3வது உலகப்போர்! புதினுக்கு பாடம் புகட்ட வேண்டும்.. உச்சக்கட்ட உஷ்ணத்தில் டிரம்ப்!
வாஷிங்டன்: சமீபத்தில் புதின் வீட்டை குறி வைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதலை நடத்தியிருந்ததாக செய்தி வெளியாகியிருந்தது. ஆனால் அது உண்மையில்லை என்று அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ கண்டுபிடித்திருக்கிறது. எனவே, புதின் மீது டிரம்ப் கடும் கோபத்தில் இருப்பதாகவும், புதினுக்கு பாடம் புகட்டும் விதமாக சில அதிரடி நடவடிக்கையில் அவர் இறங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே போர் நடந்து வருகிறது. சர்வதேச போர் விதிகளின்படி, போரில் நேரடியாக பங்கேற்காதவர்கள் மீது தாக்குதல் நடத்துவது குற்றம்.

போர் குற்றம்
புதின் ரஷ்யாவின் முப்படைகளின் தளபதி. எனவே அவர் பொதுமக்களில் ஒருவர் கிடையாது. ஆகவே அவர் மீது தாக்குதல் நடத்த அனுமதி உண்டு. இருந்தாலும், அவர் தங்கியிருக்கும் வீடு என்பது பொதுமக்களின் குடியிருப்பு பகுதி என்றே கருதப்படுகிறது. ராணுவ மையத்தில், போர் களத்தில், காரில், அதிபர் மாளிகையில் புதின் இருந்தால் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டாலும் அது போர் குற்றமாக கருதப்படாது. ஆனால், நோவ்கோரோட் பகுதியில் அமைந்திருக்கும் புதினின் வீடு, பொது மக்கள் குடியிருப்பு பகுதி என்று சொல்லப்படுகிறது.
உக்ரைன் தாக்குதல்
இங்குதான் டிச.28-29ம் தேதிகளில் உக்ரைன் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்த முயற்சித்திருக்கிறது. மொத்தம், 91 ட்ரோன்கள் இந்த தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு ட்ரோனிலும் 6 கிலோ வரை வெடிபொருட்கள் இருந்துள்ளன. இதை வைத்து ஒரு பெரிய ராணுவ தலைமையகத்தை தரைமட்டமாக்க முடியும். ஆனால் நல்வாய்ப்பாக அனைத்து ட்ரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கின்றன. இப்படி இருக்கையில் இதனை பயங்கரவாத சதி செயல் என்று ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.
சிஐஏ
இந்த விவகாரம் குறித்து விசாரிக்க களமிறங்கிய சிஐஏ, உக்ரைன் ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இல்லை. போர் தொடர்பான அமைதி பேச்சுவார்த்தையை சீர்குலைக்க ரஷ்யா செய்யும் சதி இது என்று விமர்சித்திருக்கிறது.
இப்படி இருக்கையில், நியூயார்க் போஸ்ட் புதினை சர்வாதிகாரி என்று விமர்சித்திருக்கிறது. இந்த விமர்சன தலையங்கத்தை டிரம்ப் தனது சோஷியல் மீடியாவில் ஷேர் செய்திருக்கிறார்.
டென்ஷன் ஆன டிரம்ப்
தலையங்கத்தில், "அமைதி பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் தயாராக இருந்தாலும், புதின் பொய்களையும், வெறுப்புகளையும் பரப்பி அமைதிக்கு தடையாக இருக்கிறார். சில நாட்களுக்கு முன்னர் அலாஸ்காவில் வைத்து புதினை டிரம்ப் சந்தித்திருந்தார். அங்கு புதினுக்கு அமைதிக்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இருப்பினும் அவர் அதை மதிக்கவில்லை. எனவே ரஷ்யாவுக்கு அதிக சலுகைகளை வழங்க கூடாது. கூடுதலாக கடுமையான பொருளாதாரத் தடைகளை போட வேண்டும். உக்ரைனுக்கு அதிக ஆயுதங்களை வழங்க வேண்டும்.
3ம் உலகப்போர்
உக்ரைனுக்கு எதிராக இருக்கும் டிரம்ப், மறுபுறம் ஈரான் மற்றும் வெனிசுலாவுக்கு சப்போர்ட் செய்கிறார். இதெல்லாம், டிரம்பின் திட்டங்களுக்கு இடையூறாக இருக்கிறது. இப்படி முட்டுக்கட்டை போடும் புதினிடம் இனி மென்மையை கடைபிடிக்க கூடாது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை அப்படியே டிரம்ப் ஷேர் செய்திருக்கிறார். இதன் மூலம், விரைவில் உக்ரைனை வைத்து ரஷ்யா மீது மிகப்பெரிய தாக்குதலை அமெரிக்கா திட்டமிட இருப்பதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் சந்தேகம் கிளப்பியிருக்கின்றனர். இது மூன்றாம் உலகப்போரை நிச்சயம் தொடக்கி வைக்கும் என்றும் எச்சரித்துள்ளனர்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications