வேணாம் ராங்கு.. நாங்க வேற மாறி கேங்கு! அமெரிக்காவை தொட்டால் அவ்வளவு தான்.. ஈரானை எச்சரித்த ட்ரம்ப்!
நியூயார்க்: இஸ்ரேல் காசா மீது தொடர் தாக்குதல் நடத்தி வந்த நிலையில் ஈரான் பக்கம் தனது பார்வையை திருப்பி உள்ளது. ஈரானும் இஸ்ரேலும் அடுத்தடுத்து தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வரும் நிலையில் அமெரிக்கா மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
கடந்த பல ஆண்டுகளாக இஸ்ரேல் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பிடையே தொடர் மோதல் நீடித்து வருகிறது 2023 ஆம் ஆண்டு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமார் ஆயிரம் பேர் கொல்லப்பட்ட நிலையில் இஸ்ரேல் மீது ஹமாஸ் போர் தொடுத்தது.
அதற்கு பிறகு, ஹமாஸ் இஸ்ரேல் இடையே கடுமையான மோதல் தொடர்ந்து வந்த நிலையில் பழைய கைதிகளை ஒப்படைப்பது என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடந்த டிசம்பர் மாதம் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

2023 அக்டோபரில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டு வந்த நிலையில், போர் நிறுத்தம் உலக நாடுகளிடையே ஒருவித நிம்மதியை ஏற்படுத்தியது. ஆனால் பணய கைதிகளை ஒப்படைக்கவில்லை என கூறி ஹமாஸ் மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் காசாவில் இஸ்ரேலிய படைகள் நடத்திய தீவிர தாக்குதலில் சுமார் ஆயிரக்கணக்கானோர் உயரிழந்திருக்கிறார்கள். அதில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இஸ்ரேல் தனது பார்வையை ஈரான் பக்கம் திருப்பி இருக்கிறது. திடீரென நேற்று முன்தினம் ஈரானின் ராணுவ தளம், அணு ஆயுத தயாரிப்புக்கு பயன்படும் யுரோனியத்தை செரிவூட்டும் மையம் ஆகியவற்றை குறி வைத்து வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் பலத்த சேதத்தை சந்தித்ததோடு ஈரானின் முக்கியமான ராணுவ தளபதிகள், படைப்பிரிவுகளை வழி நடத்தியவர்கள், முக்கிய விஞ்ஞானிகள் இறந்ததாக கூறப்படுகிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேம் ஆகியவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்தியதில் பலர் கொல்லப்பட்டதாகவும் ஏராளமானோர் காயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல் ஈரான் இடையே மோதல் வலுத்துவரும் நிலையில் ஈரான் மீதான தாக்குதல் வெறும் தொடக்கம் மட்டுமே என்றும் இனிமேல் தான் உண்மையான தாக்குதல் இருக்கும் எனவும் இஸ்ரேல் எச்சரித்து இருக்கிறது.
தொடர்ந்து ஈரானின் எண்ணெய் தயாரிப்பு மையங்களை குறி வைத்து இஸ்ரேல் தாக்கி வரும் நிலையில் ஈரானுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப். காரணம் ஈரான் மீது நடத்தி வரும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதனால் ஆதரவளிக்கும் நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் கூறி இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் இஸ்ரேலுக்கு உதவினால், உதவும் நாடுகளில் ராணுவம் கடற்படை தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் கூறி இருப்பது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை கடும் கோபமடைய செய்திருக்கும் நிலையில், தாக்குதலுக்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கூறியுள்ள டொனால்ட் டிரம்ப், அதே நேரத்தில் அமெரிக்காவை தாக்க நினைத்தால் முழு பலத்தையும் ஈரான் மீது காட்ட வேண்டி இருக்கும் என எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக பேசி உள்ள அவர்," ஈரான் மீது இஸ்ரவேல் நடத்தி வரும் தாக்குதலுக்கும் அமெரிக்காவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதே நேரத்தில் அமெரிக்கா மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் இதுவரை பார்க்காத வகையில் அமெரிக்காவில் ஒட்டுமொத்த ஆயுத பலத்தையும் ஈரான் மீது காட்ட வேண்டி இருக்கும். இருந்த போதும் இஸ்ரேல் மீதான போரை முடிவுக்கு கொண்டுவர முடியும்" என அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications