கண் முன்னே அடுத்தடுத்து விழுந்த கட்டிடங்கள்.. துருக்கியில் 2வது நிலநடுக்கம் எப்படி ஏற்பட்டது? ஷாக் வீடியோ
இன்று அதிகாலை துருக்கியில் 7.8 ரிக்டரில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. தெற்கு கிழக்கு துருக்கியில் இருக்கும் பகுதிகளில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட
ரோம்: துருக்கியில் இரண்டாவது முறையாக மாபெரும் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. முதல் நிலநடுக்கத்திலேயே 1300 பேருக்கும் அதிகமானோர் இறந்த நிலையில் இரண்டாவது நிலநடுக்கம் அதை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இன்று அதிகாலை துருக்கியில் இன்று காலை 7.8 ரிக்டரில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. தெற்கு கிழக்கு துருக்கியில் இருக்கும் பகுதிகளில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
காஹரமான்மார்ஸ் என்ற நகரத்தில்தான் இந்த நிலநடுக்கம் மோசமாக ஏற்பட்டு இருக்கிறது. தற்போது இரண்டாவது நிலநடுக்கமும் இதே பகுதியில் ஏற்பட்டு இருக்கிறது.
|
இரண்டாவது நிலநடுக்கம்
முதல் நிலநடுக்கம் 7.8 ரிக்டரில் பதிவாகி இருக்கிறது. துருக்கியில் அதிகாலை 5 மணி அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மக்கள் உறங்கிக்கொண்டு இருந்த நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட காரணத்தால் பலர் மீது வீடுகளின் பாகங்கள் விழுந்துள்ளது. இரண்டாவது நிலநடுக்கம் சற்று முன் ஏற்பட்டது. இரண்டாவது நிலநடுக்கம் 7.5 ரிக்டரில் பதிவாகி உள்ளது. முதல் நிலநடுக்கத்தின் மீட்பு பணிகள் நடந்து கொண்டு இருக்கும் நிலையிலேயே இரண்டாவது நிலநடுக்கம் அதே பகுதியில் ஏற்பட்டு உள்ளது.
|
அதிர்ச்சி
முதல் நிலநடுக்கத்தின் மீட்பு பணிகள் இன்னும் முடியவில்லை. இன்னும் பல ஆயிரம் பேர் வீடுகளுக்கும், கட்டிடங்களுக்கு உள்ளேயும் புதைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மொத்தம் 2888 குடியிருப்பு மொத்தமாக இடிந்து விழுந்து உள்ளன. இதில் 1000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் 5-6 மாடி குடியிருப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது நிலநடுக்கம் மக்கள் மீட்பு பணிகளை செய்து கொண்டு இருக்கும் போது நடந்து உள்ளது. அவர்களின் கண் முன்னே கட்டிடங்கள் விழுந்துள்ளன.
|
எங்கெல்லாம் பாதிப்பு
காஜியான்டெப், கஹ்ராமன்மாராஸ், ஹடாய், ஒஸ்மானியே, அதியமான், மாலத்யா, சன்லியுர்ஃபா, அதானா, தியர்பாகிர் மற்றும் கிலிஸ் ஆகிய துருக்கி நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த 10 நகரங்கள் மிக மோசமான பாதிப்பை அடைந்து உள்ளன. துருக்கி பொதுவாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் ஆக்டிவ் நிலநடுக்க பகுதியாகும். இங்கே 1999ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 17 ஆயிரம் பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. அதற்கு இணையான பாதிப்பு இந்த முறை ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த இரண்டாவது நிலநடுக்க வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
|
ரோம்
ரோம் காலத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட நினைவிடம் ஒன்றும் கூட இந்த நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. துருக்கி அருகே இருக்கும் சிரியா, எகிப்த், சைப்ரஸ், இத்தாலி ஆகிய நாடுகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. சிரியா எல்லையோர நகரங்கள், துருக்கியில் 10க்கும் மேற்பட்ட நகரங்கள் மொத்தமாக இந்த நிலநடுக்கத்தால் முடங்கி போய் உள்ளது. சிரியாவில் 470 பேர் இதுவரை அதிகாரபூர்வமாக பலியாகி உள்ளனர். துருக்கி நிலநடுக்கம் அதிகமாக ஏற்பட கூடிய இடம் ஆகும். யூரேசிய தட்டு மற்றும் ஆப்பிரிக்க மற்றும் அரேபிய தட்டுகள் எல்லாம் ஒரு இடத்தில் சந்திக்கும் பகுதிதான் துருக்கி. இதன் காரணமாக அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம் .
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications