துருக்கி அங்காரா கார் குண்டுவெடிப்பு- பலி எண்ணிக்கை 34ஆக உயர்வு; 125க்கும் மேற்பட்டோர் படுகாயம்
அங்காரா: துருக்கி தலைநகர் அங்காராவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.
துருக்கி தலைநகர் அங்காராவில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 27 பேர் பலியாகியுள்ள நிலையில் மேலும் 7 பேர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர். கிட்டதட்ட 125 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
At least five dead, 20 injured in #Ankara blast https://t.co/h5wqCPDIA2https://t.co/6pLHewTLMP
— Ruptly (@Ruptly) March 13, 2016
மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள கிளிலே சதுக்கம் பகுதியில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. வெடிகுண்டுகள் நிரம்பிய காரினை வெடிக்க செய்யப்பட்டுள்ளது.
பேருந்து நிலையத்தை அடுத்த பூங்கா அருகே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலில் பேருந்து உட்பட பல்வேறு வாகனங்கள் சிக்கிக் கொண்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகின்றது.
தாக்குதல் நடைபெற்ற பகுதியானது அமைச்சர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் குடியிருப்புகள் உள்ள இடம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலை தொடர்ந்து பிரதமர் அஹ்மெத் தாவுதோக்ளு அவசர பாதுகாப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். கடந்த 5 மாதத்தில் நடைபெற்ற 3 ஆவது பெரிய தாக்குதல் இதுவாகும்.

-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications