"100 கோடி ஆண்டுகளில் முதல்முறை!" இனி உலகமே மொத்தமாக மாற போகுது! வியக்கும் ஆய்வாளர்கள்! என்ன மேட்டர்?
வாஷிங்டன்: கடந்த 100 கோடி ஆண்டுகளில் முதல் முறையாக இரண்டு வெவ்வேறு உயிரினங்கள் ஒரே உயிரினமாக இணையும் அதிசய நிகழ்வு நடந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இந்த உலகம் பல்வேறு அசிதயங்கள் வினோதங்கள் நிறைந்ததாகவே இருக்கிறது. பல சமயம் இயற்கையில் நடக்கும் விஷயங்கள் நமக்கு பெரும் வியப்பைத் தருவதாகவே அமைகிறது.

அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. கடந்த நூறு கோடி ஆண்டுகளில் இதுபோன்ற நிகழ்வு நடப்பது இதுவே முதல்முறையாகும். இது வரும் காலத்தில் பல மாற்றங்களுக்குக் காரணமாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
முதல்முறை: அதாவது நூறு கோடி ஆண்டுகளில் முதல்முறையாக இரண்டு உயிர்கள் ஒரே உயிரினமாக ஒன்றிணைந்துள்ளன. இதை ஆய்வாளர்கள் பிரைமரி எண்டோசைம்பியோசிஸ் என்று குறிப்பிடுவார்கள்.

இந்த பூமி உருவானது முதல் இதற்கு முன்பு வரை இரண்டே இரண்டு முறை மட்டுமே இந்த எண்டோசைம்பியோசிஸ் நிகழ்வு நடந்துள்ளது. முதல்முறை நடந்த போது மைட்டோகாண்ட்ரியா என்று சிறு உயிரினம் உருவானது. இதுவே அடுத்தடுத்து பல்வேறு வகையான உயிர்களும் தோன்ற வழிவகுத்தது. அடுத்து இரண்டாவது முறை ஏற்பட்ட போது அது தன் தாவரங்களின் தோற்றத்திற்கு வழிவகை செய்தது.
எந்த இரு உயிரினங்கள்: இதற்கிடையே சர்வதேச ஆய்வாளர்கள் இப்போது மீண்டும் இதுபோன்ற நிகழ்வு நடப்பதை உறுதி செய்துள்ளனர். கடலில் பொதுவாகக் காணப்படும் ஒரு பாசி வகைக்கும் ஒரு பாக்டீரியத்திற்கும் இடையே தான் இந்த பரிணாம நிகழ்வு ஏற்படப் போகிறது.

இது குறித்து கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர் டைலர் கோலே கூறுகையில், "இந்த நிகழ்வு முதல்முறை நடந்த போது பல புதிய உயிரினங்கள் தோன்றின. அடுத்தடுத்து பல்வேறு உயிரினங்கள் தோன்ற இந்த மைட்டோகாண்ட்ரியா நிகழ்வு நடந்தது முக்கியமானது. அதன் பிறகு மீண்டும் நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை இந்த நிகழ்வு நடந்தது. அப்போது நடந்த நிகழ்வை குளோரோபிளாஸ்ட் எனக் குறிப்பிடுகிறோம். செடி, கொடி போன்ற தாவரங்கள் உருவாக இதுவே முக்கிய காரணமாகும்" என்றார்.
என்ன நடக்கும்: இந்தச் சூழலில் சுமார் 100 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இதேபோன்ற ஒரு நிகழ்வு நடக்க உள்ளது. இந்த செயல்பாடு போது பாசிக்கள் ஊட்டச்சத்துக்கள், ஆற்றல் மற்றும் பாதுகாப்பை வழங்கும்.. அதற்குப் பதிலாகப் பாக்டீரியா இத்துடன் இணையப் போகிறது. இதுவரை பாசிகளால் சில செயல்முறைகளைச் செய்ய முடியாமல் இருந்தது. இந்த செயல்முறைக்குப் பிறகு அவை எல்லாம் மாறும் எனத் தெரிகிறது.
கடந்த இரண்டு முறையும் இந்த நிகழ்வுக்கு பிறகு உலகில் பல மாற்றங்கள் நடந்துள்ளதால் இப்போதும் அதுவே நடக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். மேலும், இது பரிணாம வளர்ச்சி குறித்த புதிய புரிதலை வழங்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக இவை விவசாயத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
ஏன் முக்கியம்: நமது உலகம் இப்போது இருக்கக் கடந்த காலங்களில் நடந்த பிரைமரி எண்டோசைம்பியோசிஸ் நிகழ்வுகளே முக்கிய காரணமாக இருந்துள்ளது. இந்தச் சூழலில் இப்போது மூன்றாவது முறையாக இந்த பிரைமரி எண்டோசைம்பியோசிஸ் நிகழ்வு நடந்துள்ள நிலையில், அது பல வித பரிணாம மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications