நியூயார்க்கில் கொள்ளையர்கள் காரை வழிமறித்த 2 போலீஸ்காரர்கள் மீது துப்பாக்கி சூடு
நியூயார்க்: வழிப்பறி கொள்ளையர்கள் காரை வழிமறித்து நிறுத்த முயன்ற நியூயார்க் நகர போலீசார் இருவரை கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர்.
நியூயார்க், ப்ரோன்க்ஸ் பகுதியில் நேற்று இரவு, போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொள்ளை கும்பல் ஒன்று காரில் தப்பிவருவதாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது. எனவே, சந்தேகத்திற்கிடமான ஒரு காரை வழிமறித்தனர். ஆனால் காரில் இருந்த கொள்ளையர்கள், போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.

ரோந்து காரில் இருந்த போலீசாரை குறிவைத்ததுதான், இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் இரு போலீஸ்காரர்கள் காயமடைந்தனர். ஒருவருக்கு கையிலும், மற்றொருவருக்கு முதுகிலும் குண்டு பாய்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காயமடைந்த போலீசார் உடனடியாக, செயின்ட் பர்னாபாஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். சம்பவம் நடந்த இடத்தில் போலீசார் பரிசீலனை நடத்தியபோது, ஒரு துப்பாக்கியை கைப்பற்றியுள்ளனர். அந்த துப்பாக்கி, கொள்ளையர்களுடையதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
காயமடைந்த போலீசார் இருவருமே, உயிருக்கு ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications