இந்தோனேசிய நிலநடுக்கத்தில் 2 பேர் பலி... வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!
இந்தோனேசியாவில் அதிகாலையில் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜகார்டா: மக்கள் அதிகம் வசிக்கும் இந்தோனேசியாவின் ஜாவா தீவை மையமாகக் கொண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்த நிலையில் உயிருக்கு பயந்து மக்கள் இரவு முழுவதும் வீதிகளிலேயே காத்துக்கிடந்தனர்.
இந்தோனேசியாவின் ஜாவா தீவை மையமாகக் கொண்டு நேற்று இரவு இந்திய நேரப்படி இன்று அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது. தலைநகர் ஜகார்டாவில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோளில் 6.5ஆகு பதிவாகியுள்ள நிலநடுக்கமானது, ஜாவா சுமத்ரா தீவுக்கு மேற்கே கடலுக்கு அடியில் 91 கி.மீ. ஆழத்தில் உருவாகியுள்ளதாக அமெரிக்க ஜியாலஜிக்கல் சர்வே தெரிவித்துளள்து.

சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ஜாவாவின் கடற்கரையோர பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் 2 மணி நேரத்திற்கு பின்னர் எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் 40க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் இடிந்து விழுந்துள்ளதாக தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதுவரையிலும் நிலநடுக்கத்திற்கு 2 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இடிபாடுகளை அகற்றும் பணி தொடங்கினால் தான் அவற்றில் யாரேனும் சிக்கி இருக்கிறார்களா என்ற விவரங்கள் தெரிய வரும். மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள டாசிக்மாலயா, பன்கன்ட்ரன் மற்றும் சியாமிஸ் பகுதிகளில் நிலநடுக்கம் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
https://t.co/sC8JjAWKHT
— Flora Carol (@Floreins87) December 15, 2017
@ira_sutherland #earthquakeindonesia
நிலநடுக்கத்தால் பல மருத்துவமனை கட்டிடங்கள் குலுங்கியுள்ளன, இதனையடுத்து நோயாளிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். நிலநடுக்கம் பீதி காரணமாக மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications