முஸ்லீம் மாநாட்டில் பரபரப்பு... மேலாடையின்றி புகுந்து போராட்டம் நடத்திய 2 பெண்கள்
பாரீஸ்: பிரான்ஸில் நடந்த முஸ்லீம்கள் மாநாட்டின் இடையே புகுந்த மேலாடை இல்லாத இரண்டு பெண்கள் மேடையில் ஏறி கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த இரண்டு பெண்களையும் மாநாட்டு நிர்வாகிகளும், போலீஸாரும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
பெமென் என்ற பெண்கள் போராட்டக் குழுவினர்தான் இதை நடத்தி பரபரப்பைக் கிளப்பி விட்டனர்.

பிரான்ஸில் முஸ்லீம்கள் மாநாடு ஒன்று நடந்தது. அதில் பல முஸ்லீம் அறிஞர்கள், பேச்சாளர்கள் கலந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மனைவியரை அடிக்க ஆண்களுக்கு உரிமை உண்டா என்ற தலைப்பில் விவாதம் தொடங்கியது.
அப்போது திடீரென இரண்டு பெண்கள் மேடையேறி வந்தனர். இருவரும் மேலாடை இல்லாமல் இருந்தனர். அங்கிருந்த மைக்கைப் பிடுங்கி காற்றில் கைகளால் பன்ச் செய்தபடி கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேடையில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தனர்.
அந்த இரு பெண்களும் பெமென் என்ற பெண்கள் போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் இப்படித்தான் அடிக்கடி போராட்டங்களில் குதித்து பரபரப்பைக் கிளப்புவார்கள். குறிப்பாக மேலாடை இல்லாமல்தான் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.
தங்களது உடலில் தங்களது போராட்டத்துக்கான காரணத்தையும் அவர்கள் எழுதி வைத்திருந்தனர். அதன் அர்த்தம் யாரும் என்னை அடக்க முடியாது, அடிமைப்படுத்த முடியாது என்பதாகும்.
உடனடியாக விரைந்து வந்த பாதுகாவலர்கள் அப்பெண்களை அங்கருந்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று அப்புறப்படுத்தினர். அப்போது மாநாட்டு அமைப்பாளர் குழுவைச் சேர்ந்த ஒரு ஆண், அப்பெண்களில் ஒருவரை உதைத்தது மேலும் பரபரப்பைக் கூட்டியது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications