41 ஆண்டுகளுக்குப் பின் தென்சீனாவைத் தாக்கிய வீரியமான புயல் ‘ரம்மசுன்’- 18 பேர் பலி!
பீஜிங்: சீனாவைத் தாக்கிய ரம்மசுன் சூறாவளிப் புயலுக்கு இதுவரை 18 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த செவ்வாயன்று பிலிப்பைன்ஸ் நாட்டை ரம்மசுன் என்ற புயல் தாக்கியது. இதில் 94 பேர் பலியானார்கள். ஆனபோதும், சீற்றம் குறையான ரம்மசுன் புயல் சீனாவையும் தாக்கியது.
சீனாவின் தெற்கு கடலோரப் பகுதியில் உள்ள ஹைனன் தீவை மணிக்கு 216 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கிய இந்த புயலால் அப்பகுதியில் வசித்த 7 பேர் பலியாகினர்.

அங்கிருந்து வியட்நாம் நோக்கி நகரத் தொடங்கி, போகும் வழியில் சீனாவின் குவாங்சி பகுதியையும் ரம்மசுன் புரட்டிப் போட்டதில் இங்கு வசிக்கும் மேலும் 9 பேர் உயிரிழந்தனர். இரு பகுதிகளையும் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
சீனாவின் 41 ஆண்டுகால வானிலை ஆய்வு மைய வரலாற்றில் இவ்வளவு வீரியமான புயல் தெற்கு பகுதியில் இதுவரை வீசியதில்லை என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுவரை ரம்மசுன் புயலுக்கு சீனாவில் மட்டும் பலியானவர்களின் எண்ணிக்கை 18ஐத் தொட்டுள்ளதாக அச்செய்திகளில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications