அதிபர் பதவி ஏற்றதும் ட்ரம்ப் செய்யப்போகும் முதல் வேலை என்ன தெரியுமா?
வாஷிங்டன்: அதிபராக பதவி ஏற்றதும் முதல் வேலையாக பசிபிக் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை விலக்கிக் கொள்ளப் போவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். இந்த வெற்றி அவரே கூட எதிர்ப்பாராத ஒன்று. வரும் ஜனவரி மாதம் 20-ந் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக அவர் பதவி ஏற்கிறார்.

பதவி ஏற்ற கையோடு முதல் நாளில் அவர் கையெழுத்திடுவது எந்த கோப்பில், எதற்கு முன்னுரிமை என்பதை அவர் தெரிவித்துள்ளார்.
அதில் அவர், பதவி ஏற்கும் முதல் நாளில் 'டி.பி.பி.' என்று அழைக்கப்படுகிற பசிபிக் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை, விலக்கிக்கொள்ளப்போவதுதான் முதல் வேலை என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வர்த்தக ஒப்பந்தம், கடந்த ஆண்டு அமெரிக்கா, ஜப்பான், மலேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட 12 நாடுகளிடையே ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்துக்கு இன்னும் அந்தந்த நாடுகள் முறைப்படி ஒப்புதல் வழங்கவில்லை.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியூசிலாந்து நாட்டில் உள்ள ஆக்லாந்தில் 12 நாடுகளின் மந்திரிகள் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இது உலக பொருளாதாரத்தில் 40 சதவீத பங்களிப்பைக் கொண்டது.
இப்போது அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகும் அமெரிக்காவின் நடவடிக்கை, உள்நாட்டில் புதிய தொழிற்சாலைகளையும், வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்தித்தரும் என நம்புகிறார் ட்ரம்ப்.
அதே நேரத்தில் தேர்தலின்போது ட்ரம்ப் கூறி வந்த ஒபாமா கேர் சுகாதார காப்பீடு திட்டத்தை ரத்து செய்வது பற்றியோ, மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவது பற்றியோ எதுவும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications