இஸ்ரேல் உள்ளே பறந்த ட்ரோன்கள்.. சத்தமின்றி விழுந்த குண்டுகள்.. ஹிஸ்புல்லா நடத்திய சர்ப்ரைஸ் அட்டாக்!
டெஹ்ரான்: இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு ட்ரோன் தாக்குதல் நடத்தி உள்ளது. இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 இஸ்ரேல் படை வீரர்கள் பலியாகி உள்ளனர். இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையேயான மோதல் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. கடைசியாக கடந்த 2021ம் ஆண்டு அன்று 11 நாள் நடைபெற்ற போருக்கு பின்னர் பாலஸ்தீனத்தில் சற்றே அமைதி நிலவியது. தற்போது மோதல் மீண்டும் தீவிரம் அடைந்து உள்ளது.
ஈரான் - பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் - லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்புகள் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே மோதல் நடக்கின்றன. சமீபத்தில்தான் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொலை செய்யப்பட்டார். அவரது பதுங்கு குழியை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹசன் நஸ்ரல்லா கொலை செய்யப்பட்டார். ஈரானிய இன்பார்மர் இஸ்ரேலுக்கு கொடுத்த முக்கியமான உளவுத்துறை தகவலின் அடிப்படையில், இந்த தாக்குதலை நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

ஈரான் பதிலடி: இதற்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை பயன்படுத்தி இஸ்ரேல் மீது பலத்த தாக்குதலை நடத்தி சேதங்களை ஏற்படுத்தியது. லெபனான் போராளிக் குழுவான ஹெஸ்பொல்லாஹ்வின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் கொன்றதற்கு பதிலடியாக, அக்டோபர் 1ம் தேதி ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுக்கு இஸ்ரேல் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று அறிவித்து உள்ளது.
ஈரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுக்கு இஸ்ரேல் நாட்டின் பதிலடி மோசமாகவும் மற்றும் அதிர்ச்சி அளிக்கும் விதமாகவும் இருக்கும் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் தெரிவித்து உள்ளார்.
இஸ்ரேலை ஈரான் தாக்கி உள்ளது. இதற்கு பதிலடி கொடுக்க முடிவு செய்து உள்ளோம். எங்கள் தாக்குதல் ஆபத்தானதாகவும், துல்லியமாகவும், எல்லாவற்றிற்கும் மேலாக ஆச்சரியமாகவும் இருக்கும். என்ன, எப்படி நடந்தது என்று அவர்களுக்குப் புரியாது.
ஈரான் யோசிக்க முடியாத வகையில்.. யோசிக்க முடியாத இடத்தில் அவர்களை அடிப்போம். அவர்கள் முடிவுகளைப் பார்த்து ஆச்சர்யம் அடைவார்கள்.. அதிர்ச்சி அடைவார்கள், என்று இஸ்ரேல் படை வீரர்களுக்கு ஆற்றிய உரையின் போது கேலண்ட் கூறி உள்ளார்.
எங்களைத் தாக்குபவர்கள் பாதிக்கப்படுவார்கள் மற்றும் அதற்குரிய விலையைக் கொடுப்பார்கள் என்று உலகத்திற்கு தெரிய வேண்டும். அதை தெரியப்படுத்தும் விதமாக இந்த தாக்குதலை நடத்துவோம், என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் தெரிவித்து உள்ளார்.
ஹிஸ்புல்லா தாக்குதல்: இப்படிப்பட்ட நிலையில்தான் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு ட்ரோன் தாக்குதல் நடத்தி உள்ளது. இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 இஸ்ரேல் படை வீரர்கள் பலியாகி உள்ளனர்.
இஸ்ரேல் பாதுகாப்புப் படை தனது ட்விட்டர் பதிவில், "நேற்று, ஹிஸ்புல்லா அமைப்பால் ஏவப்பட்ட யுஏவி, எங்கள் ராணுவ தளத்தை தாக்கியது. இந்த சம்பவத்தில் 4 ஐடிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். ஐடிஎஃப் இழந்த குடும்பங்களின் துயரத்தில் பங்கு கொள்கிறது, அவர்களுடன் தொடர்ந்து எங்கள் அரசு இருக்கும். வதந்திகள் மற்றும் காயமடைந்த நபர்களின் பெயர்களைப் பரப்புவதைத் தவிர்க்கவும் மற்றும் குடும்பங்களை மதிக்கவும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என்று இஸ்ரேல் கூறி உள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications