ஈரான் விஷயத்தில் அமெரிக்காவை கழற்றிவிட்ட நட்பு நாடுகள்.. அப்போ சவுதி.. இப்போ பிரிட்டன்!

Subscribe to Oneindia Tamil

லண்டன்: ஈரானை ரவுண்டு கட்ட அமெரிக்கா தீவிரமாக முயன்று வருகிறது. ஆனால், ஈரானை தாக்க எங்கள் நாட்டின் வான்பரப்பை பயன்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என சவுதி அரேபியா கட் அன்ட் ரைட்டாக சொல்லிவிட்டது. இப்படி இருக்கையில் இந்த விஷயத்தில் பிரிட்டனும் அமெரிக்காவுக்கு எதிராக கருத்து தெரிவித்திருக்கிறது.

ஈரானிடம் அணுசக்தி இருக்கிறது. ரஷ்யாவின் உதவியால், தன்னிச்சையாக அணு சக்தியை பயன்படுத்தி தனது மின்சார தேவை மற்றும் ஆயுத தேவையை பூர்த்தி செய்ய ஈரான் திட்டமிட்டு வருகிறது. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறது. அதாவது, ஈரான் அணு சக்தியை வைத்துக்கொண்டு அணு குண்டை தயாரிக்கும். இது உலக நாடுகளுக்கு டேஞ்சர் என்று எதிர்த்து வருகிறது.

UK Blocks US

பிரச்சனை என்ன?

இப்படி இருக்கையில், தான் உருவாக்கியிருக்கும் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என ஈரானை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. ஒருவேளை ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்றாலோ, அல்லது ஒப்பந்த கையெழுத்துக்கு தாமதம் ஏற்படுகிறது என்றாலோ ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் டிரம்ப் மிரட்டியுள்ளார். வெறும் வாய் வார்த்தையோடு மட்டும் நிற்காமல், ஈரானுக்கு அருகே தனது 2 சக்திவாய்ந்த விமானம் தாங்கி போர்க்கப்பல்களை நிறுத்தியுள்ளார்.

இந்த விஷயம்தான் தற்போது சர்வதேச அளவில் ஹாட் டாப்பிக். எப்போது வேண்டுமானாலும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம். எனவே ஈரானும் உச்சக்கட்ட பதற்றத்தில் இருக்கிறது.

கழற்றிவிட்ட பிரிட்டன்

நிலைமை இப்படி இருக்கையில், பிரிட்டன் தரப்பிலிருந்து வந்திருக்கும் தகவல் டிரம்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது ஈரானை தாக்க, தனது கட்டுப்பாட்டில் உள்ள டியாகோ கார்சியா மற்றும் சாகோஸ் தீவுகளை பயன்படுத்திக்கொள்ள பிரிட்டன் அமெரிக்காவுக்கு அனுமதி கொடுக்கவில்லை என ப்ளூம்பெர்க் செய்தி ஊடகம் தெரிவித்திருக்கிறது. இதுதான் டிரம்பை டென்ஷன் ஆக்கியிருக்கிறது.

பிரிட்டன் தீவுகள்

ஈரானை தாக்குவது எனில், சவுதி, UAE போன்ற நாடுகளிலிருந்து அட்டாக் செய்வதுதான் ஈஸி. ஆனால், பதிலுக்கு ஈரானும் மிக எளிதாக இந்த நாடுகள் மீது தாக்குதலை நடத்தும். எனவே பாதுகாப்பான ஒரு இடத்தை அமெரிக்கா தேடி வந்தது. அப்படியான இடம்தான் இந்த டியாகோ கார்சியா மற்றும் சாகோஸ் தீவுகள். இந்திய பெருங்கடலில், அந்தமானுக்கு கீழே இந்த தீவுகள் இருக்கின்றன. இது இந்திய பெருங்கடலில் இருந்தாலும், கண்ட்ரோல் என்னவோ பிரிட்டனிடம்தான் இருக்கிறது.

அமெரிக்காவுக்கு சிக்கல்

இந்த தீவுகளுக்கும், ஈரானுக்கும் இடையே 4,000 கி.மீ தூரம் இருக்கிறது. இதை அமெரிக்காவின் B-2 ஸ்பிரிட் போன்ற விமானங்கள் எளிதாக கடந்து சென்று ஈரானை தாக்கும். ஆனால், பதிலுக்கு ஈரானால் இந்த விமானங்களை தாக்க முடியாது. 4000 கி.மீ தொலைவு என்பது அமெரிக்காவின் விமானங்களுக்கு பாதுகாப்பான தூரம்தான். எனவே இந்த தீவுகளை பயன்படுத்த டிரம்ப் கேட்டு வருகிறார். பிரிட்டன் அனுமதி இல்லாமல் ஒரேயொரு ஏவுகணையை கூட அமெரிக்காவால் இங்கு இருந்து ஏவ முடியாது.

குழப்பத்தில் டிரம்ப்

இப்படி இருக்கையில் பிரிட்டன் அமெரிக்காவுக்கு அனுமதியை வழங்கவில்லை. ஏற்கெனவே சவுதி, UAE போன்ற நாடுகளும் ஈரானை தாக்க தங்கள் வான்வெளியை பன்படுத்த அமெரிக்காவுக்கு அனுமதியில்லை என்று கூறிவிட்டன. அதேபோல, பாகிஸ்தானிலிருந்து, இந்தியாவிலிருந்து, ஆப்கானிஸ்தானிலிருந்த ஈரானை தாக்க முடியாது. இந்த நாடுகள் இதற்கு ஒப்புக்கொள்ளாது. எனவே என்ன செய்வது என தெரியாமல் டிரம்ப் குழம்பியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+