"டூம்ஸ் டே".. குடும்பத்தை ரகசிய பங்கருக்கு அனுப்பிய புடின்! ரஷ்யா அதிர்ச்சி திட்டம்? நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புடின் அணு ஆயுத ஒத்திகை பார்க்கும்படி தனது நாட்டு ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக ஐரோப்பா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டெய்லி மெயில், மிரர் யுகே ஆகிய செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள இந்த செய்திகளில் சில அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் அடங்கி உள்ளன.

உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்தே மேற்கு உலக நாடுகள் பல ரஷ்யாவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. முக்கியமாக மேற்கு உலக நாடுகளின் செய்தி நிறுவனங்கள் புடின் குறித்த கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றன.

அதேபோல் அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளின் உளவு நிறுவனங்கள் கூட, புடின் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல செயல்படுகிறார். அவர் விரக்தியில் இருக்கிறார் என்று கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றன. அதில் தற்போது புதிய வரவாக அவரின் குடும்பத்தை பற்றிய செய்தி வெளியாகி உள்ளது.

புடின் குடும்பம்

புடின் குடும்பம்

புடின் எப்போதும் தனது குடும்பத்தை ரகசியமாகவே வைத்து இருக்கிறார். அதோடு தனது மகள்களை அவர் வெளி உலகத்திற்கு காட்டியதே இல்லை. இவரின் ஒரு மகள் ரஷ்யா சார்பாக ஒலிம்பிக்கில் கலந்து கொண்டதாக சில வருடங்கள் முன் செய்திகள் வந்தன. ஆனால் அதை ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி உடனே மறுத்தது. இவரின் மகள்கள் எங்கே இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்ற குழப்பம் நிலவி வருகிறது.

ரகசியம்

ரகசியம்

இந்த நிலையில்தான் ரஷ்ய அதிபர் புடின் தன்னுடைய குடும்பத்தை ரகசியமான இடத்திற்கு இடம்மாற்றி உள்ளதாக டெய்லி மெயில், மிரர் யுகே ஆகிய நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி ரஷ்யா இப்போது அணு ஆயுத போருக்கு தயாராகிக்கொண்டு இருக்கிறது. அணு ஆயுதங்களை பயன்படுத்த வசதியாகவே அந்த நாடு ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை ஏவி வருகிறது.

அணு ஆயுதம்

அணு ஆயுதம்

வரும் நாட்களில் அணு ஆயுதங்களை ஏவ வசதியாக இப்படி செய்கின்றது. போரில் தற்போது ரஷ்யா பின்தங்கி உள்ள நிலையில், ரஷ்யாவை வெற்றிபெற வைக்கும் வகையில் அந்த நாடு அணு ஆயுதத்தை பயன்படுத்தலாம். ஏற்கனவே பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுவிட்டதால் அணு ஆயுதத்தை பயன்படுத்தினாலும் ரஷ்யாவிற்கு அதனால் புதிய பாதிப்பு ஏற்பட போவதில்லை என்பதால் அந்த நாடு அணு ஆயுதத்தை பயன்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன என்று டெய்லி மெயில், மிரர் யுகே செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அணு ஆயுத போர்

அணு ஆயுத போர்


அதோடு அணு ஆயுத போர் நடக்கும் பட்சத்தில் ரஷ்யா மிக அருகில் இருப்பதால் அதிபர் மற்ற எல்லையில் உள்ள மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இதை கருதி புடினை பாதுகாப்பு ஒத்திகை நடத்தும்படி அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளதாம். அந்நாட்டு முன்னாள் அதிபரும், தற்போதைய பாதுகாப்பு தலைவருமான டிமிட்ரி மஹாதேவ்தான் இந்த அறிவுறுத்தலை புடினுக்கு செய்து இருக்கிறாராம்.

அணு ஆயுத தாக்குதல்

அணு ஆயுத தாக்குதல்

அணு ஆயுத தாக்குதலுக்கு வாய்ப்பு உள்ளது. அதனால் பாதுகாப்பு ஒத்திகைக்கு இவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.அதோடு புடினின் மொத்த குடும்பமும் சைபீரியாவில் உள்ள உயர்ரக பங்கர் ஒன்றில் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு இருக்கும் அட்லாய் மலைப்பகுதியில் இவர்களை புடின் ரகசியமாக வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதோடு புடின் ஒருவேளை அணு ஆயுத தாக்குதல் நடத்தினால், சில நாட்கள் பூமியில் இல்லாமல் சொகுசு விமானத்தில் பாதுகாப்பாக வானத்தில் பறந்தபடி இருக்க வாய்ப்புள்ளது என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended Video

    Russia-வுக்கு China உதவினால்.. | Joe Biden, Xi Jinping discuss Ukraine Issue | Oneindia Tamil
    எஸ்கேப் திட்டம்

    எஸ்கேப் திட்டம்

    மொத்தத்தில் புடின் தனது எஸ்கேப் திட்டத்தையும், போர் மோசமாக சென்றால் என்ன செய்வது என்பதற்கான எண்ட் கேமையும் முடிவு செய்துவிட்டதாக ஐரோப்பிய ஊடகங்கள் செய்தியில் தெரிவித்து இருக்கின்றன. இவர் அடுத்த கட்ட முடிவு என்ன எடுப்பார். எப்படி செயல்படுவார் என்று தெரியாமல் சர்வதேச உளவாளிகள் சிரமப்பட்டு வருவதாகவும். நெருக்கமான நபர்களிடமே புடின் பேசுவது இல்லை என்பதால், அவரின் முடிவுகளை கணிப்பது கடினம் ஆகி உள்ளதாகவும் அந்த செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+