இந்த உதடுதானே அவ கிட்ட முத்தம் வாங்குச்சு.. காதலன் வாயை பிளேடால் அறுத்த காதலி!
லண்டன்: இங்கிலாந்தில் தனது காதலன் இன்னொரு பெண்ணுக்கு முத்தம் கொடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து ஆத்திரமடைந்த அவரது காதலி, பிளேடை எடுத்து தனது காதலனின் வாயிலிருந்து காது வரைக்கும் அறுத்து விட்டார். ரத்தம் கொட்டக் கொட்ட காதலர் மருத்துவமனைக்கு ஓடினார். தற்போது அந்தக் காதலிக்கு இரண்டரை ஆண்டு சிறைத் தண்டனை கிடைத்துள்ளது.
வாய் கிழிந்து போன காதலுக்கு மருத்துவமனையில் தையல் போட்டு சிகிச்சை நடந்து வருகிறது. அந்தப் பெண்ணின் பெயர் ஜாய்லின் கன்னிங்காம். 30 வயதாகும் இவரது காதலர் பெயர் சீன் ஹார்மன். இருவரும் யார்க் நகரைச் சேர்ந்தவர்கள். காதலர்களும் கூட.

சம்பவத்தன்று தனது காதலை ஒரு பொது இடத்தில் வைத்துப் பார்த்துள்ளார் கன்னிங்காம். அப்போது ஹார்மன் இன்னொரு பெண்ணை கட்டிப்பிடித்தபடி நின்றிருந்தார். மேலும் அவருக்கு வாயோடு வாய் வைத்து முத்தமும் கொடுத்து படு "டீப்பான டிஸ்கஷனில்" இருந்துள்ளார்.
இதைப் பார்த்து கொந்தளித்து விட்டார் கன்னிங்காம். நேராக காதலனிடம் போன அவர், அவர்களைப் பிரித்து விட்டு கடுமையான சண்டையில் குதித்தார். வாய்ச் சண்டை முற்றவே பையில் வைத்திருந்த பிளேடை எடுத்து காதலன் வாயில் விட்டு காது வரைக்கும் சர்ரென்று இழுத்து வெட்டி விட்டார். வலியால் அலறித் துடித்த ஹார்மன் பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு 18 தையல்கள் போடப்பட்டது. ஆனால் வெட்டுக் காயம் நிரந்தரமாக வடுவாக இருக்கும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கன்னிங்காம் கைது செய்யப்பட்டார். அவரை யார்க் கிரவுன் கோர்ட்டில் போலீஸார் ஆஜர்படுத்தினர். முதலில் பேசும்போது தெரியாமல் கை பட்டு அதில் இருந்த மோதிரத்தால் காயம் ஏற்பட்டு விட்டதாக கூறினார் கன்னிங்காம். ஆனால் நீதிபதி, கை பட்டு இவ்வளவு பெரிய காயம் ஏற்படும் என்று கிடுக்கிப் பிடி போடவே உண்மையை ஒத்துக் கொண்டார் கன்னிங்காம்.
விசாரணைக்குப் பின்னர் கன்னிங்காமுக்கு இரண்டரை வருட சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications