Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வரக் கூடாது.. தடை விதித்த ரஷ்யா.. அதிரடி முடிவு

Subscribe to Oneindia Tamil

கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதில் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை ரஷ்யாவுக்குள் நுழைய அந்நாடு தடை விதித்துள்ளது. இவருடன் பிரிட்டனின் மூத்த அரசியல்வாதிகள், வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்துறை செயலாளர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா பிப்ரவரி மாதம் 24ந் தேதி முதல் போர் தொடுத்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலால் ஏராளமான பொதுமக்கள், உக்ரைன் வீரர்கள் பலியாகி உள்ளனர். இதனால் அந்நாட்டை விட்டு பொதுமக்கள் வெளியேறி வருகின்றனர்.

ரஷ்யாவின் இந்த போர் நடவடிக்கையை அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் எதிர்த்து வருகின்றன. இதற்கு ரஷ்யா செவிசாய்க்கவில்லை. இதனால் ரஷ்யாவை கட்டுப்படுத்தும் வகையில் அந்நாடு மீது அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கடும் பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

உக்ரைனில் பிரிட்டன் பிரதமர்

உக்ரைனில் பிரிட்டன் பிரதமர்

மேலும் தொடர்ச்சியாக ரஷ்யாவின் செயலை அமெரிக்க அதிபர் ஜோபைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோர் விமர்சனம் செய்து வருகின்றனர். ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதினை, அமெரிக்க அதிபர் ஜோபைடன் போர் குற்றவாளி என தாக்கி பேசினார். பிரிட்டன் பிரதமர் நேரிடையாக சில நாட்களுக்கு முன்பு உக்ரைன் சென்றார்.

கீவ் விதிகளில் கலந்துரையாடல்

கீவ் விதிகளில் கலந்துரையாடல்

அங்கு உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். மேலும் கீவ் நகரில் போரால் பாதிக்கப்பட்ட இடங்களை அவர் பார்வையிட்டு பொதுமக்களிடம் கலந்துரையாடினார். இதன் மூலம் உக்ரைனுடன் எப்போதும் ஆதரவாக இருப்போம் என்ற மெசேஜை போரிஸ் ஜான்சன், ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதினுக்கு கூறியிருந்தார்.

770 மில்லியன் பவுண்டுகள் உதவி

770 மில்லியன் பவுண்டுகள் உதவி

இதுபற்றி போரிஸ் ஜான்சன் கூறுகையில், "உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் உறுதியான தலைமை, தைரியத்துக்கு தலை வணங்குகிறேன். ரஷ்யப் படைகள் உக்ரைன் வீரத்துடன் எதிர்கொள்கிறது. பிரிட்டன் அரசு உக்ரைன் மக்களுடன் நிற்கும் என்பதை இன்று தெளிவுபடுத்தினேன். பல காலமாகவே எங்கள் நிலைப்பாடு இதுவாகவே இருந்து வந்துள்ளது. உக்ரைன் நாட்டிற்கான ராணுவ மற்றும் பொருளாதார உதவிகள் தொடரும்.
உக்ரைனை ஒரு சுதந்திர மற்றும் இறையாண்மை கொண்ட நாடாக இருக்க உறுதி செய்ய எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். உக்ரைன் நாட்டிற்கு 770 மில்லியன் பவுண்டுகள் உதவி செய்யப்படும்'' என்றார்.

ரஷ்யாவுக்குள் நுழைய தடை

ரஷ்யாவுக்குள் நுழைய தடை

போரிஸ் ஜான்சனின் இத்தகைய செயல் ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதினை கடுமையாக கோபப்படுத்தியது. இந்நிலையில் தான் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ரஷ்யாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை ரஷ்யா இன்று வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‛‛ரஷ்யாவை தனிமைப்படுத்தும் நோக்கத்தில் பிரிட்டன் பொய் பிரசாரங்களை செய்து வருகிறது. ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்கும் செயலில் ஈடுபடுகிறது. மேலும் உக்ரைன் நிலைமை பிரிட்டன் அரசு வேண்டுமென்றே மோசமாக்குகிறது. உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கி உதவி செய்வதோடு, நேட்டோ நாடுகளையும் ஒருங்கிணைக்கிறது. இதனால் தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என கூறியுள்ளது.

Recommended Video

    Russia-Ukraine crisis: Global Economical Impact | OneIndia Tamil
    யாருக்கெல்லாம் தடை

    யாருக்கெல்லாம் தடை

    அதில் போரிஸ் ஜான்சனுடன், அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் லிஸ் ட்ரஸ், பாதுகாப்புத்துறை செயலாளர் பென் வாலஸ், துணைப் பிரதமர் டொமினிக் ராப், போக்குவரத்து துறை செயலாளர் கிரான்ட்ஷாப்ஸ், உள்துறை செயலாளர் பிரிதி படேல், நிதி அமைச்சர் ரிஷி சுனக், தொழில்முனைவு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அமைச்சர் குவாசி குவார்டெங், டிஜிட்டல் மயமாக்கல், கலாச்சாரம், ஊடகம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாடின் டோரிஸ், ஆயுதப்படை அமைச்சர் ஜேம்ஸ் ஹீப்பி, ஸ்காட்லாந்தில் முதல் அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன்
    இங்கிலாந்து மற்றும் வேல்ஸிற்கான அட்டர்னி ஜெனரல் மற்றும் வடக்கு அயர்லாந்தின் அட்வகேட் ஜெனரல் சுயெல்லா பிராவர்மேன்
    கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்பியும், முன்னாள் பிரதமருமான தெரசா ஆகியோரும் ரஷ்யாவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+