வீரர்களே இல்லாமல் ரஷ்யாவை அலறவிடும் உக்ரைன்! புதினே எதிர்பார்க்காத சீக்ரெட் ஆயுதம் இறக்கிய ஜெலன்ஸ்கி
மாஸ்கோ: ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன், நேரடியாக வீரர்களை வைத்து போரிடாமல், ரோபோக்கள் மற்றும் ஆளில்லா இயந்திரங்களை வைத்து போரிட தொடங்கியுள்ளது. போரில் பெருமளவு இழப்புகளை ஏற்கனவே சந்தித்த உக்ரைன், மேற்கொண்டு இழப்பை தவிர்க்க இப்படியான புதிய யுக்தியை கையாள தொடங்கியுள்ளது.
உக்ரைனின் இந்த ஆயுதங்களை எளிதில் கண்டுபிடிக்க முடியாமல் ரஷ்ய வீரர்களும் திணறுகிறார்களாம். ஒவ்வொரு மாதமும் சுமார் 35,000 ரஷ்ய வீரர்களுக்கு உயிரிழப்பு அல்லது காயம் ஏற்படுத்தும் இலக்கை நிர்ணயித்து இந்த ஆயுதங்களை உக்ரைன் களமிறக்கியுள்ளது.

4 ஆண்டுகளாக நீடிக்கும் போர்
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் போர் வெடித்தது. உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்தது 4 ஆண்டுகள் ஆகியும் இந்த போர் தொடர்ந்து நீடித்துக்கொண்டே உள்ளது.
உக்ரைனில் கணிசமான இடங்களை ரஷ்யா கைப்பற்றிய போதிலும் உக்ரைனும் கடுமையான பதில் தாக்குதல் நடத்துவதால், ரஷ்யா நினைத்ததைவிட இந்த போர் தீவிரமாக சென்று கொண்டு இருக்கிறது. உக்ரைன் - ரஷ்யா போரால் பொருளாதார ரீதியாக பாதிப்பு, உயிர் சேதம் என பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா எவ்வளவோ முயற்சிகள் எடுத்தாலும் அதற்கு பலன் இல்லை.
ரோபோ தானியங்கி இயந்திர ஆயுதங்கள்
போதாக்குறைக்கு தற்போது ஈரான் - அமெரிக்கா இடையே போர் வெடித்ததால், அந்த ரஷ்யா போரில் அமெரிக்கா போதிய கவனம் செலுத்தவில்லை. இதனால், உக்ரைன் - ரஷ்யா இடையே மீண்டும் போர் தீவிரம் அடைந்துள்ளது. தங்கள் நாட்டின் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் கூறியுள்ளது. இதற்கிடையே, ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் பயன்படுத்தும் ஆயுதங்கள் பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று நடக்குது என்று சொல்வது போல, உக்ரைன் தங்கள் நாட்டு ராணுவ வீரர்களை களமிறக்காமல் ரோபோ, மற்றும் தானியங்கி இயந்திர ஆயுதங்களை உக்ரைனுக்கு எதிரான போர்க்களத்தில் பயன்படுத்த தொடங்கியுள்ளது. ராணுவ கமாண்டோக்கள், படைகளை நேரில் வழிநடத்துவதற்குப் பதிலாக கணினித் திரைகள், லைவ்ஸ்ட்ரீம்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல்களை ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றனர்.
தாக்குதல் எப்படி நடைபெறுகிறது?
இந்த தாக்குதல் எப்படி நடைபெறுகிறது என்றால், வெடிபொருட்கள் பொருத்தப்பட்ட ரோபோக்கள் ரஷ்ய நிலைகளை குறிவைத்து தாக்குகின்றன. ஒரு உக்ரைன் வீரர் கூட நேரடியாக களத்தில் காலடி எடுத்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை. ரோபோக்களை வைத்தே அனைத்து தாக்குதல்களும் நடத்தப்படுகின்றன. கட்டுப்பாட்டு மையங்களில் உள்ள கமோண்டாக்கள் அந்த ரோபோக்களை தொலைதூரத்திலிருந்து வழிநடத்தி தாக்குதல்களை மேற்கொள்கின்றனர்.
வெடிகுண்டுகளை சுமந்து சென்று தாக்கும் இந்த ரோபோக்களுக்கு சைலண்ட் டெத் என்று ரஷ்ய வீரர்களே பெயர் வைத்துள்ளதாக உக்ரைனிய வீரர்கள் கூறுகிறார்கள். போரின் துவக்கத்தில் இத்தகைய ரோபோ ஆயுதங்கள் கிடைத்து இருந்தால் பல உயிர்களை காப்பாற்றி இருப்பேன் என்று உக்ரைன் ராணுவ தளபதி ஒருவர் கூறினார்.
இந்த இயந்திரங்கள் மிகவும் அமைதியாக நகர்வதால், சுமார் 10 மீட்டர் தூரத்திற்கு வந்த பிறகுதான் அவற்றின் சத்தத்தைக் ரஷ்ய வீரர்களால் கேட்க முடிகிறது. ஆனால் இந்த தூரம் என்பது அபாய எல்லைக்குள் வந்துவிடும் நிலை என்றும் உக்ரைன் வீரர்கள் கூறுகிறார்கள். உக்ரைனின் இந்த முடிவுக்கு பின்னால் யுக்தி என்பதை விட அவசிய தேவையே மேலோங்கி நிற்பதாக தெரிகிறது. ஏனெனில், நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வரும் போரில், குறைந்த மக்கள் தொகை கொண்ட அந்த நாடு பெருமளவிலான உயிரிழப்புகளையும் சேதங்களையும் சந்தித்துள்ளது. இதனை தவிர்க்கவே ரோபோட்டிக் இயந்திரங்களை அதிகமாக உக்ரைன் சார்ந்துள்ளது.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications