சில்லு சில்லாய் சிதறிய போர்க்கப்பல்! தம்மாத்துண்டு ட்ரோனை வைத்து உக்ரைன் செய்த சம்பவம்! ரஷ்யா ஷாக்
டெல் அவிவ்: ரஷ்யா உக்ரைன் போர் கடந்த 2 ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில், இன்று ரஷ்ய கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பல் ஒன்றை உக்ரைன் ட்ரோன் மூலம் தாக்கி அழித்திருக்கிறது.
கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் இரண்டு ஆண்டுகளாக நீடித்து வருகிறது. ரஷ்யாவுக்கு எதிராக உள்ள அமெரிக்கா, நேட்டோ எனும் அமைப்பை உருவாக்கி அதில் ஒவ்வொரு ஐரோப்பிய நாடாக இணைத்துக்கொண்டே வந்தது. இப்படி இணைக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்க ராணுவ துருப்புக்கள் நிலைநிறுத்தப்படும். ஏறத்தாழ எல்லா ஐரோப்பிய நாடுகளும் இதில் இணைந்த நிலையில், ரஷ்யாவை ஒட்டியுள்ள உக்ரைனையும் இணைக்க அமெரிக்க முயன்றது.

இதற்கு உக்ரைனும் ஓகே சொல்ல அதற்கான வேலைகள் நடந்தன. அமெரிக்காவும்-உக்ரைனும் கைகோர்ப்பது இது தங்கள் நாட்டுக்குதான் ஆபத்தில் போய் முடியும் என ரஷ்யா முன்னரே கணித்திருந்தது. அதாவது உக்ரைனை தாண்டிவிட்டால் ரஷ்யாவுக்குள் நுழைந்து விடலாம். எனவே நேட்டோவில் இணைய கூடாது என்று உக்ரைனை ரஷ்யா தொடர்ந்து எச்சரித்து வந்தது. இருந்தும், ரஷ்யாவின் பேச்சை உதாசினப்படுத்தி, நேட்டோவில் நைசாக நுழைந்தவிடலாம் என உக்ரைன் தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. இந்த புள்ளிதான் போருக்கான தொடக்கம்.
கடந்த 2022ம் ஆண்டு உக்ரைனின் நடவடிக்கையை எதிர்த்து ரஷ்யா தீவிர போரில் இறங்கியது. போர் தீவிரமாக நடந்து வரும் நிலையில், தற்போது ரஷ்யாவின் போர்க்கப்பல் ஒன்றை உக்ரைன் அழித்திருக்கிறது. 'சீசர் குனிகோவ்' என்று அழைக்கப்படும் இந்த கப்பல், துறைமுகங்களின் உதவியின்றி நேரடியாக கடற்கரை வரை வர முடியும். கடற்கரையில் நேரடியாக பீரங்கிகள், டாங்கிகள், ராணுவ துருப்புகளை தரையிறக்கும் வகையில் இந்த கப்பல்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த கப்பலைதான் ட்ரோன் மூலம் தாக்கி உக்ரைன் ராணுவம் அழித்திருக்கிறது. உக்ரைனின் இராணுவ உளவுத்துறைதான் இந்த மிஷனை வெற்றிகரமாக முடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் ரஷ்யா-உக்ரைன் எல்லையான கிரிமியாவின் கருங்கடல் பகுதியில் நடந்திருக்கிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகளையும் உக்ரைன் ராணுவம் வெளியிட்டிருக்கிறது.
தனது போர்க்கப்பலை இழந்த விவகாரம் குறித்து ரஷ்யா இதுவரை வாய் திறக்கவில்லை. ஆனால் இது அந்நாட்டுக்கு பெரும் இழப்பு என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். ஏற்கெனவே கடந்த மாதம் பெல்கோரோட் பகுதியில் இலியுஷின்-76 எனும் ரஷ்ய விமானத்தை உக்ரைன் சுட்டு வீழ்த்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications