Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரஷ்யாவை நிலைகுலைய வைத்த உக்ரைன்.. எண்ணெய் கிணறுகளை குறி வைத்தது இதற்குத் தானா? இந்தியாவுக்கு ஆபத்து?

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: ரஷ்யா உக்ரைன் இடையே மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் தொடர்ந்து வரும் நிலையில் இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் ரஷ்யாவை குறி வைத்து உக்ரைன் நடத்திய அதிநவீன ட்ரோன் தாக்குதலில் ரஷ்யாவின் எண்ணெய் கிணறுகள், சுத்திகரிப்பு ஆலைகள், பெட்ரோல் பங்குகள் தரைமட்டமாகியுள்ளன. இதனால் செயின்ட்பீட்டர்ஸ்பக் உள்ளிட்ட பல இடங்களில் கடும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் இந்தியாவின் நிலையும் கேள்விக்குறியாகி உள்ளது.

நேட்டோ மற்றும் டான்பாஸ் பகுதிகளை காரணம் காட்டி உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா ராணுவம் கடந்த 2022 பிப்ரவரி மாதத்தில் போரை தொடங்கிய நிலையில், 3 ஆண்டுகள் முடிந்து 4ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள போதிலும், போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

உக்ரைன் மீது உடனான ரஷ்யாவின் போரால் உக்ரைன் நாட்டில் இருந்து சுமார் 45 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக குடியேறி வருகின்றனர். இதனால் அங்கு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.

Ukraine Drone Strikes Hit Russian

உக்ரைன் போர்

போரை நிறுத்த பல்வேறு உலக நாடுகளும் கோரிக்கை விடுத்த நிலையில் ரஷ்யா அதனை மறுத்து வருகிறது. குறிப்பாக ஐநா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கோரிக்கையை ரஷ்யா நிராகரித்து விட்டது. இதற்கிடையே உக்ரைன் மீது மீண்டும் தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி உள்ளது. ரஷ்யா தங்கள் மீது தாக்குதல் நடத்திவரும் நிலையில் அதற்கு பதிலடியாக உக்ரைன் மீது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. குறிப்பாக ரஷ்யாவுக்கு எண்ணை ஏற்றுமதி மிகப் பெரிய அளவில் கை கொடுக்கும் நிலையில் அதனை குறி வைத்து அதிநவீன ட்ரோன்கள் மூலம் உக்ரைன் தாக்குதல் நடத்தி வருகிறது.

ரஷ்யா பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு

இதனால் அங்கு கடும் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. ரஷ்யாவின் எண்ணெய் கிணறுகள், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் பெட்ரோல் பங்குகள் ஆகியவற்றை குறி வைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கும் நிலையில் கிரிமியா, செயின்ட்பீட்டர்ஸ்பக் உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் இன்னலை சந்தித்து இருக்கின்றனர். பெட்ரோல் பங்குகளில் இருந்து பல கிலோமீட்டர் நீளத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

அமெரிக்க எச்சரிக்கை

இந்த நிலையில் ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலைக்கு எண்ணெய் பெற்று வரும் இந்தியாவின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. ஏற்கனவே இந்தியாவிடம் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்து இருந்தார். ஆனால் அதனை இந்தியா ஏற்றுக்கொள்ளாத நிலையில் தான் 50% வரி விதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் தற்போது உக்ரைன் ரஷ்யாவின் எண்ணெய் உற்பத்தி மையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி இருக்கும் நிலையில் அதற்கு அமெரிக்கா பின்னணியில் இருந்து செயல்பட்டு இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

ரஷ்யா இந்தியா

அமெரிக்காவின் பேச்சை கேட்காதால், இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்யும் ரஷ்யாவின் இந்தியா உற்பத்தி தளங்களை உக்ரைன் மூலம் தாக்கி இருக்கலாம் என சொல்கின்றனர் உலக பொருளாதார நிபுணர்கள். அதே நேரத்தில் ரஷ்யாவிடம் இருந்து பெருமளவிலான இந்தியா இறக்குமதி பாதிக்கப்படும் என்பதால், இந்தியாவிலும் வரும் காலத்தில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படலாம் என சொல்லப்பட்டாலும் அரபு நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியா பெட்ரோல் மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதால் பிரச்சனை வராது என்றும் கணிக்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+