For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கீவ்வில் இறங்கிய ரஷ்ய படைகள்! அதிபர் அலுவலகத்தில் ஆஃப் ஆன விளக்குகள்.. என்ன நடந்தது! பரபர உக்ரைன்

Google Oneindia Tamil News

கீவ்: உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ச்சியாகப் போர் நடத்தி வரும் நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப். மாதம் முழு வீச்சில் போரை ஆரம்பித்தது. இந்தப் போர் 2 மாதங்களுக்கு மேலாகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

போர் ஆரம்பித்த போது, உக்ரைன் மிக விரைவில் ரஷ்யாவிடம் சரணடைந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், உக்ரைன் ராணுவம் துணிச்சல் உடன் போராடுவதால் போர் 2 மாதங்களுக்கு மேலாகத் தொடர்கிறது.

விடாது துரத்தும் ரஷ்யா! விட்டுக் கொடுக்காத உக்ரைன்! நேரடியாக களத்தில் இறங்குமா அமெரிக்கா? விடாது துரத்தும் ரஷ்யா! விட்டுக் கொடுக்காத உக்ரைன்! நேரடியாக களத்தில் இறங்குமா அமெரிக்கா?

 உக்ரைன் போர்

உக்ரைன் போர்

போர் தொடங்கிய போது நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் இரு தரப்பிற்கும் இடையே பெரியளவில் உடன்பாடு ஏற்படவில்லை. இருப்பினும், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இரு தரப்பிற்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து போர் விரைவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், திடீரென ரஷ்யப் பகுதியில் உக்ரைன் தாக்குதல் நடத்துவதாகக் கூறி, ரஷ்ய ராணுவம் தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்தி உள்ளது.

 உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

இதற்கிடையே சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யா ராணுவம் தன்னையும் தனது குடும்பத்தையும் கைப்பற்றத் தீவிரமாக முயல்வதாக பகீர் தகவலைத் தெரிவித்துள்ளது. உக்ரைன் போரின் தொடக்க நாட்களைக் குறிப்பிட்டுப் பேசும் போது, அதிபர் ஜெலன்ஸ்கி இந்தத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்து பிப்ரவரி 24ஆம் தேதி அன்று என்ன நடந்தது என்பது குறித்த தகவல்களை அதிபர் ஜெலன்ஸ்கி நினைவு கூர்ந்தார்.

 முதல் இலக்கு

முதல் இலக்கு

அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், "அன்றைய தினம் என்ன நடந்தது என்பதில் எனக்கு மிகவும் தெளிவாக ஞாபகம் உள்ளது. நானும் எனது மனைவி ஓலேனா ஜெலன்ஸ்கியும். எங்கள் 17 வயது மகள் மற்றும் 9 வயது மகனை எழுப்பிப் போர் தொடங்கிவிட்டது என்று கூறினோம். அப்போது எங்களைச் சுற்றி பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்துக் கொண்டே இருந்தது. அப்போதே நான் தான் அவர்களின் இலக்கு என்பது தெளிவாகி விட்டது. அதிபர் அலுவலகம் பாதுகாப்பானது இல்லை என்பதையும் நாங்கள் உணர்ந்து கொண்டோம்.

 ரஷ்யப் படைகள்

ரஷ்யப் படைகள்

அப்போது தான் எனது பாதுகாப்புப் படையினர் ஒரு தகவலைத் தெரிவித்தனர். என்னையும் எனது குடும்பத்தினரையும் பிடிக்க கீவ் நகரில் ரஷ்ய ஸ்டிரைக் டீம் பாராசூட் மூலம் நுழைந்ததாகக் கூறினர். அவர்களுக்கு எங்களைக் கொல்வது தான் இலக்கு. அன்றைய தினம் வரை இதுபோன்ற காட்சிகளைத் திரைப்படங்களில் மட்டுமே நாங்கள் பார்த்து இருந்தோம். இதையடுத்து என்னைச் சுற்றிப் பாதுகாப்பைப் பலப்படுத்தும் பணிகளை அதிகாரிகள் தொடங்கினர்,

 விளக்குகள் அணைக்கப்பட்டன

விளக்குகள் அணைக்கப்பட்டன

பின்புற நுழைவாயிலில் போலீஸ் தடுப்புகள் மூலம் தடுப்பு ஏற்படுத்தப்பட்டது. முதல் நாள் அன்று, பாதுகாப்பை உறுதி செய்ய அதிபர் அலுவலகத்தைச் சுற்றி இருந்த விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டது. அங்கிருந்த அனைத்து பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் புல்லட் ப்ரூப் உடைகளை அளித்தோம். அதிநவீனத் துப்பாக்கிகளையும் கொடுத்தோம். அன்றைய தினம் தொடங்கி இன்று வரை உக்ரைன் வீரர்கள் தாய்நாட்டைக் காக்கக் கடுமையாகப் போராடுகிறார்கள்" என்றார்.

Recommended Video

    India, China கொடுக்கும் தைரியம்..EU-வை ஒரு கை பார்க்கும் Russia | Oneindia Tamil
     2 முறை முறியடித்தோம்

    2 முறை முறியடித்தோம்

    இது தொடர்பாக உக்ரைன் ராணுவ புலனாய்வு அமைப்பின் மூத்த வீரர் ஒலெக்ஷ்ய் அரிஸ்டோவ்ய்ச், "அன்றைய தினம் அதிபர் அலுவலகத்தில் நடந்த அத்தனை காட்சிகளும் பைத்தியக்காரத்தனமாக இருந்தது. ஜெலன்ஸ்கியும் அவரது குடும்பத்தினரும் அதிபர் அலுவலகத்தில் இருந்த போதே, உள்ளே நுழைய முயன்ற ரஷ்யப் படைகளை நாங்கள் இரு முறை முறியடித்தோம்" என்றார். போர் தொடங்கிய சமயத்தில் உக்ரைன் நாட்டில் இருந்து வெளியேறி ஜெலன்ஸ்கிக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்தது. இருப்பினும், அதை அவர் நிராகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Ukraine's President Volodymyr Zelensky said that Russian troops came very close to capturing him and his family: (உக்ரைன் போர் குறித்து அதிபர் ஜெலன்ஸ்கி கூறிய முக்கிய கருத்துகள்) Volodymyr Zelensky shares what happens in initial days of Ukraine war.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X