"நாட்டை காக்க கடைசி வரை போராடுவோம்.." உறுதியுடன் நிற்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
கீவ்: உக்ரைன் நாட்டில் 3ஆவது நாளக போர் தொடரும் நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி புதிதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
மேற்குலக நாடுகள் எச்சரித்தபடியே உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போரைத் தொடங்கி உள்ளது. ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவின் பெயரில் முழு வீச்சில் ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த வியாழக்கிழமை தொடங்கிப் போர் மூன்று நாட்களாகத் தொடர்கிறது. உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் ரஷ்யா நுழையாமல் இருக்க உக்ரைன் ராணுவம் தொடர்ந்து போராடி வருகிறது.

உலக நாடுகள்
இதனிடையே ரஷ்யாவின் இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஏற்கனவே, அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகின்றன. உலகின் பெரும்பாலான நாடுகள் ரஷ்யா நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சர்வதேச அளவில் ரஷ்யாவை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புதிய தடை
சர்வதேச பரிவர்த்தனைகளை எளிதாக்கும் SWIFT பேமென்ட் முறையிலிருந்து ரஷ்யாவை விலக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக்கொள்ள இருப்பதாகப் பிரெஞ்சு அதிபர் அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். இதனிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இப்போது புதிதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சமாதானப் பேச்சுவார்த்தை தொடர்பாகத் துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாடுகளின் கருத்துகளை வரவேற்கும் வகையில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

உலக நாடுகளின் ஆதரவு
அந்த வீடியோவில் அதிபர் ஜெலன்ஸ்கி, "சர்வதேச வங்கி சங்கிலியில் இருந்து ரஷ்யாவைத் துண்டிக்கும் நியாயமான முடிவை அனைத்து ஐரோப்பிய நாடுகளையும் ஏற்றுக்கொள்ள வைக்க எங்கள் தூதர்கள் கடுமையாகப் போராடினர் போராடினர். அதில் வெற்றியையும் அடைந்துள்ளனர். இதன் மூலம் ரஷ்யாவுக்குப் பல பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது. நமது நாட்டின் மீது போர் தொடுத்தற்கான விலை இது. உலகின் அனைத்து நாடுகளின் ஆதரவையும் உக்ரைன் இப்போது வென்றுள்ளது இந்த SWIFT பேமென்ட் முறையில் இருந்து ரஷ்யா நீக்கப்பட்டுள்ளது முதற்கட்ட நடவடிக்கை தான்" என்றார்.

கடைசி வரை போராடுவோம்
நாட்டின் சுதந்திரத்திற்காகக் கடைசி வரை போராடுவோம் என்று குறிப்பிட்ட ஜெலன்ஸ்கி, நாட்டில் இப்போது எண்ணெய் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ரஷ்யா உடன் சமாதான பேச்சுவார்த்தை தொடர்பாகத் துருக்கி மற்றும் அஜர்பைஜானின் தெரிவித்துள்ள கருத்துகளை வரவேற்ற அதிபர் ஜெலன்ஸ்கி, இத்தாலியின் பிரதமர் உடனான பேச்சுவார்த்தை உக்ரைனுக்கு சர்வதேச ஆதரவில் முக்கியமானது எனக் குறிப்பிட்டார்

சுற்றிவளைத்துத் தாக்குதல்
முன்னதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் ஒரு போதும் ரஷ்யாவிடம் சரணடைய மாட்டோம் என்று தெரிவித்திருந்தார். இதனால் உக்ரைன் நாட்டை அனைத்து திசைகளில் இருந்தும் சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்தத் தனது ராணுவத்திற்கு ரஷ்யா உத்தரவிட்டுள்ளது. உக்ரைன் போரில் பிறப்பிக்கப்பட்டு இருந்த தற்காலிக இடைநிறுத்தல் உத்தரவும் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து தலைநகர் கீவ் நகரைப் பிடிக்க ரஷ்ய ராணுவம் தாக்குதலைத் தொடங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications