பல தலைமுறையானாலும் நீங்கள் மீள முடியாது.. ஜாக்கிரதை.. புடினுக்கு செலன்ஸ்கி வார்னிங்.. என்ன சொன்னார்?
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் உடனே பேச்சுவார்த்தையை நடத்தவில்லை என்றால் ரஷ்யா மிக மோசமான சேதங்களை சந்திக்கும் என்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் கடந்த ஒரு மாதமாக தீவிரமாக நடந்து வருகிறது. உக்ரைன் மீது கடந்த ஒரு மாதமாக தாக்குதல் நடத்தியும் கூட இன்னும் ரஷ்ய படைகள் பெரிய அளவில் முன்னேறவில்லை. முக்கியமாக தலைநகர் கீவ், கார்கிவ் பகுதிகளில் தீவிர தாக்குதல் நடத்தியும் ரஷ்யாவால் இந்த பகுதிகளை கைப்பற்ற முடியவில்லை.
எதிர்பார்த்ததை விட உக்ரைன் படைகள் இதில் அதிக எதிர்ப்பை காட்டி வருவதால் ரஷ்ய படைகள் திணற தொடங்கி உள்ளன.

ரஷ்யா உக்ரைன்
இந்த நிலையில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி செய்தியாளர் சந்திப்பில் பேசிய போது பல்வேறு கோரிக்கைகளை வைத்தார். அதில், ரஷ்ய படைகள் இந்த போரில் கடுமையான சேதங்களை சந்தித்துள்ளது. இதனால் தற்போது எங்கள் மீது கடுமையான தாக்குதல்களை ரஷ்ய படைகள் ஏவி விட்டுள்ளது. தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலில் இருந்து எங்கள் ஐரோப்பிய நாடுகளை பாதுகாக்க வேண்டும். ஐரோப்பாவில் இருக்கும் அலிகார்க்ஸ் சொத்துக்கள் முடக்கப்பட்ட வேண்டும்.

ஐரோப்பா
ஐரோப்பாவில் மட்டுமின்றி ஸ்விஸ் வங்கியில் இருக்கும் அலிகார்க்ஸ் சொத்துக்கள் முடக்கப்பட வேண்டும். அங்கு அலிகார்க்ஸில் பலர் முதலீடு செய்துள்ளனர். அவர்களின் பணம் இந்த போருக்கு பின் இருக்கிறது. இதை ஸ்விஸ் நாட்டு அரசு உடனடியாக முடக்க வேண்டும். அவர்களின் அழுத்தத்தின் பெயரில்தான் ரஷ்யா இந்த போரை நடத்துகிறது. அலிகார்க்ஸை முடக்க வேண்டும்.

வசதிகள்
அவர்களுக்கு இருக்கும் வசதிகளை பிடுங்க வேண்டும். ரஷ்யாவிற்கு இது பெரிய பின்னடைவை கொடுக்கும். நான் எல்லோரிடமும் ஒரு விஷயத்தைதான் சொல்ல நினைக்கிறேன். முக்கியமாக மாஸ்கோவில் இருப்பவர்களுக்கு ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். இதுதான் நாம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நேரம். போரை நிறுத்திவிட்டு என்னுடன் வந்து பேச்சுவார்த்தை நடத்துங்கள்.

வார்னிங்
எங்கள் நாட்டில் இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கிடைக்க வேண்டிய நேரமும், எங்கள் நாட்டை மீட்கும் நேரமும் வந்துவிட்டது. இல்லையென்றால் இந்த போரில் மீள முடியாத அளவிற்கு ரஷ்யா தோல்வி அடையும். ரஷ்யா பல தலைமுறைகள் முயன்றாலும் மீட்க முடியாத அளவிற்கு சேதங்களை, இழப்புகளை சந்திக்க நேரிடும், என்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications