தீவிரமாகும் போர்..2 ஆயிரம் குழந்தைகள் கடத்தலா? பகீர் புகார் கிளப்பும் உக்ரைன்..ரஷ்யாவின் பதில் என்ன?

Subscribe to Oneindia Tamil

கீவ் : ரஷ்யா ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் இருந்து 2,389 குழந்தைகளை ரஷ்யா கடத்திச் சென்றுள்ளதாக உக்ரைன் பகீர் புகாரை கிளப்பியுள்ளது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா ராணுவத்தினரின் மூர்க்கத்தனமான தாக்குதல் சுமார் 25 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து கொண்டு இருக்கும் நிலையில், சுமார் 35 லட்சம் மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

கீவ் நகரில் ஒரு வணிக வளாகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்ட நிலையில், கீவ் நகரில் புதன்கிழமை வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் போர்

உக்ரைன் போர்

வணிக வளாகம் ஏவுகனைகளை பதுக்குவதற்கு பயன்படுத்தப்பட்டதால் அதன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்யா விளக்கம் அளித்துள்ளது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள மற்றொரு நகரான மரியுபோலிலும் அதி தீவிரமாக சண்டை நடைபெற்று வருகிறது. இந்த நகரில் ஆயுதங்களை கைவிட்டு சரணடைய நேற்று வரை ரஷ்ய கெடு விதித்திருந்தது. இந்த நிலையில் ரஷ்யா விடுக்கும் இறுதி எச்சரிக்கைகளை ஏற்கமுடியாது என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கூறியுள்ளார்.

ஆளில்லா விமானங்கள்

ஆளில்லா விமானங்கள்

உக்ரைன் மக்கள் சரணடைய மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யாவுடன் எந்த போர் நிறுத்தம் செய்து கொள்வதாக இருந்தாலும் அது தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்டே முடிவெடுக்கப்படும் என்றும் செலன்ஸ்கி கூறியுள்ளார். இதற்கிடையே கருங்கடல் கரையோர துறைமுக நகரான ஒடேசாவின் புறநகர் பகுதிகளை ரஷ்ய படைகள் தாக்கியிருப்பதாக முதல்முறையாக அந்நகரின் மேயர் அறிவித்துள்ளார். இந்த பகுதிகளில் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகள் கடத்தல்

குழந்தைகள் கடத்தல்

இந்நிலையில் தான், ரஷ்யா ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் இருந்து 2,389 குழந்தைகளை ரஷ்யா கடத்திச் சென்றுள்ளதாக உக்ரைன் பகீர் புகாரை கிளப்பியுள்ளது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உக்ரைனில் உள்ள டான்பாஸ் பகுதியானது 2014 ஆம் ஆண்டு நடந்த ரஷ்ய-உக்ரேனியப் போருக்குப் பின்னர் குறிப்பிடத்தக்க ரஷ்ய சார்பு பிரிவினைவாதிகளின் மையமாக உள்ளது. சமீபத்திய நாட்களில், நாட்டின் இரண்டு பகுதிகளான டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் - சுதந்திரமான நாடுகளாக புடின் அங்கீகரித்த பின்னர் தான் விவகாரம் முற்றியது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா மறுப்பு

ரஷ்யா மறுப்பு

தற்போது டான்பாஸ் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், செவ்வாயன்று ரஷ்யா தனது படையெடுப்பில் குழந்தைகளை குறிவைக்கிறது என்ற உக்ரைனின் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறது. கடந்த வாரம், உக்ரைன், குழந்தைகள் உட்பட பலர் தஞ்சமடைந்திருந்த மரியுபோலில் உள்ள தியேட்டர் மீது ரஷ்யா குண்டுவீச்சு நடத்தியதாகக் கூறியது. செயற்கைக்கோள் படங்களில் சிவப்பு கூரையுடன் கூடிய மரியுபோல் நாடக அரங்கிற்கு வெளியே தரையில் வரையப்பட்ட பெரிய ரஷ்ய எழுத்தில் "குழந்தைகள்" என்ற வார்த்தையைக் காட்டியது பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. ஆனால் வழக்கம் போல் இந்த குற்றச்சாட்டையும் ரஷ்யா மறுத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+