For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொடங்கியது போர்.. உக்ரைன் தலைநகரை விட்டு சாரைசாரையாக வெளியேறும் மக்கள்!

By
Google Oneindia Tamil News

கீவ்: உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் தொடங்கியிருப்பதால், அந்நாட்டு தலைநகரை விட்டு உக்ரைன் மக்கள் வெளியேறி வருகிறார்கள்.

Recommended Video

    உக்ரைனை விட்டு சாரைசாரையாக வெளியேறும் மக்கள்! பரிதாப காட்சிகள் - வீடியோ

    கடந்த சில வாரங்களாகவே உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் போர் பதற்றம் அதிகரித்திருந்தது. பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் தயாராக இருந்தும், ரஷ்யா அதற்கு செவிசாய்க்கவில்லை.

    இந்நிலையில், இன்று காலை காலை 8.30 மணிக்கு உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பதாக அறிவித்தது அறிவித்தது. உக்ரைன் உள்ளே சென்று தாக்கும்படி ரஷ்ய படைகளுக்கு புடின் உத்தரவிட்டார்.

    உக்ரைன் மீது ரஷ்யா போர்- உருவெடுக்கும் 3-வது உலக யுத்தம்- காரணமே அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள்!உக்ரைன் மீது ரஷ்யா போர்- உருவெடுக்கும் 3-வது உலக யுத்தம்- காரணமே அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள்!

    போர்

    போர்

    1991-ம் ஆண்டு சோவியத் யூனியன் வீழ்ச்சியை கண்டது. உக்ரைன் அதிலிருந்துவெளியேறி சுதந்திர நாடாக உக்ரைன் உருவானது. இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைனில் ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. இதனால் ரஷ்ய ஆதரவு பெற்ற அதிபர் விக்டர் யானுகோவிச் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். இதையடுத்து உக்ரைனை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர ரஷ்யா முயன்று வருகிறது.

     நேட்டோ

    நேட்டோ

    ஆனால் உக்ரைன் தன்னை ஐரோப்பிய நாடாகவே காட்டிக்கொள்ள விரும்புகிறது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோவில் இணைய முயன்று வருகிறது. இதற்கு ரஷ்யா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் இரு நாட்டுக்கும் இடையே போர் சூழல் ஆரம்பமானது. இதை தவிர்க்க பல நாடுகள் முயற்சி செய்து பார்த்தன.
    உக்ரைனுக்கு நேட்டோ நாடுகள் ஆதரவாகவும், ரஷ்யாவுக்கு சீனாவும் ஆதரவாக இருந்தன.

    தாக்குதல்

    தாக்குதல்

    இந்நிலையில் இன்று காலை உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் தொடங்கியுள்ளது. உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க ரஷ்ய படைகளுக்கு அதிபர் புதின் உத்தரவு பிறப்பித்தார். இதைய‌டுத்து, தற்போது அந்த நாட்டு படைகள் உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் கிழக்கு உக்ரைனையும் தற்போது ரஷ்யா தாக்குவதாக கூறப்படுகிறது.

     குண்டு மழை

    குண்டு மழை

    உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிந்துவருகிறது. குறிப்பாக உக்ரைன் தலைநகர் கிவியில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ராணுவத் தளங்களையும் விமானங்களையும் மட்டும் தாக்குவதாக ரஷ்யா தெரிவித்தது. இந்நிலையில், ரஷ்யா போர் விமானத்தை உக்ரைன் சுட்டு வீழ்த்தியுள்ளது. அதற்கு பதிலடி தரும் வகையில் ரஷ்யாவும் உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளது. இதனால் உக்ரைன் நாடு முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உக்ரைனில் வசிந்து வந்த அந்நாட்டு மக்களை சமீபத்தில் தங்கள் நாடுகளுக்கு திரும்ப வரசொல்லியது.

     வெளியேற்றம்

    வெளியேற்றம்

    தொடர்ந்து உக்ரைன் தலைநகர் கிவியில் தாக்குல் நடந்துவருவதால், அந்த நகரை விட்டு உக்ரைன் மக்கள் வெளியேறுகின்றனர். தலைநகர் கிவி மற்றும் கிழக்குப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் குண்டு மழை பொழிவதால் உக்ரைன் மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர். போர் சூழலால் விமான போக்குவரத்தும் இல்லாததால், சாலை மார்கமாக உக்ரைன் தலைநகரில் இருந்து, உக்ரைனின் மேற்கு எல்லைக்கு ஆயிரக்கணக்கான வாகனங்களில் மக்கள் பயணித்து வருகிறார்கள். போர் சூழல் முடியும் வரை தங்களைக் காத்துக்கொள்ள போர் அபாயம் இல்லாத இடம் நோக்கி மக்கள் இடம் பெயர்ந்துவருகிறார்கள்.

    English summary
    As the war between Ukraine and Russia has begun, the Ukrainian people are leaving the country by road. War Tensions between Ukraine and Russia have escalated over the past few weeks. Although Ukraine was ready for talks, Russia did not listen.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X