"காமெடியனை" வீழ்த்த போராடும் EX "உளவாளி".. உக்ரைன் - ரஷ்யா போருக்கு பின் உள்ள அந்த 2 பேர்.. பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: உக்ரைன் - ரஷ்யா இடையிலான மோதல்கள் பல காலமாக இருந்து வந்தாலும் இப்போது நேரம் பார்த்து புடின் உக்ரைன் மீது போர் தொடுக்க முக்கிய காரணம் இருக்கிறது. ஒரு காமெடியனுக்கும்.. ஒரு முன்னாள் உளவாளிக்கும் இடையிலான மோதல்தான் இந்த முழு அளவிலான போருக்கு வித்திட்டுள்ளது... என்ன நடந்தது?

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இன்று காலையில் உக்ரைன் மீது போர் தொடுப்பதாக ரஷ்ய அதிபர் புடின் அறிவித்தார். அதில் இருந்து ரஷ்யாவின் ஏவுகணைகள், போர் விமானங்கள் உக்ரைன் உள்ளே சென்று தாக்குதல் நடத்தி வருகிறது.

ரஷ்யாவின் 5 விமானங்களை தாக்கி அழித்துவிட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி இருக்கும் இந்த போருக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

 புடின் ஸ்பை

புடின் ஸ்பை

ரஷ்ய அதிபர் புடின் ஒரு முன்னாள் உளவாளி. ஆம் ஒரு உளவாளியாக இருந்துதான் அவர் ரஷ்யாவின் அதிபர் ஆனார். இவர் ரஷ்ய அதிபர் ஆன கதையே மிகவும் சுவாரசியம் ஆனது. சோவியத் யூனியன் ஒன்றாக இருந்த சமயத்தில் ரஷ்யாவில் இருக்கும் கேஜிபி எனப்படும் உளவு அமைப்பின் உளவாளியாக இருந்தவர்தான் புடின். அந்நாட்டின் பணக்கார கும்பலான, அரசியலை கட்டுப்படுத்தி வந்த அலிகார்க்ஸ் கும்பலுக்கும் இவர் நெருக்கமாக இருந்தார். சோவியத் யூனியன் உடைந்த பின் ரஷ்யா பெரிய அளவில் சரிவை சந்தித்து மொத்தமாக பொருளாதார ரீதியாக நிலைகுலைந்தது.

 ஹிட்லர்

ஹிட்லர்

ஹிட்லர் எப்படி முதல் உலக போருக்கு பின் மக்கள் பற்ற கஷ்டங்களை பார்த்து ஓவியத்தில் இருந்து அரசியலுக்கு சென்றாரோ அப்படித்தான் உளவாளியாக இருந்த புடின் நாடு முழுக்க சென்று அரசியல் நிலை என்ன, ரஷ்யாவில் அரசியலை கட்டுப்படுத்துவது யார், அரசியலை இயக்குவது யார் என்று தீவிரமாக கற்றுக்கொண்டார். அவரின் அரசியலை செதுக்கியது இந்த நாட்கள்தான். உளவாளியாக இருந்தே மக்களை மனதை படித்தார். அப்போது ரஷ்யாவை கட்டப்படுத்தியது 10க்கும் குறைவான பணக்காரர்கள்தான் கட்டுப்படுத்தி வந்தனர். அலிகார்க்ஸ் என்று அழைக்கப்பட்ட இந்த குழுதான் அரசை கட்டுப்படுத்தியது. அந்நாட்டின் அதிபர் போரிஸ் எல்ஸ்டின் கூட இவர்களால் கட்டுப்படுத்தப்பட்டுதான் வந்தார்.

 நெருக்கம்

நெருக்கம்

இப்போதும் இவர்கள்தான் அங்கு எல்லாம். ஆனால் புடின் இவர்களை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறார். அலிகார்க்ஸ் குழுவின் பலத்தை அறிந்து கொண்ட உளவாளி புடின் அவர்களை கையில் போட்டுகொண்டு அரசியலில் குதித்தார். கேஜிபியில் இருந்து விலகி 1991ல் அரசியலில் குதித்தார். அலிகார்க்ஸ் கொடுத்த சப்போர்ட் காரணமாக செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் மேயராக 1991ல் பதவி ஏற்றார்.அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து செசன்யா போரை பயன்படுத்திக்கொண்டு.. பிரதமர்.. பின்னர் அதிபர் என்று ஆனார். 1999ல் இவர் அதிபர் ஆனார். அதிபர் ஆன புடின் 20 வருடமாக ரஷ்யாவின் அதிபராக இருக்கிறார்.

 உக்ரைன் அதிபர்

உக்ரைன் அதிபர்

இப்படி அதிபரான புடினுக்கு அப்படியே எதிரானவர்தான் உக்ரைன் அதிபர் வோலோடிமைர் செலென்ஸ்கி. 2018 வரை பெரிய அளவில் அரசியலில் இல்லாமல் படங்களில், காமெடி நிகழ்ச்சிகளில் உக்ரைனில் நடித்து வந்தவர்தான் செலென்ஸ்கி. அங்கு நெட்பிளிக்ஸ் காமெடி நிகழ்ச்சிகள் பலவற்றை இவர் நடத்தி இருக்கிறார். Servants of the People என்ற இவரின் ஷோ மிக பிரபலம். அதில் விபத்தாக பிரதமர் ஆகும் ஒருவரின் கதையில் இவர் நடித்து இருந்தார். அது பின்னர் இவர் வாழ்க்கையில் நிஜமும் ஆனது.

 பணக்காரர்

பணக்காரர்

மிக அதிக பண பலம் கொண்ட இவர் சிவில் வார் காரணமாக பொருளாதார ரீதியாக நலிந்த உக்ரைன் அரசியலில் 2017 பிற்பகுதியில்தான் குதித்தார். பெரிதாக அரசியல் தெரியாத இவர் அந்நாட்டு அதிபருக்கு எதிராக போட்டியிடுவதாக அறிவித்து அதிபர் பெட்ரோ போரோஷென்கோவை வீழ்த்தி 2019ல் அதிபரும் ஆனார். இவர் அதிபர் ஆனது உலகம் முழுக்க அப்போது பேசப்பட்டது. ஆனால் இவர் பிரச்சாரத்தில் பெரிதாக அரசியல் பேசவில்லை. மேடைகளில் பெரும்பாலும் அப்போதைய அரசு பற்றி காமெடியாக கிண்டல் செய்தார்.

 அதிபர் செலென்ஸ்கி

அதிபர் செலென்ஸ்கி

அப்போதைய அதிபரை செலென்ஸ்கி கிண்டல் செய்து மக்கள் கவனத்தை ஈர்த்தார். தனக்கு எதிரே வெறும் மேடை ஒன்றை போட்டு அதனுடன் விவாதம் செய்து நான் அதிபருடன் விவாதம் செய்துவிட்டேன் என்று காமெடி செய்தார். பெரும்பாலும் சீரியஸ் விஷயங்களை பேசாமலே செலென்ஸ்கி அதிபர் ஆனார். அரசியல் அனுபவம் இல்லாமல், எல்லை பாதுகாப்பு, வெளிநாட்டு உறவு, ஏன் சிறிய அளவிலான அரசியல் போஸ்டிங் கூட இல்லாமல் வந்த இவர்தான் இப்போது புடின் போன்ற பழுத்த அரசியல்வாதியின் போர் தொடுப்பை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

 கட்டாயம்

கட்டாயம்

அதாவது இரண்டு எதிர் எதிர் துருவங்கள் இந்த போரில் தங்கள் நாட்டை காக்க வேண்டும். இதற்கு முன் உக்ரைன் அதிபராக இருந்த பெட்ரோ தீவிர ரஷ்ய எதிர்ப்பாளர். உக்ரைனில் பல காலமாக இருந்த ரஷ்ய ஆதரவு அதிபர் விக்டரை வீழ்த்திவிட்டு பெட்ரோ அங்கு அதிபர் ஆனார். ஆனால் அந்த பெட்ரோ இருக்கும் போதே ஆரம்பிக்காத போர் அதன்பின் வந்த செலென்ஸ்கி இருக்கும் போது தொடங்கி உள்ளது. இதற்கும் காரணம் இருக்கிறது. முதலில் செலென்ஸ்கி வென்ற போது அதை ரஷ்ய அதிபர் புடின் வரவேற்றார்.

 புடின் வரவேற்பு

புடின் வரவேற்பு

பெட்ரோ தோல்வி அடைந்த சந்தோஷத்தில் புடின் உக்ரைன் புதிய அதிபர் செலென்ஸ்கி வெற்றியை வரவேற்றார். செலென்ஸ்கி சும்மா காமெடி பீஸ் என்று சந்தோஷத்தில் உக்ரைனை ஆக்கிரமிக்கும் ஆசை புடினுக்கு வந்தது. அதேபோல் செலென்ஸ்கியும் ரஷ்யாவுடன் உறவை புதுப்பிப்பேன் என்று கூறினார். ஆனால் ஆட்சிக்கு வந்து 3 நாட்களில் புடின் செலென்ஸ்கி முதல் தொடங்கியது. உக்ரைனில் கிழக்கு பகுதியில் இருக்கும் புரட்சியாளர் படைக்கு ரஷ்யா விசா வழங்க உத்தரவு போட்டது. இதை கடுமையாக விமர்சித்த செலென்ஸ்கி.. ரஷ்யாவின் செயல்.. உக்ரைனுக்கு எதிரான போர் என்றார்.

 மோதல்

மோதல்

இதில் இருந்துதான் செலென்ஸ்கி - புடின் மோதல் தொடங்கியது. ரஷ்யாவின் ஒவ்வொரு செயலையும் செலென்ஸ்கி விமர்சித்தார். அதேபோல் உக்ரைனின் ஒவ்வொரு செயலையும் புடின் விமர்சித்தார். அதோடு ரஷ்யாவை கடுப்பாக்க வேண்டும் என்று செலென்ஸ்கி டிரம்ப் உதவியை கூட அப்போது நாடினார். டிரம்ப்பிடம் செலென்ஸ்கி ராணுவ உதவி கேட்டார். ஆனால் இதற்கு டிரம்ப் வேறு சில கைமாறுகளை கேட்க செலென்ஸ்கி அதற்கு மறுத்துவிட்டார். விளைவு உக்ரைனுக்கு டிரம்ப் உதவி செய்ய மறுத்துவிட்டார்.. இதுவே பின்னர் டிரம்ப் impeachmentக்கு காரணமாக அமைந்தது வேறு கதை.

 நெருக்கம்

நெருக்கம்

ஆனால் அப்போதில் இருந்தே உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி அமெரிக்காவுடனும், நேட்டோ படையுடனும் நெருக்கம் காட்டினார். பின்னர் புடின் வந்த பின் இந்த நெருக்கம் இன்னும் அதிகரித்தது. இதுவே உக்ரைன் எங்கே நேட்டோ படையில் சேர்ந்து விடுமோ என்ற அச்சத்தை புடினுக்கு ஏற்படுத்தியது. புடினை கடுப்பாக்க வேண்டும் என்று செலென்ஸ்கி தொடர்ந்து நேட்டோ படையுடன் நெருக்கம் காட்டினார். பிடன் உடன் நட்பாக இருந்தார். முன்னாள் சோவியத் நாடு இப்படி நேட்டோவிடம் நெருக்கம் காட்டுவதை புடின் விரும்பவில்லை.

 பாதுகாப்பு போர்

பாதுகாப்பு போர்

செலென்ஸ்கி அதிபர் ஆன பின் உக்ரைன் அதிக அளவில் ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்காவோடு நெருக்கமாக காட்டி வருகிறது. அதிலும் அமெரிக்கா, யு.கே இருக்க கூடிய நேட்டோ படையில் உக்ரைன் இணைய முயன்று வருகிறது. உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் அது ரஷ்யாவிற்கு வைக்கப்படும் செக் மேட். இதனால் அதற்கு முன் ரஷ்யா எப்படியாவது உக்ரைனை ஆக்கிரமிக்க பார்க்கிறது.. இதுதான் இப்போது உக்ரைன் உள்ளே புகுந்து ரஷ்யா போர் தொடுக்கவும் காரணமாக அமைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+