Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிரம்பிடம் பணிந்த உக்ரைன்.. 2 தலைவர்களுடன் வெள்ளை மாளிகை செல்லும் ஜெலன்ஸ்கி? யார் அந்த 2 பேர்? ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

கீவ்: வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ஆகியோர் இடையே மோதல் ஏற்பட்டது. இப்போது ஜெலன்ஸ்கி வருத்தம் தெரிவித்துள்ள நிலையில் விரைவில் மீண்டும் டிரம்பை சந்திக்க உள்ளார். இந்த வேளையில் வெளிநாடுகளை சேர்ந்த 2 முக்கிய தலைவர்கள் ஜெலன்ஸ்கியுடன் வெள்ளை மாளிகைக்கு செல்ல உள்ளதாகவும், அதன் பின்னணி குறித்த முக்கிய தகவலும் வெளியாகி உள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யாவின் போர் 3 ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து வருகிறது. இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதுதொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடன் டிரம்ப் பேசி உள்ளார். அதேபோல் அமெரிக்கா - ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர்களும் பேசி உள்ளனர்.

donald trump volodymyr Zelensky

இதுதவிர அமெரிக்க அதிபர் டிரம்பும், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியும் ஒரு வாரத்துக்கு முன்பாக சந்தித்து பேசினர். உக்ரைன்-ரஷ்யா போர் நிறுத்தம் தொடர்பாக வெள்ளை மாளிகையில் இருவரும் விவாதித்தனர். அதன்பிறகு கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தபோது கடும் மோதல் ஏற்பட்டது.

போர் நிறுத்தம் தொடர்பான தகவல்களை பரிமாறியபோது அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ், அதிபர் டிரம்ப் ஆகியோரின் பேச்சுக்கு ஜெலன்ஸ்கி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நேரலையில் இருநாட்டு தலைவர்களும் மோதிக்கொண்டனர். கோபத்தின் உச்சிக்கு போன டிரம்ப், உக்ரைன் அதிபரையும் அவரது குழுவினரையும் வெள்ளை மாளிகையில் இருந்து அதிரடியாக வெளியேற்றினார்.

அதேவேளையில் அமெரிக்காவில் இருந்து வெளியேறிய ஜெலன்ஸ்கி நேரடியாக பிரிட்டன் சென்றார். பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்தித்தார். அதன்பிறகு ஐரோப்பிய நாடுகளின் அவசர மாநாட்டில் ஜெலன்ஸ்கி பங்கேற்றார். அப்போது ஐரோப்பிய நாடுகள் ஓரணியில் திரண்டு ஜெலன்ஸ்கிக்கு ஆதரவு தெரிவித்தன. அமெரிக்கா கைவிட்டாலும் கூட ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு தேவையான உதவிகளை செய்யும் என்று அறிவித்தனர். அதுமட்டுமின்றி அமெரிக்கா தயாரித்த போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு மாற்றாக இன்னொரு போர் நிறுத்த வரைவு ஒப்பந்தத்ததை தயார் செய்தன. இதனை அமெரிக்கா உதவியுடன் செயல்படுத்தி போர் நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர ஐரோப்பிய நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

முன்னதாக ஜெலன்ஸ்கியின் செயல்பாட்டால் அமெரிக்கா கடும் கோபமாகி உள்ளது. வெள்ளை மாளிகையில் அமெரிக்காவின் போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் போருக்கு உதவி செய்ததற்கு பலனாக உக்ரைனின் கனிம வளங்களை பயன்படுத்த இசைவு தெரிவிக்கும் அமெரிக்காவின் ஒப்பந்தமும் கையெழுத்தகவில்லை. இதனால் உக்ரைனுக்கான உதவியை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்தது. அமெரிக்காவின் உதவியின்றி ரஷ்யாவை எதிர்கொள்வது உக்ரைனுக்கு பெரிய சவாலாகும். அதேபோல் உக்ரைனுக்கு இதுவரை அமெரிக்கா வழங்கி வந்த உளவு தகவல்களையும் தடாலடியாக நிறுத்தியது.

இதனால் வேறு வழியின்றி ஜெலன்ஸ்கி அமெரிக்காவிடம் பணிந்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கீழ் போர் நிறுத்தம் உள்ளிட்ட ஒப்பந்தங்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக அறிவித்தார். வெள்ளை மாளிகையில் நடந்த எல்லா சம்பவங்களுக்கும் வருத்தம் தெரிவித்து டிரம்புக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அமெரிக்க பார்லிமென்ட் கூட்டு கூட்டத்தில் இந்த கடிதத்தை டிரம்ப் படித்து காட்டினார். இதனால் டிரம்ப் ஓரளவு மனம் இறங்கி வந்து உக்ரைன் போரை நிறுத்துவதில் மீண்டும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

விரைவில் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இன்னும் தேதி முடிவாகாத நிலையில் டிரம்ப் - ஜெலன்ஸ்கி சந்திப்பு மீண்டும் நடைபெற உள்ளது. இந்த சந்திப்பின்போது டிரம்ப் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்வதை தவிர ஜெலன்ஸ்கிக்கு வேறு வழி இல்லை. போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஓகே சொல்லி தான் ஆக வேண்டும்.
அதுமட்டுமின்றி உக்ரைனின் இருக்கும் அரிய கனிமங்களை எடுத்துக்கொள்ள அமெரிக்காவுக்கு அனுமதி வழங்கும் ஒப்பந்தத்திலும் அவர் கையெழுத்திட உள்ளார்.

இதற்கிடையே திடீர் திருப்பமாக புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, இந்த முறை ஜெலன்ஸ்கி மட்டும் தனியாக வெள்ளை மாளிகை செல்லவில்லையாம். அவருடன் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் செல்ல திட்டமிட்டுள்ளனர். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை நிறுத்த அமெரிக்கா போல் ஐரோப்பிய நாடுகளும் விரும்புகின்றன. இதனால் கடந்த முறை போல் ஜெலன்ஸ்கி ஏதாவது தவறாக பேசி விடக்கூடாது. இந்த முறை டிரம்புடன் நடக்கும் சந்திப்பில் போர் நிறுத்தத்தை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் நினைக்கின்றனர். இதனால் இருதலைவர்களும் ஜெலன்ஸ்கியுடன் அமெரிக்கா சென்று டொனால்ட் டிரம்பை சந்திக்க உள்ளனர்.

இதற்கு தூதரக அதிகாரிகள் வழியாக பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் காய்நகர்த்தி வருகிறது. ஆனால் ஜெலன்ஸ்கியுடன் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் , பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆகியோர் செல்ல இன்னும் அமெரிக்காவில் இருந்து பச்சை கொடி காட்டப்படவில்லை. இருப்பினும் போர் நிறுத்தம் தான் முக்கியம் என்று அமெரிக்கா நினைக்கிறது. இதனால் பேச்சுவார்த்தையை சுமூகமாக முடித்து, போரை நிறுத்தும் நோக்கத்தில் பிரான்ஸ், பிரிட்டன் தலைவர்களையும் ஜெலன்ஸ்கியுடன் அனுமதிக்க அமெரிக்கா கிரீன் சிக்னல் கொடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

இது நடக்கும் பட்சத்தில் ஜெலன்ஸ்கி, டிரம்ப் கூறும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார். அதன்பிறகு அமெரிக்கா, அந்த ஒப்பந்தத்தின் மூலம் ரஷ்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும். டிரம்ப் - ஜெலன்ஸ்கி சந்திப்பின்போது கடந்த முறை நடந்த மோசமான சம்பவங்கள் இந்த முறை வெள்ளை மாளிகையில் நடக்க வாய்ப்பே இல்லை. இதனால் உலகமே எதிர்பார்க்கும் உக்ரைன்-ரஷ்யா போர் நிறுத்தம் விரைவில் வரலாம் என்கின்றனர் சர்வதேச அரசியல் வல்லுநர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+