அமைதிக்காக அமெரிக்கா பேசிக்கிட்டு இருக்கும் போதே.. ரஷ்யாவின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய உக்ரைன்!
மாஸ்கோ: தெற்கு ரஷியாவில் உள்ள ஒரேன்பர்க் எரிவாயு ஆலையில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தற்போது ரஷ்யா - உக்ரைன் இடையேயான பதற்றம் மீண்டும் அதிகர்த்துள்ள நிலையில், இந்த தாக்குதல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சமரச முயற்சிகளுக்கு புதிய சவாலாக மாறியுள்ளது. தங்களுக்கு கூடுதல் ஆயுதங்களை தர வேண்டுமென உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்டிருந்த நிலையில், அதனை தர அமெரிக்க அதிபர் மறுத்ததும் குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் தலைநகர் கிவ்வில் இருந்து 1,700 கிமீ தொலைவில் உள்ள ரஷ்யாவின் ஒரன்பர்க் பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய எரிவாயு நிலையத்தின் மீது உக்ரைன் டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் எரிவாயு நிலையத்தின் ஒரு பகுதியில் தீ கொளுந்து விட்டு எரிந்துள்ளது.
ரஷ்யாவின் சைபீரியா மற்றும் யூரல் மலைப்பகுதிகளிலும் இதே போன்ற தாக்குதல்கள் நடந்துள்ளன. எரிவாயு பகுப்பு ஆலையில் உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் ஒரு பகுதியில் தீப்பற்றி, சில தொழில்நுட்ப பகுதிகள் சேதமடைந்துள்ளன. ஆனால் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என ஒரேன்பர்க் பிராந்திய ஆளுநர் யெவ்ஜெனி சோல்ட்செவ் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் ட்ரோன் தாக்குதல்
இதேபோல், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், சனிக்கிழமை இரவு உக்ரைன் ஏவிய 45 ட்ரோன்களில் பெரும்பாலானவை இடைமறித்து அழிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. இதில், ஒரேன்பர்க் பகுதியில் ஒன்று, அருகிலுள்ள சமாரா மற்றும் சரடோவ் பகுதிகளில் மொத்தம் 23 ட்ரோன்கள் சுட்டுத் தகர்க்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இத்தாக்குதல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக மேற்கொண்டு வரும் ரஷ்யா-உக்ரைன் சமரச முயற்சியின் நடுவே நிகழ்ந்துள்ளதையும் கவனிக்க வேண்டும்.
டொனால்ட் டிரம்ப்
போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் டிரம்ப் சமீபத்தில் இரு நாடுகளின் தலைவர்களுடனும் நேரடி மற்றும் தொலைபேசி வழி ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறார். இஸ்ரேல்-காசா இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை வெற்றிகரமாக ஏற்படுத்திய அனுபவத்தை, ரஷ்யா-உக்ரைன் பிரச்சினையிலும் பயன்படுத்த முடியும் என நம்பிக்கை ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதற்காக அவர் சமீபத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் சுமார் இரண்டு மணி நேரம் தொலைபேசியில் பேசியதாகவும், அந்த உரையாடல் "மிகவும் பயனுள்ளதாக இருந்தது" என குறிப்பிட்டார்.
சமரச முயற்சி
மேலும், இருவரும் வரும் வாரங்களில் ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்டில் நேரில் சந்தித்து பேச ஒப்புக்கொண்டுள்ளனர். இந்நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தனது நாட்டின் பாதுகாப்புக்காக முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். எதிர்காலத்தில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைத் தடுக்க, உக்ரைனுக்கு வலுவான மற்றும் நீடித்த பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்க வேண்டும் என்பது அவரது முக்கிய கோரிக்கையாகும்.
ஜெலன்ஸ்கி
மேலும், "ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க, டாமஹாக் போன்ற நீண்ட தூரம் பாயும் ஏவுகணைகள் அவசியம்," என உக்ரைன் வலியுறுத்துகிறது. ஆனால், இதற்கு டிரம்ப் எதிராக கருத்து தெரிவித்துள்ளார். "ஆயுதங்களை வழங்குவதன் மூலம் போரை நீட்டிப்பதை விட, பேச்சுவார்த்தை மூலமே நிரந்தர தீர்வு கிடைக்கும்," என அவர் தெரிவித்துள்ளார். அதே சமயம், ஜெலன்ஸ்கி, "ரஷ்யாவால் இணைக்கப்பட்ட உக்ரைனின் நிலப்பகுதிகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது" என உறுதியாக கூறி வருகிறார். இதுவே தற்போது நடக்கும் அமைதி பேச்சுவார்த்தையின் மிகப்பெரிய தடையாக பார்க்கப்படுகிறது. டிரம்பின் சமரச முயற்சிகள் உண்மையில் இரு நாடுகளையும் பேச்சுவார்த்தை மேடையில் சேர்க்க முடியுமா என்பதை உலகம் முழுவதும் ஆர்வத்துடன் கவனித்து வருகிறது. இதே நேரத்தில், ஒரேன்பர்க் எரிவாயு ஆலையில் நடந்த ட்ரோன் தாக்குதல், அமைதி முயற்சிகளுக்கு புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications