டாங்கிகளை விட திறன் வாய்ந்தது.. ரஷ்ய விமானங்களை தாக்க உக்ரைன் பயன்படுத்தியது இந்த ட்ரோன்கள்தான்
கீவ்: நேற்று ரஷ்யாவுக்குள் புகுந்து சுமார் 41 போர் விமானங்களை உக்ரைன் அழித்திருந்தது உலகம் முழுவதும் கவனம் பெற்றிருக்கிறது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன், FPV எனும் ட்ரோன்களை பயன்படுத்தியிருக்கிறது. இந்த ட்ரோன்கள் எப்படி இயங்கும்? மற்ற ட்ரோன்களை விட இது எதில் மேம்பட்டது? உக்ரைன் இதை ஏன் தேர்வு செய்தது? என்பது குறித்து இந்த செய்தி விவரிக்கிறது.
ட்ரோன்களை போரில் பயன்படுத்தும் வழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் ட்ரோன்களை பயன்படுத்தியது சாதாரண செய்திதான். ஆனால் வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே பறக்கும் திறன் கொண்ட ட்ரோன்களை நம்பி எப்படி, உக்ரைன் இவ்வளவு பெரிய தாக்குதலை திட்டமிட்டது? என்பதுதான் தற்போதைய கேள்வி.

இதற்கு பதில் தெரிந்து கொள்ள வேண்டும் எனில், இதற்கு முன்னர் உக்ரைனின் ட்ரோன் செயல்பாடுகளை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். அதாவது இதற்கு முன்னரும் உக்ரைன் ரஷ்யாவுக்கு எதிராக ட்ரோன்களை பயன்படுத்தியிருக்கிறது. ரஷ்ய டேங்கர்களுக்கு எதிராக இந்த ட்ரோன்கள் சிறப்பாக செயல்பட்டிருக்கின்றன. டேங்கர்களை விட ட்ரோன்கள் அதிக திறன் வாய்ந்தது என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு ரஷ்ய டேங்கரின் தொடக்க விலை ரூ.16 கோடி. ஆனால் உக்ரைன் பயன்படுத்திய ராணுவ FPV ட்ரோன்கள் வெறும் ரூ.82,000தான். ஒரே ஒரு ட்ரோன் மொத்த டேங்கரையும் அழிக்க போதுமானதாகும்.
உக்ரைன் பயன்படுத்திய ராணுவ FPV ட்ரோன்கள், வெறும் 5-10 நிமிடங்கள் மட்டுமே பறக்கும் திறன் கொண்டவை. ஆனால், இவற்றால் இந்த குறுகிய நேரத்தில் அதிகபட்சமாக 30 கி.மீ தூரம் வரை பயணிக்க முடியும். மட்டுமல்லாது ரேடார்/சென்சார்களில் காணாமல் பறக்கும் திறன் கொண்டதாகும். இதில் AI மற்றும் ஆட்டோனமஸ் மோட் அம்சம் இருப்பதால், டார்கெட்டை தானாக லாக் செய்து தாக்கும். இதை பறக்க வைக்க தனியாக ஆட்கள் தேவையில்லை. நாம் எதை தாக்க போகிறோம், இலக்கு எது என்பது ஏற்கெனவே, ட்ரோன்களில் புரோகிராம் செய்துவிட்டால் போதும்.
இந்த ட்ரோன்கள் இலக்கை நெருங்கிய உடன் தன்னிச்சையாக பறக்க தொடங்கி, கண்ணிமைக்கும் நேரத்தில் தாக்கிவிடும். எனவேதான் இந்த வகை ட்ரோன்களை உக்ரைன் பயன்படுத்தியிருக்கிறது.
எதிர்பார்த்ததை போலவே ட்ரோன்கள் சிறப்பாக செயல்பட்டு ரஷ்ய விமானங்களை சேதப்படுத்தியுள்ளன. குறைந்த தூரத்திலிருந்து எதிர்பாராமல் நடந்த தாக்குதல் காரணமாக, இதனை தடுக்க முடியாமல் ரஷ்யா திணறியிருக்கிறது. மொத்தம் 41 விமானங்கள் தாக்குதலில் சேதமடைந்துள்ளன. இதன் மதிப்பு சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள். வெறும் மொத்தம் 117 ட்ரோன்கள் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. 117*49,000 = ரூ.57 லட்சம். இவ்வளவு குறைந்த மதிப்பு கொண்ட ட்ரோன்கள் ஒரு பில்லியன் அளவுக்கு சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications