இவ்வளவு நாள் ரஷ்யாவை தாக்கு பிடிக்கிறதே.. உக்ரைன் பயன்படுத்தும் ஆயுதங்கள் என்ன தெரியுமா

Subscribe to Oneindia Tamil

கீவ்: ரஷ்யாவின் அத்துமீறிய யுத்தத்தை 23 நாட்களாக உக்ரைன் தாக்குப் பிடித்து வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மன் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவின் தாக்குதல்களை முறியடிக்கும் அதிநவீன ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கி இருப்பதாலேயே ரஷ்யாவின் யுத்தத்தை எதிர்கொள்ள முடிகிறது என்கின்றன சர்வதேச ஊடகங்கள்.

ரஷ்யாவின் யுத்தத்தை எதிர்கொள்ள அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் ஆயுத உதவிகளை வழங்க வேண்டும் என்பது உக்ரைனின் வேண்டுகோள். உக்ரைன் மீதான யுத்தம் நடத்தி வரும் ரஷ்யா அதிபர் புதினை போர்க்குற்றவாளி என அமெரிக்க நாடாளுமன்றம் குற்றம்சாட்டி தீர்மானம் நிறைவேற்றியது.

அத்துடன் 800 மில்லியன் டாலர் மதிப்பிலான (சுமார் ரூ6,000 கோடி) ஆயுதங்களை வழங்குவோம் என்றும் அமெரிக்கா அதிபர் ஜோ பிடன் உறுதி அளித்தார். ஜோ பிடன் அறிவித்த ஆயுத விநியோகங்கள் பட்டியலில் 800 வீரர்கள் அல்லது ஸ்டிரிங்கர்கள் கைகளில் எடுத்து செல்லக் கூடிய வான்பாதுகாப்பு கருவி, 200 ஜாவ்லின் என்கிற டாங்கிகளை தாக்கி அழிக்கக் கூடிய ஆயுதங்கள், 100 டிரோன்கள் உள்ளிட்டவை அடங்கும். துருக்கியும் டிரோன்களை வழங்கி உள்ளது.

எஸ்-300 ஏவுகணைகள்

எஸ்-300 ஏவுகணைகள்

குறிப்பாக உக்ரைனுக்கு ரஷ்யா தயாரிப்பான எஸ்-300 ஏவுகணைகளை அமெரிக்கா வழங்கி இருக்கிறது. ஐரோப்பிய நேட்டோ நாடுகள் இவைகளை ஏற்கனவே உக்ரைனுக்கு கொடுத்திருக்கின்றன. இந்த அதிநவீன ஏவுகணைகளை உக்ரைன் ஏற்கனவே பயன்படுத்தி இருப்பதால் அந்நாட்டு ராணுவத்தினரால் எளிதாக கையாள முடியும்.

kamikaze டிரோன்கள்

kamikaze டிரோன்கள்

மற்றொரு மிக முக்கியமான ஆயுதம் kamikaze டிரோன்கள். இலக்கை தாக்கும் முன்பே ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கக் கூடியது. இது நிலம், நீர், ஆகாயம் மூன்று மார்க்கங்களிலும் ஏவப்படுகிறது. இந்த டிரோன்களில் உள்ள 2 வகைகளையுமே உக்ரைன் தற்போது பயன்படுத்தி வருகிறது. இது அமெரிக்காவால் உக்ரைனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

முக்கிய பங்கு வகிக்கும் ஸ்டிரிங்கர்கள்

முக்கிய பங்கு வகிக்கும் ஸ்டிரிங்கர்கள்

இதேபோல் ஸ்டிரிங்கர்கள் எனப்படும் வீரர்கள் கைகளில் எடுத்துச் செல்லக் கூடிய வான்பாதுகாப்பு கருவியும் உக்ரைனால் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்கா தம்மிடம் இருந்து 600 ஸ்டிரிங்கர்களை அனுப்பி வைத்திருக்கிறது. இதர நேட்டோ நாடுகளும் ஸ்டிரிங்கர்களை கொடுத்துள்ளன. போர் வீரர்கள் தோள்பட்டையில் சுமந்தபடி எதிரியின் இலக்கை குறைந்த தூரத்தில் அழிக்க உதவும். சோவியத்- ஆப்கான் யுத்தத்திலும் இது பயன்படுத்தப்பட்டது. உலகின் பல நாடுகளிலும் பயன்படுத்தக் கூடிய வான் பாதுகாப்பு கருவி இது.

மிரட்டும் ஜாவ்லின் ஏவுகணைகள்

மிரட்டும் ஜாவ்லின் ஏவுகணைகள்

ஜாவ்லின் ஏவுகணைகள்தான் ரஷ்யாவுக்கு இந்த யுத்தத்தில் அதிக இழப்பை தந்திருக்கக் கூடிய முக்கிய பங்கு வகிப்பதாகவும் ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. சுமார் 2000 டாங்கி எதிர்ப்பு ஜாவ்லின் ஏவுகணை அமெரிக்கா வழங்கி இருக்கிறது. ரஷ்யாவின் டாங்கிகளை துல்லியமாக இலக்கு வைத்து அழித்து வருகிறது ஜாவ்லின் ஏவுகணைகள். இதனால் ரஷ்யா ஏராளமான டாங்கிகளை யுத்த களத்தில் இழந்துவிட்டது. இதனையடுத்து சில போர் முனைகளில் இருந்து டாங்கிகளை ரஷ்யா திரும்பப் பெற்றிருக்கிறது.

ஐரோப்பிய ஏவுகணைகள்

ஐரோப்பிய ஏவுகணைகள்

NLAW எனப்படும் ஏவுகணைகளும் பெரும் எண்ணிக்கையில் உக்ரைனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து மட்டுமே 3615 ஏவுகணைகளை கொடுத்திருக்கிறது. ஜெர்மனி 1,000; நார்வே 2,000; ஸ்வீடன் 5,000 ஏவுகணைகளை வழங்கியுள்ளன. இந்த ஏவுகணைகளையும் உக்ரைன் வீரர்கள் டாங்கிகள் மீது பொருத்தி ரஷ்யா துருப்புகளை அழித்து வருகின்றனர். Bayraktar TB2 டிரோன்கள் துருக்கியால் வழங்கப்பட்டவை. இதனை கீவ் நகரில் உக்ரைன் ராணுவத்தினர் பயன்படுத்துகின்றனர். குறைந்த எண்ணிக்கையில் இந்த டிரோன்கள் பயன்படுத்தப்பட்டாலும் துல்லியமான தாக்குதல் திறன் கொண்டது. இந்த டிரோன்கள் 27 மணிநேரம் தொடர்ந்து 25,000 அடி உயரத்திலும் பறக்கக் கூடிய திறனை பெற்றவை. மேலும் எம்ஐ 17 ரக ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட கூடுதல் ஆயுதங்களையும் வழங்குவதாக அமெரிக்கா உறுதி அளித்துள்ளது. இத்தகைய உக்கிரமான ஆயுதங்கள், ஏவுகணைகள் மூலமாகவே ரஷ்யாவின் யுத்தத்தை 20 நாட்களுக்கு மேலாக உக்ரைனால் தாக்குப் பிடிக்க முடிகிறது என்கின்றன சர்வதேச ஊடகங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+