திருப்பி அடித்த உக்ரைன்.. ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதிகளில் கொடூர தாக்குதல்.. 25 பேர் உயிரிழப்பு
மாஸ்கோ: உக்ரைனில் ரஷ்யா ஆக்கிரமித்து வைத்துள்ள பகுதிகளில் உக்ரைன் படைகள் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, அந்த நாடு மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. குட்டி நாடுதானே.. அடித்து துவைத்து விடலாம் என எண்ணி இந்த தாக்குதலை ரஷ்யா முன்னெடுத்தாலும், போரில் ரஷ்யாவுக்கு தண்ணி காட்டியது உக்ரைன்.

அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் நிதி உதவியும் ஆயுத உதவிகளையும் வழங்கியதால் ரஷ்யாவுக்கு கடும் பதிலடியை உக்ரைன் கொடுத்து வருகிறது. இதனால், உக்ரைனை கைப்பற்றும் எண்ணம் ஈடேறாமல் ரஷ்யா தடுமாறி வருகிறது. இதனால் ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் ஓராண்டைக் கடந்தும் இப்போது தொடர்ந்து வருகிறது.
இந்தப் போரில் இரு தரப்பிற்கும் இடையே பலத்த உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும், இது சர்வதேச அளவிலும் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, அந்த நாட்டின் சில பகுதிகளையும் கைப்பற்றி தங்கள் கட்டுக்குள் வைத்துள்ளது.
இந்த நிலையில், உக்ரைனில் ரஷ்யா ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் உக்ரைன் படைகள் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உக்ரைனில் ரஷ்யா வசம் இருக்கும் டொனெட்ஸ்க் பகுதியில் உக்ரைன் படைகள் இந்த தாக்குதல் நடத்தியதாகவும் இதில் 25 பேர் கொல்லப்பட்டதோடு 10 பேர் காயமும் அடைந்துள்ளனர்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications