For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இது மட்டும் நடந்தால்.. கண்டிப்பாக மூன்றாம் உலகப் போர் தான்.. எச்சரிக்கும் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி

Google Oneindia Tamil News

கீவ் : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றத்திற்கு மத்தியில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும், இந்த முயற்சிகள் தோல்வியுற்றால், இது மூன்றாம் உலகப் போராக மாறும் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு தொடங்கியதில் இருந்து, சுமார் 6.5 மில்லியன் மக்கள் நாட்டிற்குள் இடம்பெயர்ந்துள்ளனர்.

அதே நேரத்தில் மேலும் 3.2 மில்லியன் மக்கள் பாதுகாப்பு கருதி உடமைகளை நாட்டிலே விட்டுவிட்டு கால்நடையாகவே அருகிலுள்ள நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

2வது நாளாக ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் தாக்குதல்..பள்ளியில் குண்டுமழை பொழிந்த ரஷ்யா..400 பேரின் நிலை? 2வது நாளாக ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் தாக்குதல்..பள்ளியில் குண்டுமழை பொழிந்த ரஷ்யா..400 பேரின் நிலை?

மக்கள் ஆர்வம்

மக்கள் ஆர்வம்

உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நாட்டிலிருந்து தன்னை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான அமெரிக்காவின் முன்மொழிவை நிராகரித்திருந்தார். ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்ததற்காக உலகளவில் பாராட்டைப் பெற்றுள்ளார். ஹெவிவெயிட் ரஷ்யாவிற்கு எதிரான நாட்டின் போரில் உதவுவதற்காக பல சாதாரண குடிமக்களும் இராணுவத்தில் சேர முன்வந்துள்ளனர்.

ஜெலன்ஸ்கி எச்சரிக்கை

ஜெலன்ஸ்கி எச்சரிக்கை

"அவருடன் பேச்சுவார்த்தைக்கு நான் தயாராக இருக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் தயாராக இருந்தேன். மேலும் பேச்சுவார்த்தைகள் இல்லாமல் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர முடியாது என்று நான் நினைக்கிறேன்," என்று CNN மேற்கோள் காட்டியுள்ளது. "பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு, புட்டினுடன் பேசுவதற்கான வாய்ப்பு ஆகியவற்றைப் பெறுவதற்கு எந்த வடிவத்தையும், எந்த வாய்ப்பையும் நாம் பயன்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் இந்த முயற்சிகள் தோல்வியுற்றால், இது மூன்றாம் உலகப் போர் என்று அர்த்தம்," என்று ஜெலன்ஸ்கி மேலும் கூறினார்.

பெரும் இழப்புகள்

பெரும் இழப்புகள்

சமீபத்திய நாட்களில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு அதன் நான்காவது வாரத்தை கடந்த போது, ​​மேலும் பேச்சுவார்த்தைகளை ஜெலன்ஸ்கி ஆதரித்தார். சனிக்கிழமையன்று வெளியிடப்பட்ட ஒரு வீடியோ செய்தியில், "உடனடியாக" உரையாடலை நடத்துமாறு ஜெலென்ஸ்கி வலியுறுத்தினார், அவ்வாறு செய்யத் தவறினால் ரஷ்யாவிற்கு "பெரும் இழப்புகள்" ஏற்படும் என்று எச்சரித்தார்.

சமாதானத்திற்கான தீர்வு

சமாதானத்திற்கான தீர்வு

நாங்கள் எப்போதும் பேச்சுவார்த்தைகளை வலியுறுத்தி வருகிறோம். நாங்கள் எப்போதும் பேச்சுவார்த்தைகளை வழங்குகிறோம், சமாதானத்திற்கான தீர்வுகளை வழங்குகிறோம். மேலும் அனைவரும் இப்போது, ​​குறிப்பாக மாஸ்கோவில் நான் சொல்வதைக் கேட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது சந்திக்க வேண்டிய நேரம். பேசுவதற்கான நேரம். இது பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் நீதியை மீட்டெடுக்கும் நேரம் என்று அவர் கூறினார்.

English summary
Amid rising tensions between Ukraine and Russia, Russian President Vladimir Zhelensky has said he is ready for talks with Russian President Vladimir Putin and that if these efforts fail, it could turn into World War III.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X