பாய்ந்து வந்த ஏவுகணைகள்! நொடியில் தரைமட்டமான பள்ளிகள்! பிஞ்சுகளை கொல்கிறதா ரஷ்யா? பரபரப்பு புகார்!
கீவ் : உக்ரைன் மீதான போரின் போது பள்ளிக் கூடங்கள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தி வருவதாக கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்து வரும் நிலையில் அதனை முற்றிலும் தடுக்க வேண்டும் என ரஷ்யாவை ஐ.நா சபை வலியுறுத்தியுள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர்தொடுத்து 75 நாட்களுக்கும் மேலாக ஆகியுள்ள நிலையில் நாளுக்கு நாள் அங்கு போர் தீவிரமாகி வருகிறது. இதுவரை சுமார் 45 லட்சம் மக்கள் போர் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.
உக்ரைன் நாட்டின் மீதான போரில் அப்பாவி பொதுமக்கள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும், சுமார் 5 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தகவல் வெளியிட்டடுள்ளது.

உக்ரைன் போர்
இந்நிலையில் ரஷ்ய இன அழிப்பில் ஈடுபட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டி வருகிறார். இதனிடையே உக்ரைன் நாட்டில் ரஷ்யா ராணுவத்தின் படையெடுப்பிற்குப் பின்னர் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த அனுமதி அளிக்கும் சிறப்பு தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் சிறப்பு அமர்வு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 33 நாடுகளும் எதிராக 2 நாடுகளும் வாக்களித்தன. 12 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐநாவில் தீர்மானம்
இந்த தீர்மானத்தின் மீதான சிறப்பு அமர்வில் பேசிய ஐநாவுக்கான இந்திய தூதர் ரவீந்திரா உக்ரைன்-ரஷ்யா மோதல் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு உறுதியானது மற்றும் நிலையானது என்று தெரிவித்தார். இரு தரப்பினரும், போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறது என கூறிய அவர், உக்ரைன் மக்களின் மனித உரிமைகள் மற்றும் பாதுகாப்பிற்கு, இந்தியா தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகவும், இந்த போரின் தொடக்கத்தில் இருந்தே, அமைதி பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியான நடவடிக்கைகளை இந்தியா வலியுறுத்தி வருகிறது என்றும் குறிப்பிட்டார்.

ஜெலன்ஸ்கி கோரிக்கை
ஐநாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், ரஷ்ய நாட்டின் அதிபர் விளாடிமிர் புதினுடன் பேச தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இத்தாலி நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு பேட்டி அளித்த ஜெலன்ஸ்கி, "ரஷ்ய ராணுவம் எங்கள் நிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் ரஷ்யா மீது படையெடுக்கவில்லை, ரஷ்யா தான் எங்கள் நாட்டை ஆக்கிரமிக்க முயல்கிறது" என்றார்.

பள்ளிகள் மீது தாக்குதல்
இந்நிலையில் உக்ரைன் நாட்டில் பள்ளிகள் மீது குண்டுகள் வீசுவது நிறுத்தப்பட வேண்டும் என ஐநா சபை ரஷ்யாவை வலியுறுத்தி உள்ளது. ராணுவ நோக்கங்களுக்காக பள்ளிகளை பயன்படுத்துவது கண்டித்தது என்றும், உக்ரைனில் நூற்றுக்கணக்கான பள்ளிகள் கனரக பீரங்கி மற்றும் ஏவுகணைகளால் தாக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் வசிக்கும் பகுதிகளில் வெடிகுண்டுகள் வெடித்து சிதறுவதாகவும்
ஐநா குழந்தைகள் நிதிய துணை நிர்வாக இயக்குனர் உமர் அப்டி குற்றம் சாட்டி உள்ளார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications